எசுக்காண்டினாவிய மலைகள்

எசுக்காண்டினேவிய மலைகள் (Scandinavian Mountains) அல்லது எசுகாண்டெசு (Scandes) எசுக்காண்டினேவியத் தீவகத்தின் முழுமையும் நீண்டுள்ள மலைத் தொடர். இம்மலைத் தொடரின் மேற்குப் பகுதி செங்குத்தாக வடகடல், நோர்வீயக் கடல் பகுதிகளில் இறங்கி நோர்வேயின் கடனீர் இடுக்கேரிகளை உருவாக்கியுள்ளது. வடகிழக்கில் படிப்படியாக பின்லாந்து நோக்கி வளைந்துள்ளது. வடக்கில் இவை நோர்வேக்கும் சுவீடனுக்குமான எல்லையாக உள்ளது. இறுதியில் ஆர்க்டிக் வட்டத்தில் 2,000 மீட்டர்கள் (6,600 அடி) உயரத்தை எட்டுகிறது. இந்த மலைத்தொடர் பின்லாந்தின் வடமேற்கு முனையைத் தொடுகிறது.

எசுக்காண்டினாவிய மலைகள்
வடக்கு சுவீடனில் இசுடோரா ஃபூயொபாலெ தேசியப் பூங்காவிலுள்ள அக்கா மலை
உயர்ந்த புள்ளி
உச்சிகலோபிகென், லோம், நோர்வே
உயரம்2,469 m (8,100 அடி)[1]
ஆள்கூறு61°38′11″N 08°18′45″E / 61.63639°N 8.31250°E / 61.63639; 8.31250
பரிமாணங்கள்
நீளம்1,700 km (1,100 mi)[2]
அகலம்320 km (200 mi)[2]
பெயரிடுதல்
தாயகப் பெயர்Skanderna, Fjällen, Kjølen, Köli, Skandit Error {{native name checker}}: parameter value is malformed (help)
புவியியல்
எசுக்காண்டினேவிய மலைகள்
நாடுகள்நோர்வே, சுவீடன் and பின்லாந்து
தொடர் ஆள்கூறு65°N 14°E / 65°N 14°E / 65; 14

இந்த மலைகள் மிகவும் உயரத்தை உடையவை அல்ல. ஆனால் மிகவும் செங்குத்தான பகுதிகளைக் கொண்டவை. தெற்கு நோர்வேயில் 2,469 மீட்டர்கள் (8,100 அடி) உயரமுள்ள கலோபிகென் வடக்கு ஐரோப்பிய நிலப்பகுதியிலுள்ள மிக உயரமான கொடுமுடியாகும். சுவீடியப் பகுதியில் 2,104 மீ (6,903 அடி) உயரமுள்ள கெப்னேகைசா ]] மிக உயர்ந்த கொடுமுடியாகும். பின்லாந்தில் 1,324 மீ (4,344 அடி) உயரமுள்ள ஆல்த்தி மிக உயர்ந்த கொடுமுடியாகும்.

இம்மலைத் தொடரின் வடக்கு அமைவிடமும் வட அத்திலாந்திக்குப் பெருங்கடலின் ஈரப்பசையும் இணைந்து இங்கு பல பனிப்புலங்களும் பனியாறுகளும் உருவாகியுள்ளன. உயரங்களை எட்ட எட்ட வெப்பநிலை விரைவாகக் குறைகிறது. தெற்கு நோர்வேயில் கடல்மட்டத்திலிருந்து 1500 மீட்டர்களுக்கு மேலுள்ள மேற்குச் சரிவுகளிலும் 1200 மீ மேலுள்ள கிழக்குச் சரிவுகளிலும் பொதுவாகவே நிலத்தடி உறைபனி உருவாகிறது. வடக்கு நோர்வேயின் மேற்குச் சரிவுகளில் 800 - 900 மீ மேலும் கிழக்குச் சரிவுகளில் 600 மீ மேலும் நிலத்தடி உறைபனியைக் காணலாம்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Galdhøpiggen". Nationalencyklopedin. அணுகப்பட்டது 18 July 2010. 
  2. 2.0 2.1 Lindström, Maurits "fjällkedjan". Nationalencyklopedin. அணுகப்பட்டது 18 July 2010. 
  3. http://www.cicero.uio.no/fulltext/index.aspx?id=9539