ஊட்டச்சத்து மருந்து
இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. (February 2010) |
“ஊட்டச்சத்து (nutrition)” மற்றும் “மருந்தாக்கியல் (pharmaceutical)” ஆகிய இரண்டு சொற்பதங்களையும் ஒன்றாக இணைத்துக்கொண்டிருக்கும் ஊட்டச்சத்து மருந்து (Nutraceutical) என்பது நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை ஆகியவற்றை உள்ளிட்ட சுகாதார மற்றும் மருத்துவப் பலன்களை வழங்குகின்ற உணவு அல்லது உணவுத் தயாரிப்பாகும். இதுபோன்ற தயாரிப்புகள் பிரித்தெடுக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் முதலாக உணவு மிகைநிரப்பிகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள், மூலிகைத் தயாரிப்புகள் மற்றும் தானிய உணவுப்பொருட்கள், சூப்கள் மற்றும் வடிபானங்கள் போன்ற பதப்படுத்தப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் வரையிலுமாக இருக்கின்றன. உயிரணு-அளவிலான ஊட்டச்சத்து மருந்துப் பொருட்கள் குறித்த சமீபத்திய திருப்புமுனை கண்டுபிடிப்புகளால் ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் கூடுதல் மற்றும் மாற்று சிகிச்சைகளை பொறுப்புள்ள மருத்துவப் பயிற்சியாக மாற்றுவது குறித்த மருத்துவ ஆராய்ச்சிகளிலிருந்து கிடைக்கும் மதிப்பீட்டுத் தகவலுக்கான மாதிரி வடிவத்தை உருவாக்கியிருக்கின்றனர்.[1] ஊட்டச்சத்து மருந்து என்ற சொற்பதத்தை உண்மையில் நியூ ஜெர்ஸி, கிராஃபோர்டில் உள்ள புத்துருவாக்க மருந்து மையத்தின் (எஃப்ஐஎம்) நிறுவனத் தலைவரான டாக்டர். ஸ்டீபன் எல். டிஃபெலிஸ் கண்டுபிடித்தார்.[2] இந்த சொற்பதம் டாக்டர். டிஃபெலிஸால் உருவாக்கப்பட்டதிலிருந்து இதனுடைய பொருளை பின்வருமாறு விவரிக்கின்ற ஹெல்த் கனடா நிறுவனத்தால் இது மேம்படுத்தப்பட்டது: உணவுகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்ற அல்லது சுத்தகரிக்கப்படுகின்ற ஒரு தயாரிப்பும், பொதுவாக உணவுடன் தொடர்புகொண்டிராத வகையில் மருந்து வடிவத்தில் விற்கப்படுவதுமான இது உடலியல் பலனைக் கொண்டிருப்பதாகவோ அல்லது நாள்பட்ட நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதாகவோ நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உதாரணங்கள்: பீட்டா-கேரட்டின், லைகோபீன்[3][3] மெரியம்-வெப்ஸ்டர் அகராதியில் ஊட்டச்சத்து மருந்து என்பதற்கான வரையறை பின்வருமாறு இருக்கிறது: சுகாதாரப் பலன்களை வழங்கும் ஒரு உணவுப் பொருள் (செறிவூட்டப்பட்ட உணவு அல்லது உணவு மிகைநிரப்பி). ஊட்டச்சத்து மருந்துகள் மருந்தாக்கியல் மருந்துகளைப் போன்ற ஒரேவிதமான சோதனை மற்றும் நெறிமுறைகளுக்கு உள்ளாவதில்லை.[2] நுகர்வோர் கல்வியில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் இணைந்து பணிபுரியும் அமெரிக்க ஊட்டச்சத்து மருந்து கூட்டமைப்பு தயாரிப்புகள், தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பங்களிப்புகள் சார்ந்த விஷயங்களுக்கான தரநிலைகளை உருவாக்கியிருக்கிறது. தங்களுடைய தயாரிப்புகள் குறித்து எச்சரிக்கைக் கடிதங்களைப் பெறும் உணவு மிகையளிப்பு நிறுவனங்களின் பட்டியலை எஃப்டிஏ வழங்குகிறது.[4]
சந்தையும் தேவையும்
