எசு. எசு. தென்னரசு
இந்திய அரசியல்வாதி
எசு. எசு. தென்னரசு (S. S. Thennarasu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவரது இயற்பெயர் சிந்தாமணி. ஒர் எழுத்தாளராகவும் இவர் அறியப்படுகிறார்.[1] 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
சிறு கதை எழுத்தாளராக எசு. எசு. தென்னரசு தமிழில் பிரபலமான சிறுகதைகளை எழுதியுள்ளார். தென்னரசு எழுதிய நூற்களை தமிழ்நாடு அரசு 2007 - 08 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கியுள்ளது.[3][4]
படைப்புகள்
தொகு- அவள் ஒரு கர்நாடகம்
- ஆனந்தபைரவி (புதினம்)
- இவர்தான் கலைஞர்
- கண்மணி (புதினம்); 1956; அருணோதயம், சென்னை.[5]
- கருணைக்கு அழிவில்லை
- குஞ்சரத்தின் கதை (புதினம்)
- கோபுரக் கலசம்
- சந்தனத்தேவன் (புதினம்)
- சந்தனமழை (நாடகம்); 1956; அருணோதயம், சென்னை.[5]
- சுமங்கிலியின் சுயசரிதம் (புதினம்)
- செம்மாதுளை (புதினம்)
- சேது நாட்டு செல்லக்கிளி
- தங்கச்சி மடம் (புதினம்)
- தலைநகரம் (நாடகம்)
- தளபதி (நாடகம்)
- துங்கபத்திரை (நாடகம்)
- தேவாலயம் (நாடகம்); 1956; அருணோதயம், சென்னை.[5]
- தைமூரின் காதலி
- நகமும் சதையும் (புதினம்)
- பாடகி (புதினம்)
- பெண்ணில்லாத ஊரிலே (சிறைச்சாலை நினைவலைகள்)
- மயிலாடும்பாறை (புதினம்) [6]
- மலடி பெற்ற பிள்ளை
- மிஸஸ்.இராதா (புதினம்)
- ராஜபவனம் (புதினம்)
- வைராக்கியம் (புதினம்)
தொகுப்பு நூல்கள்
தொகு- எஸ். எஸ். தென்னரசின் நாவல்கள்
- எஸ். எஸ். தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
பட்டங்கள்
தொகுதென்னரசிற்குப் பின்வரும் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன:
- சிறுகதை மன்னன்
- சின்னமருது
- இயற்செல்வம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Kolappan, B. (2018-08-07), "The former Chief Minister and his canine friends", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2023-11-26
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "தமிழகம். வலை தளத்தில்,எஸ்.எஸ்.தென்னரசு எழுதிய நூல்கள்". Archived from the original on 2012-06-25.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ திரு.எஸ்.எஸ்.தென்னரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
- ↑ 5.0 5.1 5.2 திராவிடநாடு, 2-9-1956, பக்.15
- ↑ இனமுழக்கம், 25-11-1960, பக்.9