என். கே. தேசம்
என். குட்டிகிருஷ்ணா பிள்ளை (N. K. Desam, 31 அக்டோபர் 1936 – 4 பெப்பிரவரி 2024), என். கே. தேசம் என்று நன்கு அறியப்பட்ட தென்னிந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த இந்திய மலையாளக் கவிஞரும் இலக்கிய விமர்சகரும் ஆவார். 2009 இல், இவரது கவிதைத் தொகுப்பான முத்ரா கேரள சாகித்திய அகாதமி விருதை வென்றது. இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி படைப்பினை 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் மொழிபெயர்த்தார். இந்நூல் கேரளாவின் கேந்திர சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்புப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
என். கே. தேசம் N. K. Desam | |
---|---|
2021 இல் என். கே. தேசம் | |
இயற்பெயர் | എൻ. കെ. ദേശം |
பிறப்பு | என். குட்டிகிருஷ்ணா பிள்ளை 31 அக்டோபர் 1936 தேசோம், ஆலுவா, கொச்சி, இந்தியா |
இறப்பு | 4 பெப்ரவரி 2024 கொத்தகுலங்கர, அங்கமலி, கேரளம், இந்தியா | (அகவை 87)
தொழில் | கவிஞர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் |
மொழி | மலையாளம் |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | முத்ரா, கீதாஞ்சலி |
குறிப்பிடத்தக்க விருதுகள் | கேரள சாகித்திய அகாதமி விருது, ஓடக்குழல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி பரிசு |
துணைவர் | ஆர். லீலாவதி |
வாழ்க்கை வரலாறு
தொகுஎன். கே. தேசம் 1936 அக்டோபர் 31 அன்று ஆலுவா அருகிலுள்ள தேசோம் கிராமத்தில் பிறந்தார்.[1] ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் அதிகாரியாக இருந்த இவர் 1996 இல் ஓய்வு பெற்றார். ஆர். லீலாவதியை மணந்து மூன்று குழந்தைகளைப் பெற்றார்.[2] பன்னிரண்டு வயதிலிருந்தே எழுதத் தொடங்கிய இவர், 10 இற்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். இவரது முதல் தொகுப்பு அந்திமலரி என்பதாகும், இவர் அந்திமலரி தொகுப்பை 1973 இல் வெளியிட்டார். 2016 இல், இரவீந்திரநாத் தாகூரின் 'கீதாஞ்சலி' யை மலையாள மொழியில் மொழிபெயர்த்ததற்காக கேந்திர சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.[3]
என். கே. தேசம் 2024 பெப்பிரவரி 4 அன்று கொடுங்கல்லூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 87. [4] மறுநாள் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது இறுதிச் சடங்கிற்கு உள்ளூர் காவற்காரர்களுடன் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.[2]
படைப்புகள்
தொகுஆண்டு | தலைப்பு | வெளியீட்டாளர் | குறிப்புகள் |
---|---|---|---|
1973 | அந்திமலரி | எசு.பி.சி.எசு., கோட்டயம் | |
1975 | கன்யாகிரிதயம் | எசு.பி.சி.எசு., கோட்டயம் | |
1979 | அப்பூபந்தாடி | கேரள சாகித்திய அகாதமி, திருச்சூர் | |
1979 | சொட்டையிலே சீலம் | எசு.பி.சி.எசு., கோட்டயம் | |
1981 | பவிழமல்லி | எசு.பி.சி.எசு., கோட்டயம் | |
1984 | உள்ளெகம் | என்.பி.எசு., கோட்டயம் | |
1999 | அன்பதொன்னக்சரளி | எசு. டி. ரெட்டியார் & சன்சு, கொச்சி | |
2001 | எலிமீசா | எசு.பி.சி.எசு., கோட்டயம் | |
2003 | காவியகெளி | கிரீன் புக்சு, திருச்சூர் | |
2006 | முத்ரா | கரண்ட் புக்சு, கோட்டயம் | |
2006 | மழதுளிகள் | குருசேத்ரா பப்ளிகேசன்ஸ், கொச்சின் | |
2010 | கீதாஞ்சலி | கிரீன் புக்சு, திருச்சூர் | கீதாஞ்சலியின் மொழிபெயர்ப்பு |
2016 | வைலோபிள்ளை கதகவிதகள் | கிரீன் புக்சு, திருச்சூர் | |
2016 | தேசிகம் | வல்லத்தோல் வித்தியாபீடம், சுகபுரம் என்.பி.எசு., கோட்டயம் |
முழுப் பணிகள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "In Aluva, winning the hearts of voters". தி இந்து. Retrieved 14 June 2013.
- ↑ 2.0 2.1 "80ന്റെ നിറവില് എന് കെ ദേശം". Deshabhimani (in மலையாளம்). 30 October 2016. Retrieved 21 March 2023.
- ↑ Bureau, The Hindu (2024-02-05). "Malayalam poet N.K. Desam dies at 87" (in en-IN). தி இந்து. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/kerala/malayalam-poet-nk-desam-dies-at-87/article67812982.ece.
- ↑ Poet NK Desam passes away
வெளி இணைப்புகள்
தொகு- Dhanya Harikrishnan (2 August 2009). ദേശത്തിന്റെ കാവ്യലോകത്ത് ഇത്തിരി നേരം [Interview with N. K. Desam]. Ezhuth.