எக்சாபுரோமோபென்சீன்
பென்சீன் வழிப்பெறுதி
எக்சாபுரோமோபென்சீன் (Hexabromobenzene) என்பது C6Br6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். அறுபுரோமோபென்சீன் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். அரோமாட்டிக் சேர்மமான இச்சேர்மம் ஒரு பென்சீன் வழிப்பெறுதியாகக் கருதப்படுகிறது. இதன் கட்டமைப்பில் உள்ள அனைத்து ஐதரசன் அணுக்களும் புரோமின் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளன. உயர் மின்அழுத்த மின் தேக்கிகளில் தீச்சுவாலை ஒடுக்கியாக எக்சாபுரோமோபென்சீன் பயன்படுத்தப்படுகிறது. குறைந்த செலவு ஆற்றல் சேமிப்பு சாதனங்கள் மற்றும் மின்தேக்கிகள் ஆகியவற்றிற்கான கிராபீன் போன்ற மெல்லிய படலங்கள் தயாரிக்க உதவும் தொடக்க வேதிபொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எக்சாபுரோமோபென்சீன்
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
87-82-1 | |
ChemSpider | 6639 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6905 |
| |
பண்புகள் | |
C6Br6 | |
வாய்ப்பாட்டு எடை | 551.49 g·mol−1 |
தோற்றம் | ஒற்றைச்சாய்வு ஊசிகள் அல்லது வெண்நிற தூள் [1] |
மணம் | நெடியற்றது[2] |
உருகுநிலை | 327 °C (621 °F; 600 K) [2] |
0.16x10−3 மி.கி/லி (கரையாது)[1] | |
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் ஆகியவற்றில் சிறிதளவு கரைகிறது[3] |
அசிட்டிக் அமிலம்-இல் கரைதிறன் | கரையும்[3] |
பென்சீன்-இல் கரைதிறன் | 10%[4] |
குளோரோஃபார்ம்-இல் கரைதிறன் | 10%[4] |
பெட்ரோலியம் ஈதர்-இல் கரைதிறன் | 10%[4] |
மட. P | 6.07[1] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | LCSS 6905 |
GHS pictograms | [2] |
GHS signal word | அபாயம்[2] |
H302, H312, H315, H319, H332, H335, H413[1] | |
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P322, P330[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 பப்கெம் 6905
- ↑ 2.0 2.1 2.2 2.3 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ 3.0 3.1 Weast, R.C. (1979). Handbook of Chemistry and Physics (60 ed.). Boca Raton, Florida: CRC Press Inc. p. C-165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849315565.
- ↑ 4.0 4.1 4.2 Weast, Robert C.; Astle, Melvin J. (1985). CRC Handbook of Data On Organic Compounds. Vol. 1. Boca Raton, Florida: CRC Press Inc. p. 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849304002.