ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. ஊத்துக்குளி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஊத்துக்குளியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 84,797 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 18,987 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 128 ஆக உள்ளது. [1]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:
- அ பெரியபாளையம்
- அணைப்பாளையம்
- செங்கப்பள்ளி
- இடையபாளையம்
- கணபதி பாளையம்
- இச்சிப்பாளையம்
- கம்மாளக்குட்டை
- கருமஞ்சிறை
- கஸ்தூரி பாளையம்
- காவுத்தம்பாளையம்
- கவுண்டம் பாளையம்
- கூனம்பட்டி
- கொமாரகவுண்டன் பாளையம்
- குறிச்சி
- மொரட்டு பாளையம்
- முத்தம்பாளையம்
- நடுப்பட்டி
- நல்லிகவுண்டன் பாளையம்
- நவக்காடு
- பல்லவராயாம் பாளையம்
- புஞ்சைதளவாய் பாளையம்
- புதுப்பாளையம்
- புதூர்பள்ள பாளையம்
- ரெட்டி பாளையம்
- செங்காளி பாளையம்
- செட்டிக்குட்டை
- சின்னியகவுண்டன்வலசு
- சின்னியம்பாளையம்
- எஸ். பெரியபாளையம்
- எஸ். காத்தான்கன்னி
- சுண்டக்காம்பாளையம்
- வடுகபாளையம்
- வட்டாலபதி
- வேலம்பாளையம்
- வெள்ளியம்பதி
- வெள்ளிரவெளி
- விருமாண்டம்பாளையம்