உஷா உபாத்யா
உஷா கன்ஷ்யாம் உபாத்யாய் (Usha Upadhyay)(பிறப்பு 7 சூன் 1956) இந்தியாவின் குசராத்தைச் சேர்ந்த ஒரு குசராத்தி எழுத்தாளர்.
உஷா உபாத்யா | |
---|---|
உஷா உபாத்யா சனவரி 2015-இல் | |
பிறப்பு | உஷா கன்ஷ்யாம் உபாத்யா 7 சூன் 1956 பவநகர், குசராத்து, இந்தியா |
தொழில் | Writer, poet and professor |
மொழி | குஜராத்தி |
கல்வி | முதுகலை, முனைவர் |
வாழ்க்கை
தொகுஉஷா 7 சூன் 1956 அன்று பாவ்நகரில் பிறந்தார்.[1][2] இவர் குசராத்தியில் முதுகலைப் பட்டத்தினை முடித்த பின்னர் முனைவர் பட்டம் பெற்றார். இவர் அகமதாபாத்தில் உள்ள குஜராத்தி வித்யாபிடத்தில், குஜராத்தி துறையின் தலைவராக பணியாற்றுகிறார். இவர் குசராத்தி எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.[2]
வேலை
தொகுநாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் கதைகள் பல உஷா எழுதியுள்ளார். ஜல் பில்லோரி (1998), அருந்ததினோ தாரோ (2006) மற்றும் ஷியாம் பங்கி ஆவ் ஆவ் (2013) ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள் ஆகும். மஸ்திகோர் மணியோ (2004) என்பது இவரது ஓரங்க நாடகங்களின் தொகுப்பாகும்.[1] இவர் ஏக் ஹதி ரூபா (1999) என்ற குழந்தைகளுக்கான கதையை எழுதியுள்ளார்.
இக்ஷித் (1990), சாகித்ய சன்னிதி (1998), அலோக்பர்வா (2005), சம்ப்ரத் குஜராத்தி சாஹித்யா (2008), அக்ஷர்னே அஜ்வாலே (2009), குஜராத்தி சன்ஷோதன்-சம்பதன் (2009) ஆகியவை இவரது விமர்சனப் படைப்புகள். ஆதித் 15-19 (1992-1996), ஜானவி ஸ்மிருதி - 2,3 (1996, 1997), குஜராத்தி சாயன் (1999, 2000), சர்ஜன் பிரக்ரியா அனே நரிசெத்னா (2006), குஜராத்தி லேகிகோனி பிரதிநிதி வர்தாவோ (2006) ஆகியவற்றைத் தொகுத்துள்ளார். லேகிகோனா பிரதிநிதி நிம்பந்தோ (2006), குஜராத்தி லேகிகோனா பிரதிநிதி ஆத்மகத்யா (2006), [1] [3] மாத்ருபாஷானு மஹிமகயான் (2010), ஊர்மிகவி நனாலால் (ஆராய்ச்சி, 2012), கபீர்னா அமர்சுத்ரோ . வடலி சரோவர் (1999)[1][3] மற்றும் கவிவர் ராஜேந்திர ஷா அவுர் உனகி கவிதா (2003, இந்தி ) ஆகியவை இவரது மொழிபெயர்ப்பு நூல்களாகும். குஜராத்தி சாஹித்யனோ கியான் சம்வாத் - நிம்பந்தோ (2006, 2012), ஷுன்யதாமா புரேலா தரியானோ தர்காட் (2007) மற்றும் ராதாகிருஷ்ண வினா பிஜு போல் மா (2007) ஆகியவை இவரது இதர படைப்புகளாகும்.[1][3]
உஷாவின் கவிதைகள் ஒடியா, பெங்காலி, கன்னடம், இந்தி, சமசுகிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[2]
விருதுகள்
தொகுகுசராத்தி சாகித்திய கழகத்தின் பதுபாய் உமர்வாடியா பரிசும், பாகினி நிவேதிதா பரிசும், லக்னோவின் உத்தரப் பிரதேச இந்தி சன்ஸ்தானால் சவுஹர்த் சம்மான் விருதும் உஷாவிற்கு வழங்கப்பட்டுள்ளன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ (in குஜராத்தி). Parshwa Publication.Brahmabhatt, Prasad (2010). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ [History of Modern Gujarati Literature – Modern and Postmodern Era] (in Gujarati). Ahmedabad: Parshwa Publication. pp. 147–148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5108-247-7.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Matari, Jalan (July 2014). "ગઝલ કોકિલા ઉષા ઉપાધ્યાય". Kumar (magazine) (Kumar Trust) 90 (1039): 52. https://archive.org/stream/Kumar1039/Kumar#page/n51/mode/2up.
- ↑ 3.0 3.1 3.2 "ઉષા ઉપાધ્યાય" (in குஜராத்தி). Gujarati Sahitya Parishad. பார்க்கப்பட்ட நாள் 2018-04-11."ઉષા ઉપાધ્યાય" [Usha Upadhyay]. gujaratisahityaparishad.com (in Gujarati). Gujarati Sahitya Parishad. Retrieved 11 April 2018.
வெளி இணைப்புகள்
தொகு- Usha Upadhyay on GujLit