ஊருக்கு நூறு பேர்

பி. லெனின் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஊருக்கு நூறு பேர் (Oorukku Nooru per) 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர் (ஆண்டு-1976) என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பி. லெனினால் இயக்கப்பட்ட படம். ஒரு இளங்கலைஞன் பாலன் (கௌஷிக்) சமுதாயத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு, ஊருக்கு நூறு பேர் என்ற புரட்சி அமைப்பில் சேர்கிறான். அதில் ஒரு மதகுருவை தற்செயலாகக் கொல்ல நேரிடுகிறது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இப்படம் மரணதண்டனை குறித்த விஷயங்களை அலசுகிறது.

ஊருக்கு நூறு பேர்
இயக்கம்பீம்சிங் லெனின்
தயாரிப்புலக்ஷ்மணன் சுரேஷ்
கதைபீம்சிங் லெனின், பிரகாஷ் மேனன்
இசைஅரவிந்த் ஜெயசங்கர்
நடிப்புஹான்ஸ் கௌசிக், ஜி. எம். சுந்தர்
ஒளிப்பதிவுராய் அல்ஃபோன்ஸ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்நேஷனல் பிலிம் டெவலப்பெண்ட் கார்ப்பரேஷன், லிமிடெட்.
வெளியீடு2001
ஓட்டம்97 நிமிடம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடத்தது. 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற 49 ஆவது திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் இத்திரைப்படத்திற்குக் கிடைத்தன.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Feature Film Jury of the 49th Annual Film Festival — 2002 Has Given the Following Awards:". NIC India. Archived from the original on 2007-05-23. பார்க்கப்பட்ட நாள் 2007-03-25.
  2. "49th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on அக்டோபர் 29, 2013. பார்க்கப்பட்ட நாள் March 14, 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊருக்கு_நூறு_பேர்&oldid=4112183" இலிருந்து மீள்விக்கப்பட்டது