போயிங் எக்ஸ்-37
போயிங் எக்ஸ்-37 (Boeing X-37 Advanced Technology Demonstrator) என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லா காட்சி விண்விமானம் ஆகும். இவ்விண்வெளி விமானம் பூமியின் சுற்றுவட்டத்தில் இருக்கும் போதும், மற்றும் வளிமண்டல மீள்வருகையிலும் உள்ள விண்பயண நுட்பங்களை ஆய்வு செய்யும். இது மீளப் பாவிக்கக்கூடிய தானியங்கி விண்கலம் ஆகும். இது எக்ஸ்-40ஏ வின் 120% அளவில் உருவாக்கப்பட்டது. இதன் நீளம் சுமார் 29 அடி(8.9 மீ) ஆகும். இது சற்று கோணத்தில் வைக்கப்பட்ட இரு வால் துடுப்புகளைக் கொண்டது.
எக்ஸ்-37 X-37 | |
---|---|
1999 இல் எக்ஸ்-37 இன் வரைபடம் | |
வகை | விண்ணூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | போயிங் |
முதல் பயணம் | ஏப்ரல் 7, 2006 (drop test) |
தற்போதைய நிலை | Development and testing |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | நாசா/DARPA (X-37A) ஐக்கிய அமெரிக்க வான்படை (X-37B) |
முன்னோடி | போயிங் எக்ஸ்-40 |
இந்த எக்ஸ்-37 ரக விமானத் திட்டம் முதன் முதலாக 1999 ஆம் ஆண்டில் நாசாவினால் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் 2004 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. 2006 ஏப்ரல் 7 ஆம் நாள் இது முதற்தடவையாகப் சோதிக்கப்பட்டது. இதன் முதல் கன்னிப் பயணம் 2010, ஏப்ரல் 22 ஆம் நாள் ஐக்கிய அமெரிக்க வான்படையின் திட்டமாக எக்ஸ்-37பி ஓடிவி-1 என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது[1]. இக்கலம் 2010, டிசம்பர்-3-ஆம் தேதி பூமிக்குத் திரும்பியது. அப்போது, அதன் வெப்பத் தடுப்பு அமைப்பும் மீஉயர்அதிர்வெண் வேகத்தில் அதன் காற்றியக்கவியல் கட்டுப்பாட்டு செயல்திறனும் மதிப்பிடப்பட்டன.
உருவாக்கமும் மேம்பாடும்
தொகு1999-ல் இவ்வாகனத்தை வடிவமைத்து உருவாக்க போயிங் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பகத்தை நாசா தேர்ந்தெடுத்தது. இவ்வாகனம் முதலில் போயிங் பான்டம் வொர்க்ஸ்-இன் கலிபோர்னிய கிளையில் தயாரிக்கபடுவது என முடிவு செய்யப்பட்டது. நான்கு வருட காலத்தில் நாசா $109 மில்லியனும் அமெரிக்க வான்படை $16 மில்லியனும் போயிங் $67 மில்லியனும் செலவு செய்தன. 2002-ஆம் ஆண்டின் கடைசியில் $301 மில்லியனுக்கான ஒப்பந்தம் நாசாவின் விண் ஏவு முனையத்தால் கொடுக்கப்பட்டது.
செப்டம்பர் 13, 2004 அன்று எக்ஸ்-37 செயல்திட்டம் நாசாவிடமிருந்து அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் வகைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது என்றறிவிக்கப்பட்டது. நாசாவின் விண்கல ஆய்வு மனிதர்களை கொண்டு செல்லும் காலன் சார்ந்தும் அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயல்திட்டம் எக்ஸ்-37 -ஐச் சார்ந்தும் இருக்கும். இது சாலஞ்சர் விண்கல விபத்துக்குப்பிறகு அமெரிக்க எடுத்த முடிவாகும்.
முதலில் இக்கலன் வடிவமைக்கப்பட்டபோது விண்கலம் மூலம் கொண்டு செல்லப்ப்படுமாறு இருந்தது. அது சிக்கனமான வழியாக இருக்காது என டெல்டா-IV அல்லது அதற்கிணையான ராக்கெட் மூலம் ஏவப்படுமாறு வடிவமைக்கப்பட்டது. இதன் காற்றியக்கவியல் வடிவமைப்பு விண்கலங்களை ஒத்ததாகும். எனவே, குறைவான ஏற்றம்-இழுவை விகிதம் உள்ளதாக அமைந்துள்ளது.
விண் ஒத்துழைப்பு திட்ட இலக்குகளின் படி, எக்ஸ்-37 ஆனது, செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்புதல், விண் நிலையத்தில் சூரிய தகடுகள் பாதிக்கப்பட்டால் எந்திர கையால் பழுது செய்வது மற்றும் மாற்றுவது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும். மேலும் பாதுகாப்பு, தாக்குதல் விண் ஆணைகளுக்கும் உடன்படுத்தப்படும்.