தொகுஏறத்தாழ அமெரிக்க மக்கள்தொகையினரில் மூன்றில் ஒரு பங்கினர் குறைந்தது ஒரு வகை ஊட்டச்சத்து மருந்து தயாரிப்பையாவது பயன்படுத்துகின்றனர். குறைவான பக்க விளைவுகளுடன் விரும்பத்தகுந்த மருத்துவ முடிவுகளை நிறைவேற்றுதற்கான முயற்சியாக மற்ற மருத்துவப் பொருட்களோடு ஒப்பிடுகையில் ஊட்டச்சத்து மருந்துகளின் பயன்பாடு பெரும் பொருளாதார வெற்றியைப் பெற்றிருக்கிறது. மருந்தாக்கியல்களுக்கும் மேலாக ஊட்டச்சத்து மருந்துகளின் கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பிற்கு மருந்தாக்கியல் மற்றும் உயிர்தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னுரிமையளிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. ஊட்டச்சத்து மருந்துகளின் மூலாதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கு தங்களை ஒப்புவித்துள்ள மருந்தாக்கியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப நிறுவனங்களாக மன்சாண்டோ(செயிண்ட். லூயிஸ், எம்ஓ), அமெரிக்கன் ஹோம் பிராடக்ட்ஸ்(மேடிஸன், என்ஜே), டுபோண்ட்(வில்மிங்டன்,டிஇ), அபோட் லேபாரட்டரிஸ்(அபோட் பார்க், ஐஎல்), வார்னர்-லம்பார்ட்(மோரிஸ் பிளைன்ஸ்,என்ஜே), ஜான்ஸன் & ஜான்ஸன்(நியூ புரூஸ்வின்க்,என்ஜே), நோவார்டிஸ்(பேஸல்,சுவிட்சர்லாந்து),மெடாபோலக்ஸ்(ஹேவார்ட்,சிஏ), ஜென்சாம் டிரான்ஸ்ஜெனிக்,பிபிஎல் தெராபடிக்ஸ், மற்றும் இண்டர்நியூரான்(லெக்ஸிங்டன்,கேஒய்) ஆகியவை இருக்கின்றன.[5] அமெரிக்காவில் உள்ள ஊட்டச்சத்து மருந்து தொழிலின் மதி்ப்பு 86 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த எண்ணிக்கை ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் சற்றே அதிகரித்து காணப்படுகிறது, இந்த அதிகரிப்பு 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த வருடாந்திர உணவு விற்பனையி்ல் ஏறத்தாழ கால் பங்கை குறிக்கிறது - 47 சதவிகித ஜப்பானியர்கள் ஊட்டச்சத்து மருந்தை நுகர்கின்றனர்.[6] குறிப்பிட்ட நிதிநிலைகள் இல்லாதபோதிலும் இந்த சந்தை சீராக வளர்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஊட்டச்சத்து மருந்துகளின் வளர்ச்சிக்கான ஒரு சாத்தியமுள்ள விளக்கமாக பிறப்பு விகித அதிகரிப்பு குறிப்பிடப்படுகிறது. சராசரி வயதுள்ள குடிமகன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது மக்கள்தொகையினர் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்துவது அதிகரிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டின் பாதியில் 50 வயதுள்ள அமெரிக்கர்கள் 142 மில்லியன் என்ற அளவிற்கு இருப்பார்கள் என்று 400 மில்லியன் குடிமகன்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.[7]
மரபணு தயாரிப்புகள் சந்தையில் நுழையும்போது ஊட்டச்சத்து மருந்துகளின் விலை வீழ்ச்சியுறலாம் என்றாலும் இந்தத் தயாரிப்புகளை மக்கள் சார்ந்திருப்பதும் அவற்றின் கிடைப்புத்தன்மை அதிகரிப்பதும் இந்த சந்தையின் வளர்ச்சி நிலைத்திருக்கும் என்பதையே குறிப்பிடுகிறது.
மருந்தாக உணவு
தொகுஎகிப்தியர்கள், சீனர்கள் மற்றும் சுமேரியர்கள் நோய் தடுப்பு சிகிச்சைக்கான மருந்தாக உணவுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை வழங்கிய நாகரீகத்தினருள் சிலராவர். உணவு மருத்துவப் பலன்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேடப்பட்டு வந்திருக்கிறது என ஆவணங்கள் குறி்ப்பிடுகின்றன.[7] மக்கள் "உணவையே மருந்தாக" ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய ஹிப்போகிரேட்டஸ் சிலரால் மேற்கத்திய மருத்துவத்தின் தந்கையாக கருதப்படுகிறார்.
