உஸ்பெகிஸ்தானில் பெண்கள்
உஸ்பெகிஸ்தானில் பெண்களின் ( women in Uzbekistan) சமூக மற்றும் சட்ட நிலைமை உள்ளூர் மரபுகள், மதம், முந்தைய சோவியத் ஆட்சி மற்றும் சுதந்திரத்திற்குப் பின்னர் சமூக விதிமுறைகளை மாற்றியமைத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.[1]
தாய்வழி சுகாதார மற்றும் கருத்தடை மருந்துகளின் கிடைக்கும் தன்மை
தொகுகருத்தடை மருந்துகள் மற்றும் தாய்வழி சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை கலந்தே இருக்கின்றன. 2003 இல் 62.3% பெண்கள் இலவச கருத்தடைகளைப் பயன்படுத்தினர்.[2][3] எனினும், ஐ.நா.வின் மதிப்பீடுகளின்படி உஸ்பெகிஸ்தானில் சுமார் 13.7% பெண்கள் தங்கள் அடுத்த கர்ப்பத்தைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த விரும்புகிறார்கள். ஏனெனில் கருத்தடை முறைகளை குறைவாக அணுகுவதால் அவ்வாறு செய்ய முடிகிறது.[4] 2000 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 20,900 மருத்துவச்சிகளே இருந்தனர்.[5]
கட்டாய கருத்தடை
தொகுஉஸ்பெகிஸ்தானில் பெண்களை கட்டாயமாக கருத்தடை செய்வது நடைமுறையில் இருப்பதாக தகவல்கள் உள்ளன.[6][7][8] 2012 ஏப்ரல் 12, அன்று பிபிசி உலக சேவை "ஒதுக்கீடு" அறிக்கை , மக்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியாக, பெரும்பாலும் அவர்களுக்குத் தெரியாமல், பெண்கள் கருத்தடை செய்யப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தியது.[9]
தற்கொலை
தொகுஉஸ்பெகிஸ்தானில் பெண்கள் மத்தியில் தற்கொலை என்பது ஒரு பொதுவான வடிவமாகும்.[10] தவறான சூழ்நிலைகளால் ஆண்டுக்கு சுமார் 500 பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று 2001ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்டது.[11]
கடத்தல்
தொகுமனித கடத்தலைக் குறைக்க அரசாங்கத்தின் சில முயற்சிகளை ஐ.நா அங்கீகரித்துள்ளது.[12] எடுத்துக்காட்டாக, கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தொலைபேசி இணைப்புகள் கிடைக்கின்றன.[13] மேலும் கடத்தலுக்கு ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.[2][3]
இருப்பினும், பெண்கள் கடத்தல் இன்னும் தொடர்கிறது. ஏனெனில் உஸ்பெகிஸ்தான் கடத்தப்பட்ட பெண்களை தருவதும் மற்றும் நுகர்வோரும் ஆகும்.[3][14] ” இரண்டு இடங்களுக்கு இடையில் தவறாமல் ஏற்படும் வர்த்தகத்தின் நீட்டிப்பாக கடத்தல் நிகழ்கிறது. பெண்கள் ஆயாக்கள், ஆசிரியர்கள் அல்லது குழந்தையை கவனிப்பவர்கள் என்ற வேலைவாய்ப்பு வாக்குறுதிகளுடன் சுற்றுலாப் பயணிகளாக அனுப்பப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் பாலியல் துறையிலேயே வேலை செய்கிறார்கள். ” [11]
பெண்களின் பொருளாதார வாய்ப்புகள்
தொகு"பொருளாதாரத்தில் பாலின பாத்திரங்கள் சோவியத் காலத்தில் மாறியது மற்றும் சுதந்திரத்தில் தொடர்ந்து மாறுகின்றன." [15] உஸ்பெக் மாநிலத்தில் பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் திட்டங்கள் உள்ளன.ஆனாலும் தொடர்ந்து பிரச்சினைகளும் உள்ளன. உதாரணமாக, தொழிலாளர் சந்தை பாலியலால் பிரிக்கப்பட்டதாகும். மேலும் பெண்களுக்கு பொதுவாக குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.[16] "உற்பத்தி அல்லாத துறையில் திறமையற்ற பணியாளர்கள் கிட்டத்தட்ட முழு பெண்களையே கொண்டுள்ளார்கள்." [2][3] ஆனாலும்,பெண்களை இரவு நேரம் அல்லது கூடுதல் நேர வேலைக்கு பயன்படுத்த முடியாது. 2003 ஆம் ஆண்டு வரை பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக அறியப்பட்ட சட்டம் எதுவும் இல்லை.[17]
ஊனமுற்ற குழந்தைகள் அல்லது பல குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் 50 வயதில் ஓய்வு பெறலாம். இது ஓய்வூதிய வயதை விட (55) ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகும்.[2]
பெண்களின் சட்ட உரிமைகள் மற்றும் அரசாங்க பிரதிநிதித்துவம்
தொகு2004ஆம் ஆண்டு நிலவரப்படி உஸ்பெகிஸ்தானின் தேர்தல் சட்டத்தில் அரசியல் கட்சிகள் குறைந்தது 30 சதவீத பெண் வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். எவ்வாறாயினும், பெண்களின் குறைவான பிரதிநிதித்துவமே அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் காணப்படுகிறது.[3]
உஸ்பெகிஸ்தானில் உலகளாவிய வாக்குரிமை உள்ளது;[2] இருப்பினும், "பொது கருத்து மையம் நடத்திய ஆய்வுகளின்படி, நகர்ப்புறத்தில் 64% மற்றும் கிராமப்புற பெண்களில் 50% ஆண்கள் அரசியல் துறையில் தங்கள் உரிமைகளை செயல்படுத்த ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதுகின்றனர்".
