எத்தில் ஐதரோபெராக்சைடு

வேதிச் சேர்மம்

எத்தில் ஐதரோபெராக்சைடு (Ethyl hydroperoxide) என்பது CH3CH2OOH (C2H6O2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான எத்தில் ஐதரோபெராக்சைடு நீருடனும் டை எத்தில் ஈதருடனும் கலக்குந்தன்மை கொண்டுள்ளது.

எத்தில் ஐதரோபெராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்பெராக்சால்
வேறு பெயர்கள்
எத்தில் ஐதரோ பெராக்சைடு
ஈத்தேன் ஐதரோபெராக்சைடு
எத்தில் ஐதரசன் பெராக்சைடு
ஐதரோபெராக்சி ஈத்தேன்
இனங்காட்டிகள்
3031-74-1 Y
ChemSpider 56252
EC number 221-211-6
InChI
  • InChI=1S/C2H6O2/c1-2-4-3/h3H,2H2,1H3
    Key: ILHIHKRJJMKBEE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62472
  • CCOO
UNII 08608DV9AD
பண்புகள்
C2H6O2
வாய்ப்பாட்டு எடை 62.07 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை −100 °C (−148 °F; 173 K)
கொதிநிலை 95 °C (203 °F; 368 K)
டை எத்தில் ஈதர், நீர் ஆகியவற்றுடன் கலக்கும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

எரியும் ஆல்க்கேன்களின் தீச்சுவாலையில் எத்தில் ஐதரோபெராக்சைடு உருவாகிறது. [1] ஈத்தேன் மற்றும் ஐதரசன் பெராக்சைடு இரண்டும் வினையூக்க ஒடுக்க வினையில் ஈடுபட்டும் எத்தில் ஐதரோபெராக்சைடை உருவாக்குகின்றன. [2]இவற்றைத் தவிர ஈத்தேனை ஒளிவினையூக்க ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தினாலும் எத்தில் ஐதரோபெராக்சைடு உருவாகிறது. :[3]

CH3CH3 + O2 → CH3CH2OOH

மேற்கோள்கள்

தொகு
  1. Bierkandt, Thomas; Oßwald, Patrick; Gaiser, Nina; Krüger, Dominik; Köhler, Markus; Hoener, Martin; Shaqiri, Shkelqim; Kaczmarek, Dennis et al. (October 2021). "Observation of low‐temperature chemistry products in laminar premixed low‐pressure flames by molecular‐beam mass spectrometry". International Journal of Chemical Kinetics 53 (10): 1063–1081. doi:10.1002/kin.21503. 
  2. Forde, Michael M.; Armstrong, Robert D.; Hammond, Ceri; He, Qian; Jenkins, Robert L.; Kondrat, Simon A.; Dimitratos, Nikolaos; Lopez-Sanchez, Jose Antonio et al. (31 July 2013). "Partial Oxidation of Ethane to Oxygenates Using Fe- and Cu-Containing ZSM-5". Journal of the American Chemical Society 135 (30): 11087–11099. doi:10.1021/ja403060n. பப்மெட்:23802759. 
  3. Zhu, Yao; Fang, Siyuan; Chen, Shaoqin; Tong, Youjie; Wang, Chunling; Hu, Yun Hang (2021). "Highly efficient visible-light photocatalytic ethane oxidation into ethyl hydroperoxide as a radical reservoir". Chemical Science 12 (16): 5825–5833. doi:10.1039/D1SC00694K. பப்மெட்:34168807. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்_ஐதரோபெராக்சைடு&oldid=3620231" இலிருந்து மீள்விக்கப்பட்டது