நவீன ஊட்டச்சத்து மருந்து சந்தை 1980 ஆம் ஆண்டுகளில் ஜப்பானில் வளர்ச்சியுறத் தொடங்கியது. ஆசியா முழுவதிலும் பல நூற்றாண்டுகளாக நாட்டு மருந்தாக பயன்படுத்தப்பட்ட மூலிகைகள் மற்றும் வாசனைப் பொருட்களுக்கு முரணாக நவீன தொழில்நுட்பத்தின் விரிவாக்கம் மற்றும் கண்டுபிடிப்போடு ஊட்டச்சத்து மருந்து தொழில் வளர்ந்திருக்கிறது.[8]
உணவு அறிவியலாளர்கள் நடத்தியிருக்கும் புதிய ஆராய்ச்சியின் மூலம் கடந்த இருபதாண்டுகளில் புரிந்துகொண்டுள்ளவற்றைக் காட்டிலும் உணவு அறிவியலைப் பற்றிய விஷயங்கள் நிறையவே இருக்கின்ற என்பதை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.[8] சமீபகாலம் வரை உணவுப் பகுப்பாய்வானது உணவின் வாசனை (சுவை மற்றும் நயத்தின் உணர்வு) மற்றும் அதனுடைய ஊட்டச்சத்து மதிப்பு (கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், நீர், உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள்) என்பது வரை மட்டுமே வரம்பிற்கு உட்பட்டதாக இருந்தது. இருப்பினும், உணவு மற்றும் சுகாதாரத்திற்கு இடையே உணவின் சேர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்த பங்காற்றலாம் என்பதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.
தாவரம், உணவு மற்றும் நுண் உயிர்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் இந்த ரசாயன சேர்மானங்கள் நீண்டகால சுகாதார மதிப்புமிக்க மருத்துவப் பலன்களை வழங்குகின்றன. இந்த ஊட்டச்சத்து மருந்து ரசாயனங்களுக்கான உதாரணங்களாக புரோபயாடிக்குகள், ஆண்டியாக்ஸிடண்டுகள் மற்றும் பைதோகெமிக்கல்கள் ஆகியவை இருக்கின்றன.
ஊட்டச்சத்து மருந்து தயாரிப்புகள் பல வருடங்களாக மாற்று மருந்தாக கருதப்பட்டு வந்திருக்கின்றன. ஊட்டச்சத்து மருந்துகள் உணவிற்கான முக்கிய மிகைப்பொருளாக ஆகிவிட்டன. உணவில் காணப்படும் இந்த ரசாயனங்கள் முறையாக பதப்படுத்தப்பட்டு சந்தையிடப்பட்டால் மிகவும் பயன்மிக்கவை என்று ஆதாரங்கள் காட்டுகின்றன.
ஊட்டச்சத்து மருந்துகளின் வகைப்பிரிப்பு
தொகுஊட்டச்சத்து மருந்துகள் என்பவை உணவில் காணப்படும் அடிப்படை ஊட்டச்சத்திற்கும் மேலாக கூடுதல் சுகாதார பலன்களை வழங்குகின்ற உணவு ஆதாரங்களிலிருந்து பெறப்படும் எந்த ஒரு தயாரிப்பையும் விளக்குவதற்கென்று பயன்படுத்தப்படுகின்ற விரிவான சொற்பதமாகும். நாள்பட்ட நோய்களைத் தடுப்பவையாக, ஆரோக்கியத்தை மேம்படுத்துபவையாக, மூப்படைவதை தாமதிக்கச் செய்வதாக மற்றும் ஆயுள் நீட்டிப்பை அதிகரிக்கச் செய்பவையாக இந்த தயாரிப்புகள் குறிப்பிடப்படுகின்றன.[9]
தங்களுடைய முத்திரைகளில் ஊட்டச்சத்து மருந்துகள் என்று காட்டுவதற்கு அனுமதிக்கப்படும் தயாரிப்புகளுக்கான நெறிமுறைகள் மிகவும் குறைவானவை. இதன் காரணமாக, இந்த சொற்பதம் வேறுபட்ட பயன்கள் மற்றும் பலன்களோடு தயாரிப்புகளை சந்தையிடுவதற்கென்று பயன்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து மருந்துகள் என்ற வரையறை மற்றும் அதுசார்ந்த தயாரிப்புகள் மூலத்தை சார்ந்தே அமைந்திருக்கிறது. மருத்துவ சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் விற்கப்படும் பல்வேறு தயாரிப்புகளிடையே வேறுபடுத்தி அறியும் விதமாக ஊட்டச்சத்து மருந்து என்ற சொற்பதம் மிகவும் தெளிவாக நிறுவப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.[5] ஊட்டச்சத்து மருந்துகள் என்ற பிரிவின் கீழ் பல்வேறு வகைப்பட்ட தயாரிப்புகள் வருகின்றன.
