உலுக்னு துடுப்பாட்ட விளையாட்டரங்கம்
இந்தியாவின் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட மைதானம்
உலுக்னு துடுப்பாட்ட விளையாட்டரங்கம் (Luhnu Cricket Ground) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாசுபூரில் அமைந்துள்ளது. 1999 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தின் 16 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட வீரர்கள் சம்மு மற்றும் காசுமீர் 16 வயதுக்குட்பட்டோரை எதிர்த்து போட்டியில் விளையாடியதுதான் இந்த அரங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட முதல் போட்டியாகும். [1] 2001/02 ரஞ்சி டிராபியில் இமாச்சலப் பிரதேசம் டெல்லியுடன் விளையாடிய போது இந்த மைதானம் அதன் முதல் முதல் தர போட்டியை 2001 ஆம் ஆண்டில் நடத்தியது. அடுத்த பருவத்தில் 2002/03 ரஞ்சி கோப்பை போட்டியில் இமாச்சலப் பிரதேசம் ஐதராபாத்து அணியுடன் விளையாடிய போது மேலும் ஒரு முதல்தர ஆட்டம் நடைபெற்றது. [2] இவற்றைத் தவிர மேலும் பெரிய போட்டிகள் எதுவும் அங்கு நடத்தப்படவில்லை.
அரங்கத் தகவல் | |||
---|---|---|---|
அமைவிடம் | பிலாசுபூர், இந்தியா | ||
உருவாக்கம் | 1999 ஆட்டம் முதல் பதிவு | ||
அணித் தகவல் | |||
| |||
21 அக்டோபர் 2011 இல் உள்ள தரவு மூலம்: Ground profile |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Other matches played on Lohnu Cricket Ground, Bilaspur". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 29 October 2011.
- ↑ "First-Class Matches played on Lohnu Cricket Ground, Bilaspur". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 29 October 2011.
புற இணைப்புகள்
தொகு- ESPNcricinfo இல் உள்ள லோஹ்னு கிரிக்கெட் மைதானம்
- கிரிக்கெட் காப்பகத்தில் உள்ள உலுக்னு துடுப்பாட்ட மைதானம்