என். எஸ். கனிமொழி

இந்திய அரசியல்வாதி

மரு. என். எஸ். கனிமொழி என்கிற கனிமொழி என்.வி.என்.சோமு(Kanimozhi NVN Somu) ஒரு தமிழக அரசியல்வாதியும், கல்விப்பயிற்சியால் மருத்துவரும், ஆவார்.

பிறப்பும் கல்வியும் தொகு

கனிமொழி அவர்களின் தந்தை என். வி. என். சோமு ஒரு முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர். கனிமொழி 1998 ஆம் ஆண்டு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் 2003 ஆம் ஆண்டு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை அறுவை சிகிச்சை (மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்) படித்துள்ளார்.

தொழில் தொகு

கனிமொழி கோபாலபுரத்தில் அமைந்துள்ள தாய்மை மகளிர் மருத்துவமனை மற்றும் டே கேர் அறுவை சிகிச்சை மையத்தின் நிறுவனர் ஆவார், மேலும் அப்பல்லோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனைகள், அப்பல்லோ கிராடில், மதர்ஹூட் மருத்துவமனைகள் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் ஆகியவற்றில் பகுதி நேர ஆலோசகராக இருந்து வருகிறார்.

அரசியல் தொகு

தி.மு.க வின் மாநில மருத்துவ பிரிவு செயலாளர் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள கனிமொழி 2011 ல் நடைப்பெற்ற தமிழக சட்டசபை தேர்ந்தலில் மாதவரம் ,சட்டமன்றத் தொகுதியிலும், 2016 ல் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். 24 அக்டோபர் 2021 இல் மாநிலங்களவை உறுப்பினராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1],[2][3][4][5][6][7][8]

குடும்பம் தொகு

கனிமொழிக்கு சிவசுப்ரமணியன் என்ற கணவரும், சோமு விக்ரம் என்ற மகனும், வேதிகா மஹாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. [1] போட்டியின்றி ராஜ்ய சபாவுக்கு தேர்வாகும் திமுக வேட்பாளர்கள்.
  2. "Stalin chooses Kanimozhi NVN Somu, KRN Rajesh Kumar as DMK candidates for Rajya Sabha bypolls". Dtnext. 14 September 2021. Archived from the original on 14 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Dr Kanimozhi NVN Somu". MGM Healthcare. Archived from the original on 14 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "DMK fields Kanimozhi Somu and Rajeshkumar for Rajya Sabha bypolls". The Hindu. 14 September 2021. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
  5. "DMK announces Kanimozhi Somu and KRN Rajeshkumar as candidates to Rajya Sabha". The NewsMinute. 14 September 2021. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
  6. "DMK announces candidates for Rajya Sabha bypolls in Tamil Nadu". Shanmughasundaram J. 14 September 2021. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
  7. "TN Assembly polls: Know your candidates". Deccan Chronicle. 21 April 2016. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
  8. "Kanimozhi's 'Dharmika commitment' to T Nagar". Deccan Chronicle. 9 May 2016. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
  9. [2] குடும்பம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எஸ்._கனிமொழி&oldid=3661881" இலிருந்து மீள்விக்கப்பட்டது