உணவுத்திட்ட மிகைப்பொருள்கள்
தொகுஒரு உணவுத்திட்ட மிகைப்பொருள் என்பது நீர்மம் அல்லது பொதிகள் வடிவத்தில் செறிவூட்டப்பெற்ற உணவுத் தயாரிப்புகளிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்களை உள்ளிட்ட தயாரிப்பாகும். 1994 ஆம் ஆண்டு உணவுத்திட்ட மிகைப்பொருள் சுகாதாரம் மற்றும் கல்விச் சட்டம் உணவுத்திட்ட மிகைப்பொருளைக் கொண்டிருப்பவை என்று பொதுவாக வரையறை செய்கிறது. "ஒரு உணவுத்திட்ட மிகைப்பொருள் என்பது உணவிற்கான கூடுதல் பொருளை வழங்கும் நோக்கமுள்ள உணவுத்திட்ட உட்பொருளைக் கொண்டிருக்கின்ற வாய் வழியாக எடுத்துக்கொள்ளப்படும் தயாரிப்பாகும்". இந்தத் தயாரிப்புகளில் உள்ள "உணவுத்திட்ட உட்பொருட்கள்" பின்வருவனவற்றை உள்ளிட்டிருக்கலாம்: உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள், மூலிகைகள் அல்லது பிற தாவரவகைகள், அமினோ அமிலங்கள், மற்றும் என்சைம்கள், உறுப்பு திசுக்கள், சுரப்பிகள் மற்றும் வளர்ச்சிதை மாற்றப் பொருட்கள். உணவுத்திட்ட மிகைப்பொருள்கள் சாறுகள் அல்லது செறிவூட்டப்பட்டவையாக இருக்கலாம், அத்துடன் இவை மாத்திரைகள், மருந்துப் பொதிகள், மென் களிம்புகள், களிம்புப் பொதிகள், நீர்மங்கள் அல்லது தூள்கள் போன்ற பல வடிவங்களில் காணப்படலாம்.[10]
உணவுத்திட்ட மிகைப்பொருள்கள் சந்தையிடப்படுவதற்கு முன்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (எஃப்டிஏ) அங்கீகரிக்கப்பட வேண்டியதில்லை. மிகைப்பொருள்கள் சுகாதாரப் பலன்களை வழங்குபவையாக கூறப்பட்டாலும் இந்தத் தயாரிப்புகள் வழக்கமாக தங்களுடைய முத்திரையில் பின்வரும் வாசகத்தைக் கொண்டிருக்கின்றன: “இந்த அறிவிப்பு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் மதிப்பிடப்படவில்லை. இந்தத் தயாரிப்பு நோய் அறுதியிடவோ, சிகிச்சையளிக்கவோ, குணப்படுத்தவோ அல்லது எந்த நோயையும் தடுப்பதற்கான நோக்கத்தையோ கொண்டிருக்கவில்லை.”
செயல்பாட்டு உணவுகள்
தொகுசெயல்பாட்டு உணவுகள் என்பவை நுகர்வோர்கள் நீர்மம் அல்லது மாத்திரைப் பொதி வடிவத்தில் தயாரிக்கப்பட்ட உணவுத்திட்ட மிகைப்பொருட்களை சாப்பிடுவதைக் காட்டிலும் தங்களுடைய இயற்கைய நிலைக்கு ஏற்ப செறிவான உணவுகளை உண்ண அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. செயல்பாட்டு உணவுகள் செறிவூட்டப்பட்டிருக்கலாம் அல்லது பாதுகாக்கப்பட்டிருக்கலாம், இந்த நிகழ்முறை ஊட்டச்சத்தாக்கம் எனப்படுகிறது. இந்த நடைமுறை உணவில் உள்ள ஊட்டச்சத்து உட்பொருளை உணவு பதப்படுத்துவதற்கு முன்பிருந்த நிலையோடு ஒத்த அளவுகளுக்கு மீண்டும் சேமிக்க உதவுகிறது. சிலசமயங்களில், பாலோடு உயிர்ச்சத்து டி போன்ற கூடுதல் மிகைப்பொருள் ஊட்டச்சத்துக்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.