வடிவமைப்பு
தொகுஇந்த விண் விமானம் பூமிக்கு திரும்புகையில் மாக்-25 வேகத்தை அடையக்கூடியது. மேலும், மேம்படுத்தப்பட்ட வெப்ப தடுப்பு அமைப்புகள், அதிநவீன கட்டமைப்பு பொருட்கள், தானியங்கி வழிகாட்டும் அமைப்பு, விமான மின்னணுவியல் போன்றவற்றை கொண்டிருக்கும். இது ராக்கெட்டைன் AR2-3 எந்திரத்தை கொண்டிருக்கும். வருங்காலத்தில் ஹைட்ரஜன் பெராக்சிட்/JP-8 எரிபொருளை உபயோகப்படுத்தும். இப்போது எக்ஸ்-37B ஒற்றை எரிபொருள் ஹைட்ரசீன் என்ஜினை பயன்படுத்துகிறது.
இதன் சரக்கு வைக்கும் இடம் பலவித சோதனைக்கான கருவிகள், மற்ற விண் தள்ளுசுமைகள் போன்றவற்றை வைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய விண்கலன் வடிவமைப்புகளிருந்து முன்பட்ட வெப்ப தடுப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இது மேம்படுத்தப்பட்ட சிலிக்கா செராமிக் ஓடுகளைப் பயன்படுத்துகிறது.
செயல்பாட்டு வரலாறு
தொகுX-37B-யின் முதல் விண்பயணம் 2010,ஏப்ரல் 22 அன்று நடைபெற்றது. கேப் கேன்வரேல் வான்படை தளத்திலிருந்து அட்லஸ்-V ஏவுவாகனம் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இப்பயணம் USA-212 என்று பெயரிடப்பட்டது. சோதனைக்காக தாழ் புவி சுற்றுப் பாதையில் சுற்ற வைக்கப் பட்டது.
அமெரிக்க வான் படை விண்பயணத்தின் சில விவரங்களை வெளியிட்டாலும் இத்திட்டம் ரகசியம் என வகைப்படுத்தப்பட்டிருப்பதால் முக்கியத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும் தொழில்முறை அல்லாத விண் பிரியர்கள், விண் விமானத்தை கண்டறிந்து அதன் செயல்பாடுகளை யூகித்துள்ளனர். விண் விமானம் பூமியை ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதாகவும் அது 39.99 டிகிரிகள் சாய்வில் உள்ள சுற்று பாதையில் 401 முதல் 422 கிலோ மீட்டர்கள் உயரத்தில் உள்ளதாகவும் அறிவித்தனர்.
சீனா டெய்லி(China daily) எனும் செய்தித்தாள், இத்திட்டம் விண் ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என எழுதியிருந்தது. க்சின்குவா செய்தி நிறுவனம்(Xinhua News Agency) இத்திட்டத்தின் ரகசிய செயல்பாடுகள் விண் ஆயுதப் போட்டிக்கு வித்திடும் எனக் கூறியிருந்தது. எனினும் இத்தகைய செய்திகளை பென்டகன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தொழில் முறை சாராத விண் ஆர்வலர்கள், X-37 விண் விமானம் விண் சார்ந்த கண்காணிப்பு மற்றும் உளவு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் என யூகித்துள்ளனர். மேலும், விண்விமானம் வடகொரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு மேலாக பறந்து செல்வதாகவும் அறிவித்துள்ளனர். ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் புவிக்கு மேல் 410 கிலோ மீட்டார் உயரத்தில், சுற்று பாதையில் மீண்டும் ஒரே இடத்தை அடைகிறது என்றும் கூறியுள்ளனர். இது வழக்கமான ராணுவ உளவு விமானங்களின் செயல்பாடுகளைப் போன்றுள்ளது.
3-6 டிசம்பர், 2010, காலத்தில் விண் விமானம் தரை இறங்கும் என அமெரிக்க வான் படை, நவம்பர்-30, 2010, அன்று அறிவித்தது. அறிவித்தவாறே டிசம்பர்-3,2010, அன்று சுற்றுப் பாதையில் இருந்து விலகி தரை இறங்கியது. அப்போது, விண் விமானத்தின் வட்டகை வெடித்தது, கீழ்ப்பக்கத்தில் மெல்லிய சேதம் ஏற்பட்டது.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Star Wars 2010? U.S. military launch space plane on maiden voyage... but its mission is top secret", Daily Mail, 23 April 2010.
வெளி இணைப்புகள்
தொகு- X-37 Fact Sheet and X-37 news on NASA.gov பரணிடப்பட்டது 2012-06-19 at the வந்தவழி இயந்திரம்
- X-37 page on designation-systems.net
- X-37 page on globalsecurity.org
- "Air Force spaceplane is an odd bird with a twisted past". Spaceflightnow.com