எசுந்தோவா என்பவர் முத்துகனின் மூன்றாவது மகனாவார். இவர் சகதாயி கானரசைத் தோற்றுவித்த சகதாயியின் பேரன் ஆவார். இவரது சகோதரர்கள் எசு மோங்கே மற்றும் பைதர் ஆகியோராவர். இவரது உறவினரான அல்கு மற்றும் சகோதரராகிய எசு மோங்கே ஆகிய இருவருமே சகதாயி கானரசின் கான்களாகப் பதவி வகித்தனர்.

இவரது மகன்களாகிய காரா குலேகு மற்றும் பரக் ஆகிய இருவரும் சகதாயி கான்களாகப் பதவி வகித்தனர்.

சகதாயி கானரசின் பரம்பரை

தொகு

பாபர் தான் எழுதிய பாபர் நாமாவின் 19 வது பக்கத்தில் முதல் அத்தியாயத்தில் தனது தாய் வழி தாத்தா யூனஸ் கானின் பரம்பரையைப் பின்வருமாறு விளக்குகிறார்:

"யூனஸ் கான் சகதாயி கானின் வழித்தோன்றல், சகதை கான் செங்கிஸ் கானின் இரண்டாவது மகன் (பின்வருமாறு,) யூனஸ் கான், வயிஸ் கானின் மகன், வயிஸ் கான் ஷெர்-அலி அவுக்லோனின் மகன், ஷெர்-அலி அவுக்லோன் முகம்மத் கானின் மகன், முகம்மத் கான் கிசிர் கவாஜா கானின் மகன், கிசிர் கவாஜா கான் துக்லுக்-திமுர் கானின் மகன், துக்லுக்-திமுர் கான் ஐசன்-புகா கானின் மகன், ஐசன்-புகா கான் தவா கானின் மகன், தவா கான் பரக் கானின் மகன், பரக் கான் எசுந்தவா கானின் மகன், எசுந்தவா கான் முவத்துகனின் மகன், முவத்துகன் சகதை கானின் மகன், சகதை கான் செங்கிஸ் கானின் மகன்"

அப்துல் கரிம் கானின் பரம்பரை

தொகு
மிர்சா முகம்மத் ஐதர் துக்லத்தின் கூற்றுப்படி அப்துல் கரிம் கானின் பரம்பரை
  1. செங்கிஸ் கான்
  2. சகதாயி கான்
  3. முத்துகன்
  4. எசுந்தோவா
  5. கியாசுத்தீன் பரக்
  6. துவா
  7. முதலாம் எசன் புகா
  1. துக்லுக் தைமுர்
  2. கிசிர் கோசா
  3. முகம்மத் கான் (மொகுலிசுதானின் கான்)
  4. ஷிர் அலி ஓகலன்
  5. உவைசு கான் (வைசே கான்)
  6. யூனுஸ் கான்
  7. அகமத் அலக்
  1. சுல்தான் சயித் கான்
  2. அப்துரஷித் கான்
  3. அப்துல் கரிம் கான் (எர்கந்து)


உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுந்தோவா&oldid=3759099" இலிருந்து மீள்விக்கப்பட்டது