ஊர்மிளா பாலவந்த் ஆப்தே

ஊர்மிளா பாலவந்த் ஆப்தே (Urmila Balawant Apte), 1988ஆம் ஆண்டு பாரதியஸ்ட்ரீ சக்தி அமைப்பின் இந்தியா நிறுவனர் ஆவார். இது பெண்களின் அதிகாரமளிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பாகும். ஆப்தேயின் பணிக்காக 2018-ல் அப்போதைய இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாரி சக்தி விருதினை வழங்கினார்.

ஊர்மிளா பாலவந்த் ஆப்தே
c. 2018
தேசியம்இந்தியர்
கல்விமும்பை பல்கலைக்கழகம்
பணிகணிதப் பேராசிரியர், மகளிர் அமைப்பு நிறுவனர்
அறியப்படுவதுபாரதியஸ்ட்ரீ சக்தி அமைப்பு -நிறுவனர்

வாழ்க்கை தொகு

ஆப்தே ஒரு கணிதவியலாளர் ஆவார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1969-ல் மும்பையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கணிதம் கற்பிக்க தனது கற்பித்தல் தகுதி மற்றும் முதுகலைப் பட்டத்தைப் பயன்படுத்தினார்.[1]

இவர் 1988-ல் பாரதிய ஸ்திரீ சக்தி என்ற அமைப்பினை நிறுவினார். இந்த அமைப்பு பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பு பாலின அடிப்படையில் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வரவும் அமைப்பாகும்.[2] தேசத்திற்கும் குடும்பத்திற்கும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த செயல்படுகிறது.[3]

 
ஊர்மிளா பலவந்த் ஆப்தே குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் இருந்து நாரி சக்தி விருதைப் பெற்றார்

1995 வரை பாரதிய ஸ்திரீ சக்தியின் தலைவராக ஆப்தே பணியாற்றினார். 1995ஆம் ஆண்டில் இவர் அனைத்திந்திய அமைப்புச் செயலாளராக ஆனார். இப்பதவியில் இவர் 2014 வரை பதவியிலிருந்தார். இவரது காலத்தில் பாரதிய ஸ்திரீ சக்தி அமைப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆதரவளிக்க இவர் தனது மாவட்டம் முழுவதும் பயணம் செய்தார். இந்தியாவில் உள்ள பத்து மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு கிளை உள்ளது. இந்த அமைப்பில் மொத்தம் 33 கிளைகள் உள்ளன. 2014 முதல் இவர் பாரதிய ஸ்திரீ சக்தியின் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருந்தார்.[1]

2018ஆம் ஆண்டில் பாரதிய ஸ்திரீ சக்தி நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது.[4] இக்கூட்டத்தில் இந்தியா முழுவதிலுமிருந்து 1,000 பிரதிநிதிகள் வந்திருந்தனர்.[5]

2018ஆம் ஆண்டு பன்னாட்டு மகளிர் தினத்தன்று இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.[6] புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அன்றைய குடியரசுத் தலைவர் கோவிந்தால் இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் கலந்து கொண்டார். 2018-ல் இவருடன் முப்பத்தொன்பது பேர் அல்லது அமைப்புகள் கௌரவிக்கப்பட்டன/ர்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Smt. Urmila Apte – Bharatiya Stree Shakti" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
  2. "Urmila Balwant Apte - Nari Shakti Awardee 2017 - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
  3. "Meet Ms. Urmila Balawant Apte, #NariShakti Puraskar 2017 awardee". Indian government press site. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  4. "Bharatiya Stree Shakti discusses various issues | Nagpur News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. 13 Jan 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
  5. "International Women's Day: President Kovind honours 39 achievers with 'Nari Shakti Puraskar'". The New Indian Express. IANS. 9 March 2018. https://www.newindianexpress.com/nation/2018/mar/09/international-womens-day-president-kovind-honours-39-achievers-with-nari-shakti-puraskar-1784159.html. 
  6. "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்மிளா_பாலவந்த்_ஆப்தே&oldid=3668003" இலிருந்து மீள்விக்கப்பட்டது