எட்ச்வொர்தியா கார்த்னெரி

எட்ச்வொர்தியா கார்த்னெரி (தாவர வகைப்பாட்டியல்: Edgeworthia gardneri, பொதுவாக இந்திய காகித மரம்,[2] அல்லது நேபாள காகித புதர்;நேபாளி : अर्गेली (Argelee) )[3]) என்றழைக்கப்படும் இத்தாவரம், தைமலேசியே குடும்பத்தைச் சேர்ந்ததாகும். மூன்று முதல் நான்கு மீட்டர் (10-13 அடி) உயரம் வரை வளரும் சிறிய பசுமையான புதர்ச்செடியான[4] இதன் பழுப்பு நிற சிவப்பு தண்டு மூலம் இதை பிற தாவரங்களிலிருந்து வேறுபடுத்தி அறியலாம். இதன்மலர்கள், ஆண் மற்றும் பெண் உறுப்புகளைக் கொண்டுள்ள இருபாலுயிரியாகும்.

எட்ச்வொர்தியா கார்த்னெரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. gardneri
இருசொற் பெயரீடு
Edgeworthia gardneri
(Wall.) Meisn.[1][2]
வேறு பெயர்கள் [1][2]

வாழிடம்

தொகு

பூட்டானின் இமயமலைப் பகுதிகளை முதன்மை வாழிடமாக கொண்டுள்ளதா இந்த எட்ச்வொர்தியா கார்த்னெரி வடக்கு பர்மா, சீனா (கிழக்கு சிசாங் மற்றும் வடமேற்கு யுன்னான் மாகாணங்களில்), இந்தியா மற்றும் நேபாளத்திலும் காணப்படுகிறது. பெரும்பாலும் இத்தாவரம் 1,000–2,500 மீ (3,300–8,200 அடி) உயரத்தில் அமைந்துள்ள காடுகளிலும், ஈரமான இடங்களிலும் காணப்படுகிறது.

பயன்கள்

தொகு
 
E. gardneri branches and leaves

உலகின் பல பகுதிகளில் அலங்காரமாக வளர்க்கப்படும் இதன் பட்டை இழைகளிலிருந்து உயர்தர காகிதமும் தயாரிக்கப்படுகிறது. இமயமலையில் கையால் காகிதங்களைத் தயாரிக்கப் பயன்படும் பல்வேறு தாவர இனங்களில் இந்த இனமே சிறந்ததாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Edgeworthia gardneri was originally described and published under its basionym (Daphne gardneri) in Asiatic Researches 13: 388, pl. [s.n.]. 1820.; under its currently accepted name (Edgeworthia gardneri), it was first published in Denkschriften der Koeniglich-Baierischen Botanischen Gesellschaft in Regensburg 3: 280–282, pl. 6. 1841.
  2. 2.0 2.1 2.2
  3. Baral, Sushim Ranjan; Kurmi, Puran Prasad (2006). A Compendium of Medicinal Plants in Nepal (First ed.). Chhauni, Kathmandu, Nepal: Mass Printing Press. p. 429. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99946-2027-4.
  4. "Edgeworthia gardneri – Nepalese Paper Bush". பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.

வெளிப்புற இணைப்புகள்

தொகு