என். எஸ். இலட்சுமி நாராயணன் பட்
நைலாடி சிவராம இலட்சுமிநாராயண் பட்டா (Nailady Shivarama Lakshminarayan Bhatta) (29 அக்டோபர் 1936 - 6 மார்ச் 2021) சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த கன்னடக் கவிஞர் ஆவார். இவருக்கு 1974 இல் கர்நாடக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
என். எஸ். இலட்சுமி நாராயணன் பட்டா | |
---|---|
பிறப்பு | 29 October 1936 சிவமோகா, கருநாடகம் இந்தியா |
இறப்பு | 6 மார்ச்சு 2021 பெங்களூர், கருநாடகம் | (அகவை 84)
தொழில் |
|
மொழி | கன்னடம் |
தொழில்
தொகு- கல்வியாளராக
தனது முதுகலையை மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரியிலும், பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டம் பெற்ற பின்னர், பெங்களூரில் உள்ள ஆச்சார்யா பாட சாலையில், கன்னட இலக்கிய ஆசிரியராக சிலகாலம் பணியாற்றினார். பின்னர், பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பேராசிரியராகவும், தலைவராகவும் பணியாற்றினார். பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் கலைக் கல்லூரியின் தலைவராக (1990) 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார்.
- கவிஞராக
1970களின் முற்பகுதியில் இவரது ஆரம்பகால படைப்பான ஹொரலு தாரியல்லி காவ்யா (வேடிக்கையான சாலையில் கவிதை]] சாகித்திய அகாதமி விருது|சாகித்திய அகதாமி விருதைப்]] பெற்றுத் தந்தது. மேலும், இவரை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இவர், வில்லியம் சேக்சுபியரின் 50 கவிதைகளையும், எலியட்டின் கவிதைகளையும், கவிஞர் யீட்ஸின் படைப்புகளையும் கன்னட மொழியில் மொழிபெயர்த்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் பெற்ற மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் [1] விருது உட்பட நவீன கன்னட கவிதை மற்றும் இலக்கிய விமர்சனங்களுக்கு தான் அளித்த பங்களிப்புக்காக ஏராளமான விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். சிசுநாள செரிப்பின் படைப்புகளை பிரபலப்படுத்துவது தொடர்பான இவரது முயற்சி கன்னட பாவகீத இயக்கத்தில் ஒரு மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.
கன்னட மொழியை மக்கள் அதிகம் அணுகக்கூடிய வகையில் "கன்னடத்தில் வாசிப்புகள்" என்ற இவரது படைப்பு கன்னடத்தில் இதுவரை எழுதப்பட்ட பிரபலமான புத்தகங்களில் ஒன்றாகும். இவரது சமீபத்திய படைப்பான, "சமாக்ர கன்னட சாகித்திய சரித்திரே" (கன்னட இலக்கியத்தின் ஒரு விரிவான வரலாறு) 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.
இறப்பு
தொகுவயது தொடர்பான வியாதிகளால் பட்டா 2021 மார்ச் 6 அன்று பெங்களூருவில் தனது 84 வயதில் இறந்தார். [2]
- ↑ "Masti Award". Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2021-03-07.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Kannada poet Lakshminarayana Bhatta passes away". The Hindu. 6 March 2021. https://www.thehindu.com/news/national/karnataka/kannada-poet-lakshminarayana-bhatta-passes-away/article34002978.ece/amp/.