ஹெல்த் கனடா உணவுகளை "சுத்தமான ஊட்டச்சத்து பயனைக் காட்டிலும் குறிப்பிட்ட மருத்துவ அல்லது உடலியல் பலனை வழங்குவதற்கென்று சேர்க்கப்படும் சேர்மானங்கள் அல்லது உட்பொருட்களைக் கொண்டிருக்கும் சாதாரண உணவு" என்று வரையறை செய்கிறது.[3] ஜப்பானில், செயல்பாட்டு உணவுகள் அனைத்தும் மூன்று தேவைகளை நிறைவேற்ற வேண்டும்: உணவுகள் (1) மாத்திரைப் பொதிகள், மாத்திரை அல்லது தூள் வடிவைக் காட்டிலும் இயற்கையாக தோன்றிய வடிவத்திலேயே இருக்க வேண்டும்; (2) உணவில் தினசரி சேர்த்துக்கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்; மற்றும் (3) நோயைத் தடுப்பது அல்லது கட்டுப்படுத்தும் நம்பிக்கையோடு உயிரியல் நிகழ்முறைப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.[11]
மருத்துவ உணவுகள்
தொகுமருத்துவ உணவுகள் நுகர்வோர்களுக்கு கடைகளில் கிடைக்கும் தயாரிப்புகள் அல்ல.[12] எஃப்டிஏ மருத்துவ உணவுகள் "மருத்துவரின் கண்கானிப்பின் கீழ் நுகரப்படவோ அல்லது கொடுக்கப்படும்படியோ முறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும், அத்துடன் இது தனிப்பட்ட ஊட்டச்சத்து தேவைகளுக்கான நோய் அல்லது நிலை குறித்த உணவுத்திட்ட நிர்வாகத்திற்கான நோக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு இது மருத்துவ மதிப்பீட்டின்படி நிறுவப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் கொள்கைகளின்படி அமைந்திருக்க வேண்டும்."[11]
மருத்துவ உணவுகள் வாய் அல்லது குழாய் வழி அளித்தல் மூலமாக உட்செலுத்தப்படலாம். இந்த உணவுகள் யாவும் குறிப்பிட்ட நோய்நிலையால் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கான குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைகளை எதிர்கொள்வதற்கென்று வடிவமைக்கப்பட்டவையாகும். மருத்துவ உணவுகள் மருத்துவ மேற்பார்வையின் மூலம் தீவிரமாக கண்கானிக்கப்படுகின்றன.
மருந்தாக்கியல்
தொகு"வேளாண்மை: சொற்பதங்கள், திட்டங்கள் மற்றும் விதிகளின் கலைக்களஞ்சியம்" என்ற தலைப்பில் அமெரிக்க காங்கிரஸிற்கு எழுதப்பட்ட அறிக்கையின்படி "(ஃபார்மாசூட்டிகல்ஸ் (Farmaceuticals)" என்பது வேளாண்மை (ஃபார்ம் (Farm)) மற்றும் மருந்தாக்கியல் ((ஃபார்மாசூட்டிக்கல்ஸ்) pharmaceuticals) என்பதன் மருவலாக இருக்கிறது. இது மேம்படுத்தப்பட்ட வேளாண் பயிர்கள் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படும் மருத்துவரீதியில் மதிப்புவாய்ந்த சேர்மானப் பொருள்களைக் குறிப்பிடுகிறது (சாதாரணமாக உயிர் தொழில்நுட்பத்திலிருந்து பெறப்படுவது). மருந்தாக்கியல் தொழிற்சாலைகளாக பயிர்களையும் விலங்குகளையும் பயன்படுத்துவது வழக்கமான முறைகளைக் காட்டிலும் செலவு வகையில் மிகுந்த பயன்மிக்கது என்றும் (அதாவது மூடப்பட்ட உற்பத்தி தொழிலகங்கள்) அதிக வருவாய்களில் விவசாயப் பொருட்களைத் தரக்கூடியவை என்றும் இதற்கு ஆதரவானவர்கள் நம்புகின்றனர்.
