எண்டமூரி வீரேந்திரநாத்
எண்டமூரி வீரேந்திரநாத் (Yandamuri Veerendranath) ஒரு தெலுங்கு புதின எழுத்தாளர்.[1] இந்தியாவின், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். சமூகம் சார்ந்த இவரது எழுத்துக்கள் இளைய தலைமுறையினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள வறுமை, தப்பெண்ணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் போன்ற பல சமூகப் பிரச்சினைகளை இவர் தனது எழுத்துக்களில் எடுத்துரைத்தார். சமூகப் பொறுப்புடன் மக்களை ஊக்குவித்தார். இலக்கியத்தின் இலட்சியவாத மற்றும் பிரபலமான பாணிகளை வெற்றிகரமாகவும் இணைத்தார்.
எண்டமூரி வீரேந்திரநாத் | |
---|---|
2017இல் எண்டமூரி வீரேந்திரநாத் | |
பிறப்பு | 14 நவம்பர் 1948 ராஜோலு, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தொழில் | புதின எழுத்தாளர் |
தேசியம் | இந்தியா |
காலம் | 1970–தற்போது வரை |
வகை | நாடகாசிரியர், புதின எழுத்தாளர், இயக்குநர் |
வாழ்க்கை
தொகுஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜோலு பகுதியைச் சேர்ந்தவர். இவர் பட்டயக் கணக்காளராகவும் உள்ளார். மூத்த நிர்வாகியாக பல்வேறு நிதி நிறுவனங்களில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது படைப்புகள் தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஊக்கமளிக்கும் பேச்சாளரான இவர் ஆத்திரேலியா, தான்சானியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உரைகளை ஆற்றியுள்ளார்.[2][3] ஒரு திரைப்பட இயக்குனராகவும் இருந்துள்ளார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சிரஞ்சீவி, ரம்யா கிருஷ்ணன் போன்ற கலைஞர்களை வைத்து படங்களை இயக்கினார். அபிலாஷா, சவால் மற்றும் ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களுடன் தொடர்புடையவர்.[4] 1982 ஆம் ஆண்டு ஆந்திரஜோதி நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், இவர் மாநிலத்தின் "4 மிகவும் பிரபலமான நபர்களில்" ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் எழுதிய "வெற்றிக்கான ஐந்து படிகள்" என்ற புத்தகம், இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்பனையை தாண்டி, தெலுங்கு இலக்கியத்தில் அனைத்து கால சாதனையையும் படைத்துள்ளது. பழங்குடியின மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை கற்பிக்க ஒரு கோடி செலவில் காக்கிநாடாவில் ஒரு ஆசிரமத்தை கட்டினார். சமீபத்தில் ஆந்திரப் பிரதேசம் முழுவதும் 13 மாவட்டத் தலைமையகத்தில் சுமார் 40000 பட்டியலின ஏழை மாணவர்களை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ளார்.
திரைப்பட இயக்கம்
தொகுஇவரது பல கதைகள் தெலுங்கில் இயக்கப் படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. தெலுங்கில் இரண்டு திரைப்படங்களையும் இயக்கினார், முதல் படம் நடிகை யமுனா நடித்த "அக்னிபிரவேசம்" மற்றும் இரண்டாவது படம் சிரஞ்சீவியுடன் "ஸ்டுவர்ட்புரம் காவல் நிலையம்". இரண்டு கதைகளும் இவரது சொந்த புதினங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. எனவே, வீரேந்திரநாத் மீண்டும் எழுதத் தொடங்கினார். இவரது தொலைக்காட்சித் தொடர்கள் நந்தி விருதுகளையும், பிலிம்பேர் விருதையும்பெற்றன. இவரது பெளதிங்களா பலே (கன்னடம் ) திரைப்படம் கர்நாடக மாநிலத்தின் சிறந்த திரைப்பட விருதை வென்றது. இவரது மற்றொரு பிரபலமான புதினமான "துளசி தளம்" முதலில் கன்னடத் திரைப்படமாகவும் (1985) , பின்னர் அதே பெயரில் தெலுங்கிலும் (1989), இந்தியில் பூங்க் (2008) என்றும், தெலுங்கில் ரக்ஷா (2008) என்றும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இவரது தொலைக்காட்சித் தொடர்கள் சிறந்த இயக்கம் மற்றும் தயாரிப்புக்கான தங்க நந்தி விருதுகளை வென்றன. இவருடைய 'ஒக வூரி கதை (ஒரு ஊரின் கதை)' திரைப்படம் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து சிறந்த பிராந்தியத் திரைப்பட விருதை வென்றது. இவரது "வெண்ணெல்லோ ஆடபில்லா" தொலைக்காட்சித் திரைப்படம் பிலிம்பேர் விருதை வென்றது.
விருதுகள்
தொகுஇவரது எழுத்திற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது முதல் படத்திலே சிறந்த உரையாடலுக்கான பிராந்திய விருதினை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுள்ளார்.
- 1982 ல் ரகுபதி ராகவ ராஜாராமிற்காக சாகித்திய அகாதமி விருது
- 1996 ல் வெண்ணிலோ ஆடபில்லா தாெலைக்காட்சி தொடருக்காக சிறந்த இயக்குநருக்கான நந்தி விருது
- 2003 ல் சிறந்த சமூகத் திரைப்படம் விஜயம் வைப்பு பயணம் இயக்குநர் என்பதற்காக நந்தி விருது மற்றும் இன்னும் பல.
மேலும் பார்க்க
தொகுReferences
தொகு- ↑ "A Yandamuri novel made into film after 15 years". IndiaGlitz. 30 January 2012. Archived from the original on 2 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 19 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Novelist Yandamuri Veerendranath gives students some useful lessons | Hubballi News". The Times of India (in ஆங்கிலம்). 7 September 2018. பார்க்கப்பட்ட நாள் 25 July 2019.
- ↑ "Yandamoori Veerendranath shares stress management tips with students". The New Indian Express. Archived from the original on 25 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 25 July 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "'Abhilasha' - Super hit Telugu films that were based on novels". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 July 2019.