உலுதாக்
உலுதாக் ( Uludağ ), என்பது துருக்கியின் பர்சா மாகாணத்தில் (பண்டைய மைசியன் அல்லது பித்தினியன் ஒலிம்பசு பகுதி) 2,543 மீ (8,343 அடி) உயரத்தில் உள்ள ஒரு மலையாகும். துருக்கிய மொழியில், உலுதாக் என்றால் "பெரிய மலை" எனப் பொருள். பண்டைய காலங்களில், இது பித்தினியாவின் தெற்கு விளிம்பு வரை நீண்டிருந்தது. இது கிரேக்கத்தில் ஒலிம்போசு என்றும் லத்தீன் மொழியில் ஒலிம்பசு என்றும் அறியப்பட்டது. மேற்கு முனை மைசியன் ஒலிம்பசு என்றும் கிழக்கு பித்தினியன் ஒலிம்பசு [2] மேலும், பர்சா நகர மலைக்கு அருகில் இருந்த இடத்தில் இருந்து "புருசா ஆட் ஒலிம்பம்" என்று அறியப்பட்டது. [3] இடைக்காலம் முழுவதும், இது துறவிகள் மற்றும் மடாலயங்களைக் கொண்டிருந்தது.[4]கிழக்கத்திய கிறித்தவத்தின் மிகப் பெரிய துறவிகளில் ஒருவரான பைசாந்தியத் துறவியான புனித யோனிசியசு இந்த மலையில் துறவியாக வாழ்ந்தார்.
உலுதாக் | |
---|---|
ஒலிம்பசு மலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,543 m (8,343 அடி)[1] |
புடைப்பு | 1,504 m (4,934 அடி)[1] |
பட்டியல்கள் | Ultra |
ஆள்கூறு | 40°04′14″N 29°13′18″E / 40.07057°N 29.22154°E |
பெயரிடுதல் | |
மொழிபெயர்ப்பு | பெரிய மலைத்தொடர் |
பெயரின் மொழி | Turkish |
புவியியல் | |
அமைவிடம் | பர்சா மாகாணம், துருக்கி |
உலுதாக் மலையானது மர்மரா பிராந்தியத்தின் மிக உயரமான மலையாகும். இதன் மிக உயர்ந்த சிகரமான கார்டெல்தெப் 2,543 மீ (8,343 அடி) இல் அமைந்துள்ளது. வடக்கே ஏராளமான உயரமான பீடபூமிகள் உள்ளன. மலையுச்சிக்கு அருகில் கைவிடப்பட்ட வால்ப்ராம் கனிமச் சுரங்கம் உள்ளது. 1974ல் 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட சுரங்கமும் ஒருங்கிணைந்த ஆலையும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக 1989ல் மூடப்பட்டன. இப்பகுதி பனிச்சறுக்கு போன்ற குளிர்கால விளையாட்டுகளுக்கான பிரபலமான மையமாகவும், வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தேசியப் பூங்காவும் உள்ளது. மலையேற்றம் மற்றும் முகாம் போன்ற கோடைகால நடவடிக்கைகளும் பிரபலமாக உள்ளன.