எச். எப். ரிஸ்னா

கவிதை ஆசிரியர்

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (பிறப்பு: சனவரி 8) கவிதாயினி, தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சிநிலா ஆகிய பெயர்களில் எழுதிவரும் இலங்கை படைப்பாளியாவார்.

எச். எப். ரிஸ்னா
பிறப்புசனவரி 8
தியத்தலாவை, பதுளை, இலங்கை
தேசியம்இலங்கையர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இசுலாம்
பெற்றோர்ஹலால்தீன் , நசீஹா

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பதுளை மாவட்டம், தியத்தலாவயைச் சேர்ந்த ஹலால்தீன் - நசீஹா தம்பதியினரின் மூத்த புதல்வியான இவர் கஹகொல்லை அல்பதுரியா முஸ்லிம் மகா வித்தியாலயம், வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம், பண்டாரவளை சேர் ராசிக் பரீத் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவியாவார். இலக்கியத் துறையில் மாத்திரமன்றி கணினித் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் தகவல் தொலைத் தொடர்புத் தொழில் நுட்பத்தில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், கொழும்பு பல்கலைக் கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

இலக்கிய ஈடுபாடு

தொகு

2004 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறை ஈடுபாடு கொண்டுள்ள எச்.எப். ரிஸ்னாவின் கன்னி ஆக்கம் 'காத்திருப்பு' எனும் தலைப்பில் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் இடம்பெற்றது. அன்றிலிருந்து 300 கவிதைகளையும்,50 சிறுகதைகளையும், 80 விமர்சனங்களையும் 80 பாடல்களையும் எழுதியுள்ளார். தற்போது சிறுவர் இலக்கியத்துறையிலும் ஈடுபட்டு வருகிறார்

பிரசுரமான ஊடகங்கள்

தொகு

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நமது தூது, நவமணி, விடிவெள்ளி, எங்கள் தேசம், ஜனனி, ஓசை, மரங்கொத்தி, பூங்காவனம், மல்லிகை, ஜீவநதி, செங்கதிர், படிகள், நிறைவு, நிஷ்டை, அல் ஹஸனாத், அல்லஜ்னா, ஞானம், நீங்களும் எழுதலாம், வேகம், இருக்கிறம், பேனா, இனிய நந்தவனம் (இந்திய சஞ்சிகை) ஆகிய இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.

வானொலி, தொலைக்காட்சிகளில்

தொகு
  • சக்தி எப்.எம், பிறை எப்.எம், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியிருப்பதுடன் இவரது நேர்காணலும் நேத்ரா அலைவரிசையில் இடம் பெற்றது.
  • 2006 இல் பிறை எப்.எம் அலைவரிசையில் கவிதை கூறியிருக்கிறார்.
  • இலங்கை வானொலி முஸ்லிம் சேவை கவிதைக்களம் நிகழ்ச்சியில் இவரது கவிதை இடம்பெற்றுள்ளது.
  • 2009 ஜூலை 27ல் நேத்ரா அலைவரிசை முஸ்லிம் நிகழ்ச்சியில் கவிதை கூறியிருக்கிறார்.
  • 2011 பெப்ரவரி 13 இல் கவிஞர் திரு. சடாகோபன் அவர்களின் தலைமையில் சக்தி எப்.எம் அலைவரிசையில் கவிராத்திரி நிகழ்ச்சியில் கவிதை கூறியிருக்கிறார்.
  • 2011 நவம்பர் 07 இல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் கவிஞர் என். நஜ்முல் ஹூசைன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஹஜ் கவியரங்கம் நிகழ்ச்சியில் கவிதை கூறியிருக்கிறார்.
  • 2011 நவம்பர் 07 இல் நேத்ரா அலைவரிசை தீன்சுடர் முஸ்லிம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இலங்கையின் பிரபல பாடகரும்இ இசையமைப்பாளருமான திரு. டோனி ஹஸன் அவர்கள் இசையமைத்துப் பாடிய 'இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே' என்ற ஹஜ் பெருநாள் பாடலை எழுதியிருக்கிறார்.
  • 2012 ஆகஸ்ட் 19 இல் ஊவா எப்.எம் அலைவரிசையில் கவிதை கூறியிருக்கிறார்.

