எச். லல்லுங்முவானா

இந்திய அரசியல்வாதி

பு எச். லல்லுங்முவானா (Pu H. Lallungmuana) என்பவர் மிசோரத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார், இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான 12வது மக்களவையில் சுயேச்சை வேட்பாளராக மிசோரம் மக்களவை உறுப்பினராக இருந்தார். [1]

எச். லல்லுங்முவானா
மக்களவை உறுப்பினர்
முன்னையவர்சி. சில்வெரா
பின்னவர்வன்லாசவாமா
தொகுதிமிசோரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 செப்டம்பர் 1944 (1944-09-01) (அகவை 79)
பியாடே, மிசோரம்
அரசியல் கட்சிசுயேச்சை
துணைவர்கே. காவ்ல்ராம்தங்கி
பிள்ளைகள்மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள்
வாழிடம்அய்சால்
As of 15 September, 2012
மூலம்: [1]

கல்வி தொகு

முனைவர் பட்ட ஆய்வு வரை தனது கல்வியை முடித்த இவர், 2008 வரை பச்சுங்கா பல்கலைக்கழகக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியுள்ளார்.[2]

அரசியல் தொகு

லாலுங்முவானா 1998 இல் மிசோ மக்கள் மாநாடு மற்றும் ஜோரம் தேசியவாதக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போது இவர் தனக்கு அடுத்து வந்த காங்கிரஸ் போட்டியாளரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜான் லால்சங்சுவாலாவை 41 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Biographical Sketch Member of Parliament XII Lok Sabha". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.
  2. "Dr. H. LALLUNGMUANA CHANCHIN". பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._லல்லுங்முவானா&oldid=3876754" இலிருந்து மீள்விக்கப்பட்டது