உஷாதேவி போசுலே

உஷாதேவி நரேந்திர போசுலே (Ushadevi Bhosle) இந்தியக் கணிதவியலாளர், கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இயற்கணித வடிவியலில் நிபுணத்துவம் பெற்றவர்.[1] இவர் மூட்டைகளின் மாடுலி இடைவெளிகளில் ஆய்வு செய்தார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

போசுலே 1969-ல் இளமறிவியல் பட்டமும் முதுநிலைப் பட்டத்தினை 1971-ல் முறையே புனே பல்கலைக்கழகம், சிவாஜி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெற்றார்.[1] டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் 1971-ல் முதுநிலை படிப்பைத் தொடங்கிய போசுலே 1980-ல் தனது ஆய்வு வழிகாட்டியான எஸ். இரமணனின் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

1971 முதல் 1974 வரை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் ஆராய்ச்சி உதவியாளராகத் தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1974 முதல் 1977 வரை டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் ஆய்வு இணையர் II-வாக ஆனார். பின்னர், இதே நிறுவனத்தில் 1977-1982-ல் ஆராய்ச்சியாளராகவும், 1982-1990-ல் உறுப்பினராகவும், 1991-1995-ல் ஆசிரியராகவும் ஆனார். டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில்1995 - 1998 வரை இணைப் பேராசிரியராகவும், 1998-2011 வரை பேராசிரியராகவும், 2012-2014-ல் மூத்த பேராசிரியராகவும் பணியாற்றினார்.

போசுலே பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ராஜா ராமண்ணா சகாவாக 2014 - 2017 வரை பணியாற்றினார். இவர் சனவரி 2019 முதல் பெங்களூரில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் இந்தியத் தேசிய அறிவியல் கழக மூத்த அறிவியலாளர் ஆனார்.

உறுப்பினர்

தொகு

போசுலே அறிவியல் கழகம், தேசிய அறிவியல் கழகம், பன்னாட்டுத் தேசிய அறிவியல் கழகம் மற்றும் வி. பி. ஏ. சி. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.[1] போசுலே இத்தாலியின் கோட்பாட்டு இயற்பியல் பன்னாட்டு மையத்தின் மூத்த துணையாளராகவும் இருந்தார்.[1] போசுலே இந்தியத் தேசிய அறிவியல் அகாதமி, தில்லி, இந்திய அறிவியல் அகாதமி, பெங்களூர் மற்றும் இந்தியாவின் அலகாபாத்தில் உள்ள தேசிய அறிவியல் அகாதமி ஆகியவற்றின் சக உறுப்பினராக இருந்தார்.[2][3][1]

ஆய்வுக் கட்டுரைகள்

தொகு

போசுலே இதுவரை 66 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.

விருதுகளும் கௌரவங்களும்

தொகு

போசுலேக்கு 2010-ல் ஸ்திரீ சக்தி அறிவியல் சம்மான் மற்றும் இராமசுவாமி அய்யர் நினைவு விருது 2000-ல் வழங்கப்பட்டது.[1]

வாழ்க்கை

தொகு

போசுலே கணிதம் தவிர, இவரது வரைதல், ஓவியம், வாசிப்பு மற்றும் இசையில் ஆர்வமுடையவர். போசுலே தற்போது, மும்பையில் வசிக்கிறார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "INSA :: Indian Fellow Detail". insaindia.res.in. Archived from the original on 2019-02-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
  2. "The National Academy of Sciences, India - Founder Members". Nasi.org.in. Archived from the original on 16 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018.
  3. "INSA". Archived from the original on 12 August 2016. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷாதேவி_போசுலே&oldid=3672997" இலிருந்து மீள்விக்கப்பட்டது