எக்ஸ்-37பி ஓடிவி-1
எக்ஸ்-37பி ஓடிவி-1 (X-37B OTV-1, சுற்றுப்பாதை சோதனை வண்டி 1 (Orbital Test Vehicle 1)[3] போயிங் நிறுவனம் தயாரித்த ஓர் அமெரிக்க ஆளில்லா விண்ணோடத்தின் முதல் பயணம் ஆகும். இது அட்லாசு 5 எறிகணை மீதாக ஏப்ரல் 22,2010 அன்று கேப் கெனவெராலிலிருந்து ஏவப்பட்டு தாழ் புவிச் சுற்றுப்பாதையில் இயங்கி வந்தது. சூன் 16, 2012 அன்று பூமிக்குத் திரும்பியது.
X-37B during encapsulation ahead of the OTV-1 launch | |
இயக்குபவர் | அமெரிக்க வான்படை/DARPA |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் | போயிங் (விண்கலம்) United Launch Alliance |
உந்துவண்டி | போயிங் எக்ஸ்-37பி |
திட்ட வகை | Demonstration |
ஏவப்பட்ட நாள் | ஏப்ரல் 22, 2010, 23:52 UTC[1] |
ஏவிய விறிசு | அட்லசு V 501[2] |
ஏவு தளம் | கேப் கெனவெரால் வான்படை நிலையம் |
தே.வி.அ.த.மை எண் | 2010-015A |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
வான்வெளி கோளப்பாதை | தாழ் பூமிச் சுற்றுவட்டம் |
இந்த விண்வெளியூர்தியை இயக்கி வரும் அமெரிக்க ஐக்கிய வான்படை,இது கொண்டுசென்றுள்ள தள்ளுசுமை குறித்தத் தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை."இதன் மூலம் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விண்ணிற்கு கொண்டு சென்று மீட்பதற்குத் தேவையான செய்மதி உணரிகள்,துணையமைப்புகள்,பிற தொழில்நுட்பக் கூறுகள் செயலாக்கத்தை வெளிப்படுத்தும்" என்று கூறியுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Clark, Stephen (22 April 2010). "Atlas rocket delivers Air Force spaceplane to orbit". Spaceflight Now. பார்க்கப்பட்ட நாள் 23 April 2010.
- ↑ Krebs, Gunter. "X-37B" (in English). Gunter's Space Page. பார்க்கப்பட்ட நாள் 2008-08-05.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ McDowell, Jonathan. "Issue 627". Jonathan's Space Report. பார்க்கப்பட்ட நாள் 23 April 2010.
- ↑ Lubold, Gordon (April 20, 2010). "Air Force To Launch X-37 Space Plane: Precursor To War In Orbit?". Christian Science Monitor. பார்க்கப்பட்ட நாள் 23 April 2010.