எடுவர்டு பூக்னர்
எடுவர்டு பூக்னர் (Eduard Buchner, மே 20, 1860 – ஆகஸ்ட் 13, 1917) ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும்[1] நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார். இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டதற்காக, 1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்[2].
எடுவர்டு பூக்னர் Eduard Buchner | |
---|---|
பிறப்பு | 20 மே 1860 மியூனிக் |
இறப்பு | 13 ஆகத்து 1917 (அகவை 57) போக்சனி |
படிப்பு | பேராசிரியர் |
படித்த இடங்கள் |
|
பணி | பல்கலைக்கழகப் பேராசிரியர் |
வேலை வழங்குபவர் |
|
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு, Liebig Medal |
எடுவர்டு பூக்னர் ஜெர்மனியில் மியூனிக் நகரில் பிறந்தார். இவருடைய தந்தையார் மருத்துவராகவும் குற்றவியலில் துப்பு கண்டுபிடிக்கும் மருத்துவராகவும் இருந்தார். எடுவர்டு பூக்னர் அவர்கள் 1884ல் மியூனிக் நகரில் அடால்ஃப் வான் பேயரிடம் (Adolf von Baeyer ) வேதியியலும் பேராசிரியர் சி. வான் நேகெலி (C. von Naegeli) அவர்களிடம் தாவரவியலும் பயிலத் தொடங்கினார். இவர் 1888ல் பெர்லின் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Eduard Buchner - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ ""Eduard Buchner - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)