எத்தில் நைட்ரேட்டு
எத்தில் நைட்ரேட்டு (Ethyl nitrate) என்பது C2H5NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரிக் அமிலத்தினுடைய எத்தில் எசுத்தர் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்று, எளிதில் ஆவியாகக் கூடியதாய் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய நீர்மமாய் இது காணப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் எத்தில் நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது. சில மருந்துகள், சாயங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிப்பில் இது வேதியியல் இடைநிலையாகத் தோன்றுகிறது [1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எத்தில் நைட்ரேட்டு
| |
வேறு பெயர்கள்
நைட்ரிக் அமில எத்தில் எசுத்தர்
| |
இனங்காட்டிகள் | |
625-58-1 | |
ChemSpider | 11756 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12259 |
| |
பண்புகள் | |
C2H5NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 91.07 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.10கி/செ.மீ3 |
உருகுநிலை | −102 °C (−152 °F; 171 K) |
கொதிநிலை | 87.5 °C (189.5 °F; 360.6 K) |
கரையும் | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | −37 °C; −34 °F; 236 K |
வெடிபொருள் வரம்புகள் | 4.1%-50% |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எத்தில் நைட்ரேட்டு வளிமண்டலத்திலும் காணப்படுகிறது, இங்கு இச்சேர்மம் மற்ற வாயுக்களுடன் வினைபுரிந்து பனிப்புகையை உருவாக்குகிறது. முக்கியமாக புதைபடிவ எரிபொருள்கள் எரிவதால் உருவாகும் மாசுபடுத்தியாக இப்புகை கருதப்பட்டது எங்கெல்லாம் ஆழத்தில் இருந்து குளிர்ந்த நீர் எழுகின்றதோ அங்கெல்லாம் அந்நீர் இயற்கையான செயல்முறைகளால் உருவாக்கப்படும் ஆல்கைல் நைட்ரேட்டுகளால் நிறைவுற்று காணப்படுகிறது என கடல் நீர் மாதிரிகள் பற்றிய சமீபத்திய பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன [2].
தயாரிப்பு
தொகுநைட்ரைல் புளோரைடு வாயுக் குமிழ்களை எத்தனால் வழியாக -10° செல்சியசு வெப்பநிலையில் செலுத்தும்போது எத்தில் நைட்ரேட்டு உருவாகிறது[3] இதனால் இவ்வினை விரிவாக ஆராயப்பட்டது.[4][5].
எத்தனாலை நைட்ரேற்றம் செய்து எத்தில் நைட்ரேட்டை தயாரிக்க இயலும். புகையும் நைட்ரிக் அமிலம் அல்லது அடர் கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலக் கலவை இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தூய்மைப்படுத்த முனைந்தால் வெடிக்கும் வாய்ப்பு உண்டு[6].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1921-, Schofield, Kenneth, (1980). Aromatic nitration. Cambridge: Cambridge University Press. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521233620. இணையக் கணினி நூலக மைய எண் 6357479.
{{cite book}}
:|last=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ S. Perkins (August 12, 2002). "Ocean yields gases that had seemed humanmade". Science News இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 17, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071017020445/http://sciencenews.org/articles/20020817/fob8ref.asp.
- ↑ G. Hetherington and R. L. Robinson (1954). "Nitryl fluoride as a nitrating agent". J. Chem. Soc.: 3512. doi:10.1039/JR9540003512.
- ↑ B. S. Fedorov and L. T. Eremenko (1997). "Nitration of alcohols by nitryl fluoride". Russian Chemical Bulletin 46 (5): 1022–1023. doi:10.1007/BF02496138.
- ↑ Explosives, 6th Edition, R. Meyer, J. Kohler, A. Homburg; page 125
- ↑ Cohen, Julius B. (Julius Berend) (1920). Theoretical organic chemistry. University of California Libraries. London, Macmillan. p. 189.