"அமெரிக்காவில் உள்ள பிரச்சினை என்னவெனில் ஃபார்மாசூட்டிக்கல்ஸ் போன்று புதிதாக தோன்றியிருக்கும் பயன்பாடுகளின் பாதுகாப்பை (மனிதர்கள், விலங்குகள், பயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான) உறுதிப்படுத்துவதற்கு உயிர் தொழில்நுட்பத்தை முறைப்படுத்தும் தற்போதைய அமைப்பு போதுமானவையா என்பதே... ஃபார்மாசூட்டிக்கல்ஸ் என்ற சொற்பதம் வேளாண் வட்டங்களில் மரபணுரீதியில் மேம்படுத்தப்பட்ட பயிர்கள் அல்லது விலங்குகளோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது." [13]
உதாரணங்கள்
தொகுபின்வருபவை மருத்துவப் பயன் உள்ளவையாக தெரிவிக்கப்பட்டிருக்கும் முற்றுப்பெறாத பட்டியலாகும்:
- நோயெதிர்ப்பொருள்கள்: சிவப்பு திராட்சை தயாரிப்புகளிலிருந்து பெறப்படும் ரெஸ்வெரடால்; சிட்ரஸ், தேநீர், வைன், மற்றும் கறுப்பு சாக்லேட் உணவுகளில் இருக்கும் ஃப்ளாவனாய்டுகள்; பெர்ரிக்களில் காணப்படும் ஆன்த்ரோசையானின்ஸ்
- ஹைபர்கொலஸ்ட்ரலோமியாவைக் குறைப்பவை:[14] பைஸிலியம் விதை உறைகள் போன்ற கரையக்கூடிய உணவு இழைம தயாரிப்புகள்
- புற்றுநோய் தடுப்பு: புரோகோகலி (சல்ஃபரோபேன்)
- மேம்பட்ட தமனி ஆரோக்கியம்: சோயா அல்லது தீவனப்புல் (ஐஸோஃபிளவனாய்டுகள்)
- கார்டியோவாஸ்குலர் நோய் அபாயம் குறைதல்: ஃபிளாக்ஸ் அல்லது சியா விதைகளைச் சேர்ந்த ஆல்பா-லினோலெனிக் அமிலம்
மேலும், ஜின்செங் மற்றும் பூண்டு எண்ணெய் போன்ற தாவர மற்றும் மூலிகைச் சாறுகள் ஊட்டச்சத்து மருந்துகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஊட்டச்சத்து மருந்துகள் உணவு மற்றும் மருந்தாக்கியல் தொழில்களில் முன்கலப்புகள் அல்லது ஊட்டச்சத்து அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.
பயனும் பாதுகாப்பும்
தொகுநெறிமுறை
தொகுமருந்தாக்கியல் துறை மருந்துகளைப் போன்று அல்லாமல் அமெரிக்காவிற்குள்ளேயே ஊட்டச்சத்து மருந்து தயாரிப்புகள் அனைத்தும் "உணவுத்திட்ட மிகைப்பொருள்கள்" போன்றே கிடைக்கின்றன என்பதோடு அதே முறையில் கண்கானிக்கப்படுகின்றன. உள்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்குள்ளாகவே கனடா போன்ற நாடுகளைப் போன்று அல்லாமல் பரந்த அளவிற்கான வரையறைகளானவை "ஊட்டச்சத்து மருந்துகள்" மற்றும் "உணவுத்திட்ட மிகைப்பொருள்கள்" ஆகியவற்றிற்கு இடையில் வேறுபடும் தரநிலைகள், செயல்பாடு மற்றும் பயன் ஆகியவற்றை உருவாக்குகின்றன. இந்த மேலோட்டமான நெறிமுறைக் கண்கானிப்பிற்குள்ளாகவே ஊட்டச்சத்து மருந்துகளை தயாரிக்கும் சட்டப்பூர்வமான நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு தரநிலைகள், தயாரிப்புகள் மற்றும் நுகர்வோர் பலன்களை உறுதிப்படுத்தவும் "உணவுத்திட்ட மிகைப்பொருள்களிலிருந்து" தங்கள் தயாரிப்புகளை வேறுபடுத்திக் காட்டவும் அறிவியல் ஆராய்ச்சிகளை வழங்குகின்றன.