வெளியிட்ட நூல்கள்

தொகு
  • 01. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை)- 2012
  • 02. வைகறை (சிறுகதை)- 2012
  • 03. காக்கா குளிப்பு (சிறுவர் கதை)- 2012
  • 04. மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை)- 2012
  • 05. வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை)- 2012
  • 06. இதோ! பஞ்சு காய்கள் (சிறுவர் கதை)- 2012
  • 07. திறந்த கதவுள் தெரிந்தவை - ஒரு பார்வை (விமர்சனங்கள்)- 2013
  • 08. நட்சத்திரம் (சிறுவர் பாடல்கள்)- 2014
  • 09. மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) - 2015
  • 10 மழையில் நனையும் மனசு

வெளியிடவுள்ள நூல்கள்

தொகு
  • (கவிதை)
  • (பாடல்)

நேர்காணல்கள்

தொகு
  • மித்திரன் வாரமலர் - 2010 ஜனவரி 24
  • நேத்ரா அலைவரிசை உதய தரிசனம் சிறப்பு அதிதி நேர்காணல் - 2010 பெப் 03
  • எங்கள் தேசம் - 2010 ஜூலை 01 – 14
  • தினகரன் வாரமஞ்சரி செந்தூரம் இதழ் - 2011 மே 1
  • வசந்தம் தொலைக்காட்சி தூவானம் - 2012 ஜூலை 21
  • தமிழ் மிரர் வலைத்தளம் - 2012 நவம்பர் 17
  • வீரகேசரி - 2012 டிசம்பர் 09

பரிசுகள்

தொகு
  • 2011 ஆம் ஆண்டில் ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும்இ புத்தகப் பரிசும் பெற்றுள்ளார்.
  • 2011 ஆம் ஆண்டில் யாழ் முஸ்லிம் வலைத்தளம்இ இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும்இ பணப்பரிசும் பெற்றுள்ளார்.
  • 2011 ஆம் ஆண்டில் மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும்இ பணப்பரிசும் பெற்றுள்ளார்.
  • 2012 ஆம் ஆண்டில் யாஃதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டும் பத்திரமும் பணப்பரிசும் பதக்கமும் பெற்றுள்ளார்.

துணை ஆசிரியர் - பூங்காவனம்

தொகு

தற்போதுபுங்காவனம் இலக்கிய வட்டத்தின் உப தலைவராக இருக்கும் இவர் 'பூங்காவனம்' காலாண்டு சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.

அங்கத்துவம் வகிக்கும் இலக்கிய அமைப்புகள்

தொகு
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி
  • இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

இவர் பற்றிய குறிப்புக்கள்

தொகு
  • சுடர் ஒளி பத்திரிகையின் 'உணர்வுகள்' பகுதி - 2008 ஏப்ரல் 20-26
  • செங்கதிர் - 2008 செப்டம்பர் இதழ்
  • மித்திரன் கலாவானம் - 2009 நவம்பர் 01 (அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பா)
  • ஞானம் - 2010 பெப்ரவரி இதழ்
  • மித்திரன் கலாவானம் - 2010 மே - 16 (க. கோகிலவாணி)
  • தினகரன் கதம்பம் - 2011 மார்ச் 27
  • முத்துக்கமலம் இணையத்தளம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

இவரது வலைப்பூக்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

தமிழ் மிர்ரர் வலைத்தளம் - http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/kalaigarkal/52499-2012-11-11-10-31-26.html#comments[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எப்._ரிஸ்னா&oldid=3791749" இலிருந்து மீள்விக்கப்பட்டது