உழைப்பாளர் சிலை
உழைப்பாளர் சிலை (Triumph of Labour) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னையில் எழுப்பப்பட்ட சிலையாகும். மெரீனா கடற்கரையின் வடக்கே அண்ணா சதுக்கத்தில் அமையப்பெற்றுள்ள இந்தச் சிலை, சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றது. மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட சிலைகளில் இது மிகவும் பழமையானது.[1] மே நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் முக்கிய நிகழ்விடமாகவும் உள்ளது.[2]
உழைப்பாளர் சிலை | |
---|---|
ஓவியர் | தேவி பிரசாத் ராய் சௌத்தரி |
ஆண்டு | 1959 |
வகை | சிலை |
ஆக்கப் பொருள் | கல் |
இடம் | மெரினா கடற்கரை, சென்னை |
வரலாறு
தொகு1923 ஆம் வருடம் மே மாதம் தொழிலாளர் சங்கத் தலைவரான சிங்காரவேலர், மெரீனா கடற்கரையில் தொழிலாளர் உரிமைகளின் ஒப்புதலுக்காக உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இதுவே இந்தியாவில் மே தினத்தையொட்டி நடைபெற்ற முதல் கூட்டமாகும்.[2]
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின் நினைவாகவும், கடற்கரையை அழகு படுத்தும் நோக்கிலும் அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஒரு சிலையை எழுப்ப உத்தரவிட்டார். இதன் பேரில் அரசு கவின்கலைக் கல்லூரி முதல்வர் தேவி பிரசாத் ராய் சௌத்தரி, நான்கு தொழிலாளர்கள் கடின உழைப்பில் ஈடுப்பட்டிருக்கும் வடிவில் கல்லில் சிலையைச் செதுக்கினார். கல்லூரிக் காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு மாதிரியாக இருந்தனர்.[3]
1959 ஆம் வருடம் ஜனவரி 25 அன்று ஆளுநர் விஷ்ணுராம் மேதியால் திறந்து வைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Srikanth, R. (30 October 2011). "A stroll could be a learning experience too". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/article2581222.ece. பார்த்த நாள்: 1 February 2012.
- ↑ 2.0 2.1 Krishnan, Ananth (2 May 2008). "Even after 85 years, the demands remain the same". The Hindu (Chennai: The Hindu) இம் மூலத்தில் இருந்து 5 மே 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080505073531/http://www.hindu.com/2008/05/02/stories/2008050252830500.htm. பார்த்த நாள்: 1 Feb 2012.
- ↑ AKILA KANNADASAN (August 25, 2013). "Work of Labour". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/work-of-labour/article5055544.ece. பார்த்த நாள்: August 29, 2013.