எக்சா அம்மீன்நிக்கல்குளோரைடு

எக்சா அம்மீன்நிக்கல்குளோரைடு (Hexaamminenickel chloride) என்பது Cl2H18N6Ni என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். உலோக அம்மீன் ஒருங்கிணைவுச் சேர்மமான [Ni(NH3)6]2+ சேர்மத்தின் குளோரைடு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. நிக்கல்(II) அயனியுடன் இணைக்கப்பட்ட ஆறு அம்மோனியா (ஒருங்கிணைப்பு வேதியியலில் அம்மீன்கள் என அழைக்கப்படுகிறது) ஈந்தணைவிகளால் நேர்மின் அயனி உருவாகிறது.[1]

எக்சா அம்மீன்நிக்கல்குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சா அம்மீன்நிக்கல்(II) குளோரைடு
வேறு பெயர்கள்
நிக்கல் எக்சா அம்மீன் குளோரைடு, எக்சா அம்மீன்நிக்கல்குளோரைடு
இனங்காட்டிகள்
10534-88-0 Y
ChemSpider 11230400
InChI
  • InChI=1S/2ClH.6H3N.Ni/h2*1H;6*1H3;/q;;;;;;;;+2/p-2
    Key: ZXZMQWZQMZHFOR-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22221640
  • N.N.N.N.N.N.[Cl-].[Cl-].[Ni+2]
பண்புகள்
Cl2H18N6Ni
வாய்ப்பாட்டு எடை 231.78 g·mol−1
தோற்றம் ஊதா நிறத் திண்மம்
அடர்த்தி 1.51 கி/செ.மீ3
உருகுநிலை சிதைவடையும்
கரைதிறன் NH3 இல் கரையும்
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் எக்சா அம்மீன்குரோமியம்(III) குளோரைடு
எக்சா அம்மீன் கோபல்ட்டு(III) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கட்டமைப்பு

தொகு

அனைத்து எண்முக நிக்கல்(II) ஒருங்கிணைவுச் சேர்மங்களைப் போலவே எக்சா அம்மீன்நிக்கல்குளோரைடிலும் ஒவ்வொரு Ni மையத்திலும் உள்ளமைக்கப்பட்ட இரண்டு இணைக்கப்படாத எலக்ட்ரான்கள் உள்ளன. இது காந்த முனைகளால் இழுக்கப்படத்தக்க இணைக் காந்தமாக உள்ளது.

தயாரிப்பு

தொகு

அமோனியாவுடன் நீரிய நிக்கல்(II) குளோரைடு சேர்மத்தைச் சேர்த்து சூடுபடுத்துவதன் எக்சா அம்மீன்நிக்கல்குளோரைடு தயாரிக்கப்படுகிறது. இது நீரற்ற நிக்கல்(II) மூலக்கூறு மூலமாகப் பயன்படுகிறது.[2]

தொடர்புடைய சேர்மங்கள்

தொகு

நிக்கலை அதன் சல்பைடு தாதுக்களிலிருந்து பிரித்தெடுப்பதற்கான ஒரு வணிக முறையில் எக்சா அம்மீன்நிக்கல்குளோரைடு உப்பு உள்ளடங்கியுள்ளது. இந்தச் செயல்பாட்டில், ஓரளவு சுத்திகரிக்கப்பட்ட தாது காற்று மற்றும் அம்மோனியாவுடன் எளிமைப்படுத்தப்பட்ட கீழ்கண்ட சமன்பாட்டுடன் விவரிக்கப்படுகிறது.:[3]

NiS + 2 O2 + 6 NH3 -> [Ni(NH3)6]SO4

மேற்கோள்கள்

தொகு
  1. Eßmann, Ralf; Kreiner, Guido; Niemann, Anke; Rechenbach, Dirk; Schmieding, Axel; Sichla, Thomas; Zachwieja, Uwe; Jacobs, Herbert (1996). "Isotype Strukturen einiger Hexaamminmetall(II)‐halogenide von 3d‐Metallen: [V(NH3)6]I2, [Cr(NH3)6]I2, [Mn(NH3)6]Cl2, [Fe(NH3)6]Cl2, [Fe(NH3)6]Br2, [Co(NH3)6]Br2, und [Ni(NH3)6]Cl2". Zeitschrift für anorganische und allgemeine Chemie 622 (7): 1161–1166. doi:10.1002/zaac.19966220709. 
  2. G. S. Girolami, T. B. Rauchfuss, and R. J. Angelici (1999) Synthesis and Technique in Inorganic Chemistry, University Science Books: Mill Valley, CA.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0935702482
  3. Kerfoot, Derek G. E. (2000). "Nickel". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a17_157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30385-4.