இந்தத் தொழில்துறைக்குள்ளாக சர்வதேச இயக்கம் இருக்கும்போதிலும் தொழில்துறை அமைப்புக்கள், கல்வித்துறை மற்றும் உணவு நெறிமுறை நிறுவனங்கள் எஃப்டிஏவால் நெறிமுறைப்படுத்தப்படாத அமெரிக்காவிற்குள்ளான ஊட்டச்சத்து மருந்துகளுக்கான வரையறை மற்றும் தரநிலைகளுக்கான குறிப்பிட்ட சட்ட மற்றும் அறிவியல்பூர்வ தேவைகளை வரையறுத்திருக்கின்றன. எஃப்டிஏ இப்போதும் பல பொருள் தருகின்ற "உணவுத்திட்ட மிகைப்பொருள்கள்" என்ற சொற்பதத்தையே பல உட்பொருள்களுக்கும் அவற்றின் திறன், உற்பத்தி நிகழ்முறை, உதவிகரமான அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அதிகரிக்கும் சுகாதார பலன்கள் ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்காமல் பயன்படுத்தி வருகிறது.
2005 ஆம் ஆண்டில், தேசிய மருத்துவ கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய ஆராய்ச்சி மையம் ஆகியவை உணவுத்திட்ட மிகைப்பொருள்களை மதி்ப்பிடுவதற்கு உள்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கான மேம்பட்ட நெறிமுறையை உருவாக்க ஒரு நிபுணர் குழு ஆணையத்தை உருவாக்கின. இருப்பினும் இந்த மேம்பட்ட நெறிமுறை "ஊட்டச்சத்து மருந்துகள்" மற்றும் "உணவுத்திட்ட மிகைப்பொருள்கள்" ஆகிய இரண்டையும் வேறுபடுத்தத் தவறியது. தொடர்ந்து பரந்த வரையறையைப் பயன்படுத்துவது மற்றும் பெரிய வேறுபாடு இல்லாதிருப்பது ஆகியவற்றால் செலவு குறைவான மற்றும் அறிவியல்பூர்வ அடிப்படையைக் கொண்ட நெறிமுறையானது "ஊட்டச்சத்து மருந்துகள்" என்று சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் தயாரிப்புகள் "உணவுத்திட்ட மிகைப்பொருட்களின்" பாதுகாப்பை மதிப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டது.[15]
சர்வதேச மூலாதாரங்கள்
தொகுஉலகளாவிய சந்தையில் குறிப்பிடத்தகுந்த தயாரிப்புத் தரநிலைப் பிரச்சினைகள் நிலவுகின்றன[16] சர்வதேச சந்தையைச் சேர்ந்த ஊட்டச்சத்து மருந்துகள் உயிர்ப்பொருள் அல்லது அயற்பண்புள்ள உட்பொருட்களைப் பயன்படுத்துவதாக கூறலாம், இப்போதும் நெறிமுறை இன்மையால் தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் பயன் சமரசத்திற்கு ஆளாகிறது. பெரும் லாப நோக்கமுள்ள நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாத வெளிநாட்டுப் பொருட்களை குறைந்த தரமுள்ள அல்லது பயனற்ற உட்பொருட்களைக் கொண்டு உருவாக்கலாம்.
உயிர்ப்பொருள் கிடைப்புத்திறன்
தொகுமிகைப்பொருள் தயாரிப்பின் "உறிஞ்சு வீதம்" என்று கருதப்படும் உயிர்ப்பொருள் கிடைப்புத்திறன் என்பது பயன்மிக்க ஊட்டச்சத்து மருந்து தயாரிப்புகளை கண்டுபிடிப்பதில் உள்ள முக்கியமான சவாலாகும். ஊட்டச்சத்துக்களின் உயிர்ப்பொருள் கிடைப்புத்திறன் உணவு இயல்பான நிலையில் உண்ணப்படுவதில் அதிகமாக இருக்கிறது.[சான்று தேவை] பதப்படுத்தப்படாத உணவுகளில்கூட எல்லா உணவுகளும் உடைக்கப்பட்டு பயன்மிக்க முறையில் செரிக்கச் செய்யப்படுவதாக இல்லை. குறைவான உறிஞ்சு வீதம் உள்ள ஊட்டச்சத்து மருந்துகள் எந்தவிதமான ஊட்டச்சத்து அல்லது மருத்துவ பலன்களும் அல்லாமல் ஊட்டச்சத்துக்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு காரணமாகின்றன.
