உலக அமைதி கோபுரம், சங்கரன்கோவில்

உலக அமைதி கோபுரம், இந்தியாவின் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வீரீருப்பு சிற்றூரில் அமைந்துள்ளது. புத்த விகாரம் மற்றும் தாது கோபுரத்துடன் கூடிய இந்த உலக அமைதி கோபுரம், சங்கரன்கோவிலுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதுவே தென்னிந்தியாவில் 100 அடி உயரத்தில் அமைந்த பெரிய உலக அமைதிக் கோபுரம் ஆகும். இந்த உலக அமைதி கோபுரம் 150 அடி விட்டமும், 100 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ளது.[1]வீரிருப்பு புத்த விகாரைக்கு அருகிலேயே புத்தர் கோயில் கட்டப்பட்டுள்ளது.கோபுரத்தில் 4 புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.[2] இங்கு நாள்தோறும் காலையும், மாலையும் 4.30 முதல் 6.30 மணி வரை வழிபாடு நடைபெறுகிறது

வரலாறு

தொகு

வீரீருப்பு கிராமத்தைச் சேர்ந்த காந்தியவாதி எம். முத்தையா மற்றும் அவரது குடும்பத்தினர், உலக அமைதி கோபுரம் கட்டுவதற்கு 2000ஆம் ஆண்டில் 5 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினர். [3]மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைதியான சூழலில் அமைந்த இந்த உலக அமைதி கோபுரத்தடியில் கௌதம புத்தரின்]அஸ்தியின் சிறுபகுதியை வைத்து, கட்டிடப்பணி 2020ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு