களவியற் காரிகை உரை

(களவியற்காரிகை உரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

களவியற் காரிகை உரை என்பது 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். களவியல் நூலுக்குப் பின்னர் அதனைத் தழுவிக் கட்டளைக்கலித்துறை யாப்பால் ஆன அகப்பொருள் நூல் ஒன்று உரையுடன் பயிலப்பட்டுவந்தது. இதில் இலக்கணம் கூறும் கட்டளைக் கலித்துறைப் பாடல்களும், அவற்றிற்கான உரைகளும் உள்ளன. நூலும் உரையும் ஒருவரே செய்தார் என்னும் கருத்து நிலவுகிறது.

  • கட்டளைக்கலித்துறையைக் காரிகை எனக் குறிப்பிடுவது ஒரு வழக்கம்.

உரையில் மேற்கோள் பாடல்கள் பல இருந்தன. உரையுடன் கூடிய இந்த நூல் அடியோடு அழிந்துபோகும் நிலையில் இருந்த காலத்தில் வையாபுரிப்பிள்ளை இதனைப் பதிப்பித்து வெளியிட்ட காலத்தில் [1] இதற்குக் களவியற்காரிகை என்னும் பெயரைச் சூட்டினார்.

இந்நூல் அந்தாதியாக அமைந்துள்ளது. தமிழ்நெறி விளக்கம் பொருளியல் பகுதியிலிருந்து 91 பாடல்களும், பாண்டிக்கோவை என்னும் நூலிலிருந்து 154 பாடல்களும், ஆக 416 பாடல்கள் இந்நூலின் உரையில் மேற்கோள் பாடல்களாக வருகின்றன[2]

இந்த உரையில் மேற்கோள் நூல்களாக 35 நூல்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் பலவற்றின் பெயர்கள்கூட அறிய இயலாதனவாக உள்ளன. தெரிந்தவை சில. அவை (அகரவரிசையில்)

மேற்கோள் நூல்களில் அறியப்பெறாதன

  • அகத்திணை
  • அரையர் கோவை
  • இன்னிசை மாலை
  • ஐந்திணை
  • கண்டன் அலங்காரம்
  • கிளவி மாலை
  • கிளவி விளக்கம்
  • கிளவித் தெளிவு
  • கோயிலந்தாதி
  • சிற்றெட்டகம்
  • திணைமொழி
  • தில்லையந்தாதி
  • நறையூரந்தாதி
  • பல்சந்தமாலை
  • பொருளியல்
  • மழவை எழுபது
  • வங்கர் கோவை

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. 1931
  2. இளங்குமரன், இரா., 2009. பக்.327, 328
"https://ta.wikipedia.org/w/index.php?title=களவியற்_காரிகை_உரை&oldid=1881375" இலிருந்து மீள்விக்கப்பட்டது