என். கோபி

தெலுங்கு எழுத்தாளர்

முனைவர் என். கோபி (N. Gopi ) ( பிறப்பு 1948 ஜூன் 25) இவர் ஒரு சிறந்த இந்திய கவிஞராவார். தெலுங்கு மொழியில் இலக்கிய விமர்சகராக இருக்கும் இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.[1] இவர் 1974 முதல் ஓய்வுபெறும் வரை பேராசிரியராகவும், தலைவராகவும் பல்கலைக்கழக அமைப்புகளில் பணியாற்றி வந்துள்ளார். மேலும், இவர் ஐதராபாத்தின் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியையும் வகித்துள்ளார். ஒரு மனித நேயவாதியான கோபி தனது கவிதைகளில் உள்ளூர் மற்றும் தேசிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

21 கவிதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள், 3 ஆராய்ச்சிப் படைப்புகள், 5 பயணக் குறிப்புகள், 5 மொழிபெயர்ப்புகள், 2 வர்ணனைகள், 3 நெடுவரிசை எழுத்துக்கள் உட்பட 50 புத்தகங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

இவரது கவிதைத் தொகுப்புகள் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, நேபாளி, தமிழ் மலையாளம், மராத்தி, கொங்கனி. டோக்ரி, மைதிலி, கன்னடம், பஞ்சாபி, சமஸ்கிருதம், ஒரியா, சிந்தி, உருது, அசாமி, மெய்டி, பெங்காலி, போடோ, காஷ்மீர், சாந்தாலி, ராஜஸ்தானி, ஜெர்மன், ரஷ்ய மற்றும் பாரசீகம் என பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

'கலான்னி நித்ர போனேவ்வானு' (நான் நேரத்தை தூங்க விடமாட்டேன் (1998); ' நானீலு ' (தி லிட்டில் ஒன்ஸ் 1998) மற்றும் 'ஜல கீதம்' (நீர் பாடல் - ஒரு நீண்ட கவிதை 2002) போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தின் போங்கிர் கிராமத்தில் 1948 ஜூன் 25 அன்று பிறந்தார். அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு ஐதராபாத்த்திலுள்ள உசுஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கலைக் கல்லூரியில் சேரத் தேர்வு செய்தார். அங்கு தெலுங்கு, சமஸ்கிருதம் மற்றும் மொழியியல் குழுவில் இளங்கலை படித்து 6-வது இடத்தைப் பிடித்தார். மேலும் கல்லூரியில் நிஜாமின் தங்கப் பதக்கத்தையும் வென்றார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் முதுகலை பட்டம் பெற்றார். 1973 இல் உசுமானியா பல்கலைக்கழகத்தில் குராஜாதா அப்பா ராவ் தங்கப் பதக்கம் வென்று பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்தார். பின்னர் இவர் பயன்பாட்டு மொழியியலில் முதுகலை பட்டம் பெற்றார். இவரது பதிவு செய்யப்பட்ட பெயர் நக்கா கோபால் என்றாலும், அவர் இலக்கியத் துறையில் என். கோபி என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

தொழில் தொகு

இவரது முதல் வேலை என்பது ஒரு வருடம் யுனிசெப்பின் முறைசாரா திட்டத்தில் திட்ட அலுவலராக இருந்தாகும். பின்னர் 1974 இல் உசுமானியா பல்கலைக்கழகத்துடன் இணைந்த நானக்ராம் பகவன்தாஸ் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். பின்னர் அவர் 1981 இல் உசுமானியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1990 ல் தெலுங்கு பேராசிரியராகவும், 1992 இல் ஆய்வு வாரியத்தின் தலைவராகவும், 1994 இல் துறைத் தலைவராகவும் ஆனார். பின்னர் தெலுங்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் (1999-2002). இவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது இந்தியாவின் இளைய துணை வேந்தரானார். 2001 ஆம் ஆண்டில், இவர் ஒரே நேரத்தில் திராவிட மற்றும் காகதியா பல்கலைக்கழகங்களுக்கான பொறுப்பு துணை வேந்தராக கூடுதல் பொறுப்பு வகித்தௌள்ளார். தெலுங்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தனது பதவிக் காலத்தை முடித்த பின்னர், இவர் மீண்டும் தனது தாய் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். அங்கு அவர் தலைவராக (2004-2006) பணியாற்றினார். 2008 இல் ஓய்வு பெற்ற பின்னர், இவர் 2011-13 மற்றும் 2015-17 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பல்கலைக்கழக எமரிட்டஸ் கூட்டாளாராக ஆனார்.

நானீலுவின் தந்தை தொகு

கோபியின் ஆறாவது கவிதைத் தொகுப்பான ' நானீலு ' (1998) , இது என். கோபியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கவிதை வடிவமாகும். இது நூற்றுக்கணக்கான கவிஞர்களால் பரவலாக விவாதிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. இந்த படிவத்தை ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட 300 நானி தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 19 வயது வடிவத்தை தெலுங்கு இலக்கியத்தில் ஒரு போக்கு அமைப்பாளராக மாற்றியது.[2] கோபியின் நானேலு உருசிய மொழி உட்பட 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விருதுகள் மற்றும் மரியாதைகள் தொகு

இவரது இலக்கியப் பணிகள் மற்றும் தெலுங்கு இலக்கியத்திற்கான இவரது சேவைக்காக 30 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விருதுகள் பின்வருமாறு:

  • 'கலான்னி நித்ர பொனிவ்வானு' (நான் நேரம் தூங்க விடமாட்டேன்) என்ற கவிதைத் தொகுப்பிற்காக 2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.
  • 1980 ஆம் ஆண்டில் ஃப்ரீவர்ஸ் ஃப்ரண்ட் விருது அவரது கவிதைத் தொகுப்பான 'மைலூரேய்' (மைல்ஸ்டோன்)
  • தெலுங்கு பல்கலைக்கழக விருது (1991)
  • தில்லி தெலுங்கு அகாடமி விருது (1999)
  • வட அமெரிக்காவின் ஸ்ரீ அன்னமாச்சார்யா திட்டம், சிகாகோ (சாப்மா), அமெரிக்கா (2001), மற்றும் ஆந்திர அரசாங்கத்தின் ' கலா ரத்னா ' விருது (இலக்கியம் மற்றும் கலாச்சாரத்திற்கான சிறந்த சேவைக்கான விருது.)

குறிப்புகள் தொகு

  1. "Akademi Awards (1955-2016)". Sahitya Akademi - National Academy of Letters. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Naneelu turning point in Telugu literature". The Hans India. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கோபி&oldid=3928161" இலிருந்து மீள்விக்கப்பட்டது