கட்டாய திருமணம் மற்றும் மணமகள் கடத்தல்
தொகுமணமகள் கடத்தல் மூலம் கட்டாய திருமணம் நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக கரகல்பக்ஸ்தானில் நிகழ்கிறது.[18] மணமகள் கடத்தல்கள் பொருளாதார உறுதியற்ற தன்மையுடன் பிணைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இவ்வகைத் திருமணங்கள் தடைசெய்யக்கூடிய விலையுயர்ந்தவை என்றாலும், கடத்தலின் செலவு மற்றும் மணமகள் விலை இரண்டையும் தவிர்க்கிறது.[19] சில அறிஞர்கள் குறைவான கல்வி அல்லது போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் பிரச்சினைகள் உள்ள எவராலும் விரும்பத்தகாத ஆண்கள் தங்கள் மணப்பெண்களைக் கடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.[20]
குறிப்புகள்
தொகு- ↑ "Domestic Violence in Uzbekistan" (PDF). Archived from the original (PDF) on 2013-10-21.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Convention on the Elimination of All Forms of Discrimination against Women". Un.org. பார்க்கப்பட்ட நாள் 2015-05-22.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "The United Nations Human Rights Treaties". Bayefsky.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-22.
- ↑ "United Nations Statistics Division". Unstats.un.org. பார்க்கப்பட்ட நாள் 2015-05-22.
- ↑ "Committee on Economic, Social and Cultural Rights". Archived from the original on 2011-05-21.
- ↑ "BBC News - Uzbekistan's policy of secretly sterilising women". BBC News. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
- ↑ "BBC Radio 4 - Crossing Continents, Forced Sterilisation in Uzbekistan". BBC. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
- ↑ "Birth Control by Decree in Uzbekistan". Institute for War and Peace Reporting. Archived from the original on 21 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "BBC World Service - Assignment, Forcible Sterilisation In Uzbekistan". BBC. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
- ↑ "Institute for War and Peace Reporting | Giving Voice, Driving Change". Iwpr.net. பார்க்கப்பட்ட நாள் 2015-05-22.
- ↑ 11.0 11.1 "IWRAW Home Page". Iwraw.igc.org. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-05-22.
- ↑ UN, CEDAW: (Concluding Observations, 2006) 5
- ↑ UNFPA, State of the World Population 2006:( A Passage to Hope; Women and International Migration, 2006) 49
- ↑ "International Covenant on Civil and Political Rights". Archived from the original on 2011-04-30.
- ↑ Uzbeks. (2003). In C. R. Ember, & M. Ember (Eds.), Encyclopedia of sex and gender: men and women in the world's cultures. Dordrecht, The Netherlands: Springer Science+Business Media.
- ↑ CEDAW: Concluding Observations, 2006, Uzbekistan
- ↑ "Not A Minute More : Ending Violence Against Women" (PDF). Cities-localgovernments.org. Archived from the original (PDF) on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-05-22.
- ↑ Alena Aminova, "Uzbekistan: No Love Lost in Karakalpak Bride Thefts" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், Institute of War and Peace Reporting, 14 June 2004
- ↑ See Aminova; Jamila Sujud and Rashid Musayev, "Bride Kidnapping Returns in Central Asia, Central Asia Online, 18 January 2010
- ↑ Jamila Sujud and Rashid Musayev, "Bride Kidnapping Returns in Central Asia", Central Asia Online, 18 January 2010