எதிப 150248 (HD 150248) என்பது சூரியனில் இருந்து 87 ஒளி ஆண்டுகள் (26.6 புடைநொடிகள் ) தொலைவில் உள்ள சூரியனைப் போன்ற விண்மீனாகும். HD 150248 என்பது G-வகை விண்மீனாகவும் சூரிய இரட்டைக்கு நெருக்கமாகவும் உள்ளது. எதிப 150248 இன் ஒளியளவியல் நிறமும் சூரியனுக்கு மிக நெருக்கமாக உள்ளது; இருப்பினும், இது குறைந்த அளவிலான பொன்மங்(உலோகங்)களைக் கொண்டுள்ளது மற்றும் 7.02 என்ற தோற்றப் பொலிவுப் பருமையைக் கொண்டுள்ளது. 6.2 பில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த விண்மீன் சூரியனை விட 1.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது நிலையான எரியும் நிலையையும் கடந்துவிட்டது. எதிப 150248 விண்மீன்கள் விருச்சிகம், காவுமனை விண்மீன் குழுக்களுக்கு இடையே எல்லையில் காணப்படுகிறது.

HD 150248
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Scorpius
வல எழுச்சிக் கோணம் 16h 41m 49.80149s[1]
நடுவரை விலக்கம் -45° 22′ 07.4106″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.02[2]
இயல்புகள்
விண்மீன் வகைG3V + ?[3]
U−B color index+0.17[2]
B−V color index+0.68[2]
வான்பொருளியக்க அளவியல்
இடமாறுதோற்றம் (π)37.54 ± 0.50[1] மிஆசெ
தூரம்87 ± 1 ஒஆ
(26.6 ± 0.4 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.020[சான்று தேவை] M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.40±0.02[4]
வெப்பநிலை5,715±5[4] கெ
சுழற்சி வேகம் (v sin i)1.43±0.12[4] கிமீ/செ
அகவை7.53±0.58[4] பில்.ஆ
வேறு பெயர்கள்
CD−45°10847, HD 150248, HIP 81746
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

இன்றுவரை, சூரியனுடன் சரியான பொருத்தம் கொண்ட சூரிய இரட்டை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், சிலவிண்மீன்கள் ஒத்தவையாக இருப்பதற்கு மிக நெருங்கி வருகின்றன. இதனால் இவை வானியல் சமூகத்தால் சூரிய இரட்டையர்கள் என்று கருதப்படுகிறது. ஒரு சரியான சூரிய இரட்டை 5,778கெ வெப்பநிலை கொண்ட G2V வகை விண்மீனாக இருக்கும்; 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானதும் சூரிய பொன்மத்(உலோகத்)தன்மையும் 0.1% சூரிய ஒளிர்வு வேறுபாடு மட்டும் கொண்டிருக்கும். [5] சூரியன் போன்ற 4.6 பில்லியன் ஆண்டுகள் அகவை உள்ள விண்மீன்கள் மிகவும் நிலைத்த நிலையில் உள்ளன. குறைந்த ஒளிர்வு வேறுபாட்டிற்குச் சரியான பொன்மத்(உலோகத்தன்மை)யும் உருவளவும் மிகவும் இன்றியமையாதது. [6] [7] [8]

சூரியனுடன் ஒப்பீடு தொகு

இனங்காட்டி J2000 ஆயத்தொலைவுகள் தூரம்



</br> ( லி )
நட்சத்திரம்



</br> வகை
வெப்ப நிலை



</br> (கே)
உலோகத்தன்மை



</br> (டெக்ஸ்)
வயது



</br> ( கிர் )
குறிப்புகள்
வலது ஏறுதல் சரிவு
சூரியன் 0.00 G2V 5,778 +0.00 4.6 [9]
HD 150248 [10] 16h 41m 49.8s –45° 22′ 07″ 88 ஜி3வி 5,723 −0.04 6.2 [10]

மேலும் காண்க தொகு

  • அருகிலுள்ள விண்மீன்களின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. 
  2. 2.0 2.1 2.2 Przybylski, A.; Kennedy, P. M. (1965). "Radial velocities and three-colour photometry of 166 southern stars". Monthly Notices of the Royal Astronomical Society 131: 95–104. doi:10.1093/mnras/131.1.95. Bibcode: 1965MNRAS.131...95P. 
  3. Gray, R. O.; Corbally, C. J.; Garrison, R. F.; McFadden, M. T.; Bubar, E. J.; McGahee, C. E.; O'Donoghue, A. A.; Knox, E. R. (2006). "Contributions to the Nearby Stars (NStars) Project: Spectroscopy of Stars Earlier than M0 within 40 pc-The Southern Sample". The Astronomical Journal 132 (1): 161–170. doi:10.1086/504637. Bibcode: 2006AJ....132..161G. https://archive.org/details/sim_astronomical-journal_2006-07_132_1/page/161. 
  4. 4.0 4.1 4.2 4.3 dos Santos, Leonardo A.; et al. (August 2016), "The Solar Twin Planet Search. IV. The Sun as a typical rotator and evidence for a new rotational braking law for Sun-like stars", Astronomy & Astrophysics, 592: 8, arXiv:1606.06214, Bibcode:2016A&A...592A.156D, doi:10.1051/0004-6361/201628558, S2CID 53533614, A156.
  5. NASA, Science News, Solar Variability and Terrestrial Climate, Jan. 8, 2013
  6. University of Nebraska-Lincoln astronomy education group, Stellar Luminosity Calculator
  7. National Center for Atmospheric Research, The Effects of Solar Variability on Earth's Climate, 2012 Report
  8. Most of Earth’s twins aren’t identical, by Ethan on June 5, 2013
  9. Williams, D.R. (2004). "Sun Fact Sheet". NASA. பார்க்கப்பட்ட நாள் 2009-06-23.
  10. Porto de Mello, G. F.; da Silva, R.; da Silva, L.; de Nader, R. V. (March 2014). "A photometric and spectroscopic survey of solar twin stars within 50 parsecs of the Sun; I. Atmospheric parameters and color similarity to the Sun". Astronomy and Astrophysics 563: A52. doi:10.1051/0004-6361/201322277. Bibcode: 2014A&A...563A..52P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_150248&oldid=3852363" இலிருந்து மீள்விக்கப்பட்டது