என். ஜி. கே

செல்வராகவன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(என். ஜி. கே (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

என். ஜி. கே (N. G. K) ஆனது 2019 ஆம் ஆண்டு வெளியான ஓர் அரசியல் அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை செல்வராகவன் எழுதி, சூர்யா நடிக்கும் முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசையில், டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட் வெளியிட்டது. இத்திரைப்படத்தில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] சனவரி 22, 2018 அன்று படப்பிடிப்பு ஆரம்பமானது. இத்திரைப்படமானது, தீபாவளி பண்டிகையான நவம்பர் 06, 2018 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.[2] ஆனால் படப்பிடிப்பு முழுமையடையாத காரணத்தால், இத்திரைப்படம் 31 மே, 2019 அன்று வெளியானது.[3]

என். ஜி. கே
சுவரிதழ்
இயக்கம்செல்வராகவன்
தயாரிப்புஎஸ். ஆர். பிரகாஷ்பாபு
எஸ். ஆர். பாபு
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசூர்யா (நடிகர்)
சாய் பல்லவி
ரகுல் பிரீத் சிங்
ஒளிப்பதிவுசிவக்குமார் விஜயன்
படத்தொகுப்புபிரவீன்
கலையகம்டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
விநியோகம்ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட்
வெளியீடு31 மே, 2019
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

கதைக்களம் தொகு

நந்த கோபாலன் குமரன் ஒரு சமூக சேவகரும், இயற்கை விவசாயத்தில் சிறப்பான செயற்பாட்டாளரும் ஆவார். இவர் தனது மதிப்புமிக்க பணியை விட்டு விட்டு நாட்டு நலனுக்காக இயற்கை விவசாயத்திற்காகவும், நாட்டு நலனுக்காகவும் செயல்படுவதற்காக அவருடைய கிராமத்தில் உள்ள இளைஞர்களிடத்தில் பேராதரவு இருந்தது. நந்த கோபாலன் குமரன் தனது தாயார் விஜி மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரரான தனது தந்தை ரமணன் மற்றும் அவர் மீது அதிகமான அன்பைக் காட்டும் மனைவியான கீதா குமாரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

ஒரு தருணத்தில், சில இளைஞர்களை பிரச்சனையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சியில் சட்டமன்ற உறப்பினர் ஒருவரின் வலது கரமாக விளங்கும் தனது பழைய நண்பன் ராஜாவைச் சந்திக்க நேரிடுகிறது. தான் பல காலமாக தீர்ப்பதற்காகப் போராடி களைத்துப் போன ஒரு பிரச்சனையானது தனது நண்பனின் உதவியுடன் ஒரு கவுன்சிலரின் அலைபேசி உரையாடல் மூலம் தீர்த்து வைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். இதற்கிடையில், சில கடைக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இயற்கை விவசாயத்தை நிறுத்தச் சொல்லி எச்சரித்த பின்னும் மக்கள் தொடர்ந்து இயற்கை விவசாயத்தைக் கைவிட மறுத்தமைக்காக நந்த கோபால குமரன் மற்றும பொது மக்களைத் தாக்குகின்றனர். மேலும் அவர்களின் விவசாய நிலங்களையும் வேளாண் பொருள்களையும் வேதிப்பொருள்களைக் கொண்டு எரித்து விடுகின்றனர். எல்லாவற்றையும் சரிசெய்வதற்காக குமரனை சட்டமன்ற உறுப்பினர் பாண்டியனை சந்திக்குமாறு கிராமத்தில் உள்ள அருணகிரி கேட்டுக் கொள்கிறார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர் பாண்டியனோ தயவு தாட்சண்யமற்ற, தன்வழிப்போக்கான ஆளுமையுடையவராக இருக்கிறார். அவர் குமரனும், அவரது கிராமத்தைச் சேர்ந்த 500 பேரும் தனது கட்சியில் சேர்ந்தால் உதவுவதாக ஒப்புக்கொள்கிறார். பாண்டியன் நந்த கோபாலன் குமரனை தனது வீட்டுக் கழிவறையை சுத்தம் செய்யுமாறும், பிரியாணி வாங்கி வருமாறும், விலை மாதரை அழைத்து வரவும் கூறி மிக மோசமாக நடத்துகிறார். இவையெல்லாவற்றையும் செய்ய மனம் மறுத்தாலும், பாண்டியனின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும், தனது கிராமத்திற்கான நல்ல செயல்கள் நடக்க வேண்டும் என்பதற்காகவும் இவற்றையெல்லாம் செய்கிறார். அரசியலின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்ளும் குமரன் அரசியலில் விறுவிறுவென முன்னேறுகிறார். தன் கட்சியில் உள்ளவர்களின் பொறாமைக்கு ஆளாகிறார். கடைசியில் அரசியலில் வெற்றி பெற்றாரா? கிராமத்தின் தேவைகள் நிறைவேறியதா? என்பதை மீதமுள்ள திரைக்கதை சொல்கிறது.

விமர்சனம் தொகு

பிபிசியில் "கதை, திரைக்கதை, படமாக்கம் என எல்லாவற்றிலும் ஏமாற்றமளிக்கும் ஒரு படத்தையே தந்திருக்கிறார் செல்வராகவன்" என்று குறிப்பிட்டனர்.[4]

ஒலிப்பதிவு தொகு

படத்தின் இசை மற்றும் ஒலிப்பதிவை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.ஸ்ரேயா கோஷல் , சித்ம ஶ்ரீராம் மற்றும் ரஞ்சித் ஆகியோர் ஆல்பத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.

# பாடல் வரிகள் பாடகர்கள் நீளம்
1. "தண்டல்காரன்" கபிலன் ரஞ்சித் 3:38
2. "திமிரணும்டா" விக்னேஷ் சிவன் ஜித்தின் ராஜ் 3:56
3. அன்பே பேரன்பே உமா தேவி சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் 4:30
4. "பொத்தாச்சாலும்" செல்வராகவன் சிவம் 2:04
முழு நீளம்: 14:08

மேற்கோள்கள் தொகு

  1. "சூர்யாவின் ‘என்.ஜி.கே. திரைப்பட 'செகண்ட் லுக்' வெளியீடு". http://www.dinamani.com/tamilnadu/2018/jul/22/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2965519.html.  தினமணி (சூலை 22, 2018)
  2. "http://tamil.asianetnews.com/cinema/the-ultimate-change-in-famous-directors-upcoming-movie". http://tamil.asianetnews.com/cinema/the-ultimate-change-in-famous-directors-upcoming-movie.  ஆசியா நெட் நியூஸ்
  3. "'என்.ஜி.கே.’ கதாபாத்திரத்தில் நிறைய ரகசியங்கள் மறைந்துள்ளன: செல்வராகவன்". https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article27398289.ece.  தி இந்து (சூலை 01, 2019)
  4. முரளிதரன் காசிவிஸ்வநாதன் (31 மே 2019). "என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்): சினிமா விமர்சனம்". பிபிசி. https://www.bbc.com/tamil/arts-and-culture-48470918. பார்த்த நாள்: 6 சூன் 2019. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஜி._கே&oldid=3659625" இருந்து மீள்விக்கப்பட்டது