என்றென்றும் புன்னகை (தொலைக்காட்சித் தொடர்)

என்றென்றும் புன்னகை என்பது 2020-2022 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மங்கம்மா காரி முனவாரலு' என்ற தெலுங்கு மொழி தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது.[2]

என்றென்றும் புன்னகை
வகை
இயக்கம்
 • ஆர்.கே. (1-90)
 • பகவதிராஜ்.அ (91-569)
நடிப்பு
 • நட்சத்திரா ஸ்ரீனிவாஸ்
 • நிதின் ஐயர்
 • தீபக் குமார் / விஷ்ணுகாந்த்
 • கவிதா
இசைஹரி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்569
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்நீலிமா ராணி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்இசை பிக்சர்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்16 மார்ச்சு 2020 (2020-03-16) –
5 மே 2022 (2022-05-05)
Chronology
முன்னர்இரட்டை ரோஜா (14:00)
தொடர்புடைய தொடர்கள்மங்கம்மா காரி மனவாரலு
வெளியிணைப்புகள்
இணையதளம்

இது நடிகை நீலிமா ராணியின் இசை பிக்சர்ஸ் தயாரிப்பில்,[3] நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், நிதின் ஐயர், விஷ்ணுகாந்த், சுஷ்மா நாயர் மற்றும் கவிதா ஆகியயோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[4][5] இத்தொடர் மார்ச்சு 16, 2020 முதல் மே 5, 2022 ஆம் ஆண்டு வரை பகல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி, 569 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.

கதைச்சுருக்கம்

தொகு

ஆண்டாள் தனது பேரனை தென்றல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். பின்னர், ஆகாஷ் ஆண்டாளின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்து வருகிறார் என்பதையும் தனிமனிதன் இல்லை என்பதையும் தென்றல் உணர்ந்தார். தென்றல், ஆகாஷை மணந்து பிடிவாதமான ஆண்டாளின் கட்டுப்பாட்டில் வாழ ஒப்புக்கொள்வாரா அல்லது, அவள் உண்மையான அன்பை வேறொரு இடத்தில் கண்டுபிடிப்பாளா என்பதே இக்கதையின் சுருக்கமாகும்.

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
 • கவிதா - ஆண்டாள்; ஆகாஷின் பாட்டி
 • நட்சத்திரா ஸ்ரீனிவாஸ் - ஆர்ஜே தென்றல் சித்தார்த்
 • நிதின் ஐயர் - ஆகாஷ்
 • தீபக் குமார் (2020-2022) → விஷ்ணுகாந்த் (2022) - சித்தார்த்
 • சுஷ்மா நாயர் (2021-2022) - நிலா ஆகாஷ்

துணை கதாபாத்திரம்

தொகு
 • நரசிம்மராஜு - விசுவாசம்; ஆகாஷின் தாத்தா
 • சூப்பர்குட் கண்ணன் - கண்ணா; ஆகாஷின் தந்தை
 • ராகவி - மாதவி; ஆகாஷின் தாய்
 • கௌதமி வெம்புநாதன் - லட்சுமி; தென்றலின் தாய்
 • கிரிஷ் - சண்முகா; தென்றலின் தந்தை
 • புனிதா பாலகிருஷ்ணன் (பகுதி 1-92) → ஸ்ரீநிதி சுதர்சன் (2020) - நிலா; தென்றலின் முதல் தங்கை
 • தாச்சாயனி - பூர்ணிமா; தென்றலின் இரண்டாவது தங்கை
 • இந்திரன் - சிறுத்தை; சித்தார்தின் நண்பன் மற்றும் வானொலி பணியாளர்
 • வி. ஜே. சசிகலா - மேக்னா; சித்தார்தின் தோழி மற்றும் வானொலி பணியாளர்
 • முரளி - சிங்காரம்; பண்பலை வானொலி ஒலிபரப்பின் தலைவர்

நடிகர்களின் தேர்வு

தொகு

இந்த தொடரில் தென்றலாக நட்சத்திரா ஸ்ரீனிவாஸ் நடிக்கின்றார். இவர் சிவகாமி, மாயா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.[6] இவருக்கு ஜோடியாக நிதின் ஐயர், தீபக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரில் நடிகை கவிதா வில்லியாக மற்றும் ஆகாஷ் பாட்டியாக நடிக்கிறார்.[7]

நேர அட்டவணை

தொகு

இந்த தொடர் 16 மார்ச் 2020 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 3:00 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சூலை 27, 2020 முதல் மீண்டும் அதே முதல்பகுதியில் இருந்து ஒளிபரப்பாகி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி, 23 ஆகத்து 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி பின்னர் 2022 இல் பிற்பகல் 3:30 மணிக்கு ஒளிபரப்பாகி, நிறைவு பெற்றது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம்
23 ஆகத்து 2021 - ஒளிபரப்பில்
திங்கள் - சனி
13:30-14:30
27 சூலை 2020 - 21 ஆகத்து 2021
திங்கள் - சனி
14:00
16 மார்ச் 2020 - 27 மார்ச் 2020
திங்கள் - வெள்ளி
15:00
2022
திங்கள் - சனி
15:30

மதிப்பீடுகள்

தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2020 3.3% 4.0%
2.6% 3.2%
2021 2.4% 3.9%
2.7% 3.8%
2022 1.6% 3.3%
1.2% 2.3%

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "Endrendrum Punnagai completes 100 episodes; Neelima Esai and others thank fans". The Times of India.
 2. "Endrendrum Punnagai Serial Cast (Zee Tamil), Crew, Actors, Roles, Salary & More". Seialcast.in.
 3. "நீலிமா ராணியின் என்றென்றும் புன்னகை" (in ta). Dinamalar.com. https://m.dinamalar.com/cinema_detail.php?id=86627. 
 4. Kannan, Ganesh. "Endrendrum Punnagai". Onenov.in. Archived from the original on 2020-06-20. பார்க்கப்பட்ட நாள் 2020-03-21.
 5. "Tamil Tv Serial Endrendrum Punnagai". Nettv4u.com.
 6. "Endrendrum Punnagai serial on Zee Tamil". Newsbugz.com.
 7. "Actress Neelima Rani turns producer with daily soap" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/actress-neelima-rani-turns-producer-with-daily-soap/articleshow/61017139.cms. 
 8. "Endrendrum Punnagai Serial Cast (Zee Tamil), Crew, Actors, Roles, Salary & More". Wikiking.in.

வெளி இணைப்புகள்

தொகு