எசுப்பானிய மாதங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எசுப்பானிய மாதங்கள்என்னும் இக்கட்டுரை கிரெகொரியின் நாட்காட்டி முறையிலான எசுப்பானிய மொழி மாதங்கள் பற்றியது. எசுப்பானிய மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால், ஆங்கிலம் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய-ஐரோப்பிய மொழிகளில் காணும் மாதப் பெயர்கள் எசுப்பானிய மாதப் பெயர்களுடன் ஒரே அடியைக் கொண்டனவாக உள்ளன. எசுப்பானிய மொழி மாதப் பெயர்கள் இலத்தீன் மொழி மூலங்களில் இருந்து பெறப்பட்டவை.
பெயர்கள்
தொகுகிரெகொரியின் நாட்காட்டியின் தமிழ் மாதப் பெயர்களும் அவற்றுக்கு இணையான எசுப்பானிய மாதப் பெயர்களும் அவற்றுக்கான தமிழ் ஒலிபெயர்ப்புக்களும் பின்வருமாறு:
- சனவரி - enero (எனேரோ)
- பிப்ரவரி - febrero (ஃபெபெரேரோ)
- மார்ச்சு - marzo (மார்சோ)
- ஏப்ரல் - abril (அபிரில்)
- மே - mayo (மாயோ)
- சூன் - junio (ஹூனியோ)
- சூலை - julio (ஹூலியோ)
- ஆகஸ்ட்டு - agosto (அகோஸ்த்தோ)
- செப்டெம்பர் - septiembre (செப்தியெம்பிரே)
- அக்டோபர் - octubre (ஒக்ட்டோபிரே)
- நவம்பர் - noviembre (நொவியெம்பிரே)
- டிசெம்பர் - diciembre (டிசியெம்பிரே)
இலக்கணம்
தொகுஎசுப்பானிய மொழி ஆண்பால், பெண்பால் என இரண்டு பால்களைக் கொண்டது. எல்லாப் பெயர்ச் சொற்களும் இவ்விரண்டு பால்களுள் ஒன்றன் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இதன்படி எசுப்பானிய மாதப் பெயர்கள் எல்லாம் ஆண்பாற் பெயர்கள் ஆகும்.
ஆங்கிலம் போன்ற சில ஐரோப்பிய மொழிகளில் மாதப் பெயர்கள் சொற்றொடர்களில் வரும்போது முதல் எழுத்து பெரிய எழுத்துக்களில் வருவது போல் எசுப்பானிய மாதப் பெயர்களின் முதல் எழுத்துக்களை பெரிய எழுத்துக்களில் எழுதுவதில்லை.
இலத்தீன் மூல மொழியோடு தொடர்பு
தொகுஎசுப்பானிய மொழியில் அமைந்துள்ள மாதங்கள் ஒவ்வொன்றும் இலத்தீன் மொழி மாத வழக்கத்தை மூலமாகக் கொண்டுள்ளன. எனவே இலத்தீன் மாதப் பெயர்களையும் எசுப்பானிய மாதப் பெயர்களையும் அருகருகே வைத்துப் பார்த்து ஒப்பிட்டுக் காண்டல் பயன்தரும்:
இலத்தீன் பெயர்கள்
தொகு- ianuarius
- februarius
- martius
- apriliis
- maius
- iunius
- iulius
- augustus
- september
- october
- november
- december