எகினம்
எகினம் சங்க காலத்தில் வீட்டு முற்றத்தில் வளர்க்கப்பட்ட பறவை. [1]
இதன் தோகையை எகினக்கவரி” எனக் கூறுவர். [2]
இது அன்னப்பறவையோடு சேர்ந்து விளையாடும். [3]
புலத்தி (வண்ணாத்தி) துவைத்த ஆடைபோல் தூய்மையான மயிர் கொண்டது. [4]2
இதன் மயிரை மெத்தையில் திணித்து வாடைக்காற்று வீசும் குளிர்காலத்தில் பயன்படுத்துவர். [5]8
எகினம் என்னும் சொல்லுக்கு அன்னம், கவரிமா, நாய் என்றெல்லாம் பொருள் காண்கின்றனர். [6]
தொல்காப்பியம்
தொகுதொல்காப்பியம் எகின் எனக் குறிப்பிடும் சொல் எகினத்தைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
எகின் என்னும் சொல் ஒருவகை மரத்தையும், ஒருவகை விலங்கையும் குறிக்கும் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
இளம்பூரணர் எகினங்கோடு, எகினஞ்செதிள் (எகினமரத்துச் செதிள்), எகினந்தொல் (எகின் பழத்துத் தோல்), எகினம்பூ என மரப்பெயருக்கு எடுத்துக்காட்டுத் தருகிறார். [7]
விலங்கைக் குறிக்கும்போது எகினக்கால், எகினச்செவி, எகினத்தோல், எகினப்புறம் என வரும் என அந்த உரையாசிரியர் குறிப்பிடுகிறார். [8]
இந்த எடுத்துக்காட்டு எகின் என்பது விலங்கு (பறவை அன்று) என்பதை உறுதி செய்கிறது.
எகின்தான் எகினம் என்பதாயின் எகின விலங்கின் மயிர் மென்மையானதாக மெத்தையில் திணிக்கப் பயன்பட்டது எனல் வேண்டும்.
மேற்கோள்
தொகு- ↑ ஏழகத் தகரொடு எகினம் கொட்கும் கூழூடை நல்லில் - பெரும்பாணாற்றுப்படை 326
- ↑ கண்ணகி வாழ்ந்த இல்லத்தின் முன்றிலில் “ஏழகத் தகரும், எகினக் கவரியும், தூமயிர் அன்னமும் துணையெனத் திரியும்” - சிலப்பதிகாரம் 10-5,
- ↑ நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை - நெடுநல்வாடை 91 தூவலொடு வாடைக்காற்று வீசும்போது “கூர் எயிற்று எகினம் நடுங்கும்” - நற்றிணை 132
- ↑ புலத்தி துறை விட்டு அன்ன தூமயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், (அவள் கிளியோடு பேசிக்கொண்டிருந்தாள்) - அகநானூறு 34-1
- ↑ சேரன் செங்குட்டுவனின் மனைவி கோப்பெருந்தேவி கட்டிலில், “இணைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணையணைப் பள்ளி மெத்தைமேல் படுத்திருந்தாள் - சிலப்பதிகாரம் 27-20
- ↑ பாட்டும் தொகையும், பதிப்பாசிரியர் குழு, எஸ்.ராஜம், சென்னை – 1, வெளியீடு, 1958
- ↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியல் நூற்பா 41
- ↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியல் நூற்பா 42