வெற்று மாத்திரை விளைவின் தாக்கம்
தொகுமருந்தாக்கியல்களைப் போன்றே ஊட்டச்சத்து மருந்துகளின் பயனுடைய ஒரு பகுதி வெற்று மருந்து விளைவுக்கு (placebo effect) காரணமாக அமையலாம். ஊட்டச்சத்து மருந்துகளைப் பயன்படுத்தும் நுகர்வோர்களின் உடல் தன்னகத்திடமிருந்தே மீட்டுக்கொள்ள முடியும் எனும்போது தாங்கள் பயன்படுத்தும் ஊட்டச்சத்து மருந்தே அதற்குக் காரணம் என்று கருதிவிடலாம்.
இதையும் பாருங்கள்
தொகு- உணவு முத்திரைகளில் உள்ள சுகாதாரக் குறிப்புகள்
- உணவுத்திட்ட மிகைப்பொருட்கள்
- ஊட்டச்சத்தாக்கம் (அல்லது உணவுச் செறிவு அல்லது பாதுகாப்பு).
- உணவு மிகைப்பொருட்கள்
- உணவில் சேர்க்கும் பொருளாக
- உணவுப் பாதுகாப்பு
- உணவுத்திட்ட மிகைப்பொருட்கள்
- உணவு பதனிடுதல்
- மருத்துவக் காளான்கள்
பார்வைக் குறிப்புகள்
தொகுThis article uses bare URLs in its references. Please use proper citations containing each referenced work's title, author, date, and source, so that the article remains verifiable in the future. Help may be available. Several templates are available for formatting. (March 2010) |
- ↑ http://www.medscape.com/viewarticle/462074
- ↑ 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2010-05-28.
- ↑ 3.0 3.1 3.2 http://www.hc-sc.gc.ca/sr-sr/biotech/about-apropos/gloss-eng.php
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-06-23. பார்க்கப்பட்ட நாள் 2010-05-28.
- ↑ 5.0 5.1 Kalra EK (2003). "Nutraceutical--definition and introduction". AAPS pharmSci 5 (3): E25. doi:10.1208/ps050325. பப்மெட்:14621960.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-23. பார்க்கப்பட்ட நாள் 2010-05-28.
- ↑ 7.0 7.1 Wildman, Robert E. C., ed. (2001). Handbook of Nutraceuticals and Functional Foods (1st ed.). CRC Series in Modern Nutrition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8734-5.[page needed]
- ↑ 8.0 8.1 Shibamoto, Takayuki; Kanazawa, Kazuki; Shahidi, Fereidoon; Ho, Chi-Tang, eds. (2008). Functional Food and Health. ACS Symposium. p. 993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8412-6982-8.
- ↑ http://www.hc-sc.gc.ca/fn-an/alt_formats/hpfb-dgpsa/pdf/label-etiquet/nutra-funct_foods-nutra-fonct_aliment-eng.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2010-05-28.
- ↑ 11.0 11.1 Hardy, G (2000). "Nutraceuticals and functional foods: introduction and meaning". Nutrition 16 (7-8): 688. doi:10.1016/S0899-9007(00)00332-4. பப்மெட்:10906598.
- ↑ Brower, V (1998). "Nutraceuticals: Poised for a healthy slice of the healthcare market?". Nature Biotechnology 16 (8): 728. doi:10.1038/nbt0898-728. பப்மெட்:9702769. https://archive.org/details/sim_nature-biotechnology_1998-08_16_8/page/728.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-02-12. பார்க்கப்பட்ட நாள் 2010-05-28.
- ↑ Weingartner, O.; Bohm, M.; Laufs, U. (2008). "Controversial role of plant sterol esters in the management of hypercholesterolaemia". European Heart Journal 30 (4): 404. doi:10.1093/eurheartj/ehn580. பப்மெட்:19158117.
- ↑ Committee on the Framework for Evaluating the Safety of the Dietary Supplements (2005). "Committee Change". Dietary Supplements: A Framework for Evaluating Safety. Institute of Medicine. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-309-09110-7.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - ↑ Hasler, Clare M. (2005). Regulation of Functional Foods and Nutraceuticals: A Global Perspective. IFT Press and Blackwell Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8138-1177-5.[page needed]