என். பொன்னப்பா

கேலிச்சித்திர வரைஞர்

நள பொன்னப்பா (N. Ponnappa) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தன்னுரிமை கேலிச்சித்திர ஓவியர் ஆவார். இவரது படைப்புகள் பல இந்தியாவின் பல முக்கிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

பொன்னப்பா குடகு இனத்தைச் சேர்ந்தவர். மங்களூரில் 1948 ஆம் ஆண்டு நதிகெரியாண்டா சி 'மிட்டூ' சுப்பையா மற்றும் பொன்னம்மா ஆகிய இரு பள்ளி ஆசிரியர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தைவழி தாத்தா பாட்டொளே பழமே என்ற குடகு நாட்டுப்புற பாடல் தொகுப்பாளர் நதிகெரியண்ட சின்னப்பா ஆவார். பொன்னப்பாவின் ஆரம்பக் கல்வி மங்களூர், புனே மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இருந்தது. இவர் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார். உயர் படிப்பிற்காக சிகாகோ சென்றார், அங்கு இவர் தனது கல்லூரி இதழுக்காக கேலிச்சித்திரங்களை முதலில் வரையத் தொடங்கினார். [1]

தொழில்

தொகு

1970 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை 11 வருட காலத்திற்குப் பிறகு சென்னையில் கட்டடக் கலைஞராக இவர் இயெப்ரி பாவா மற்றும் தில்லி மற்றும் லாகோசு ஆகியவற்றில் பணியாற்றினார், பின்னர் இவர் முழுநேர கேலிச்சித்திர ஓவியராக மாறினார். இந்தியாவில் இவரது கேலிச்சித்திரங்கள் முதலில் 1976 ஆம் ஆண்டில் இந்தியா டுடே இதழில் வெளிவந்தன [2]

விருதுகள்

தொகு

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பொன்னப்பா கேலிச்சித்திரத்திற்காக விருதுகளை வென்றுள்ளார். மனிதகுலம் மற்றும் ஆற்றல் என்ற தலைப்பில் செருமனியில் நடைபெற்ற பன்னாட்டு கேலிச்சித்திரப் போட்டிக்கான நடுவர் குழுவில் இவர் உறுப்பினராகவும் இருந்தார். கர்நாடக மாநில இராச்யோத்சவா விருதைப் பெற்றார். தென் கொரியா, ருமேனியா, செருமனி, சப்பான் போன்ற பல்வேறு நாடுகளில் நடந்த கேலிச்சித்திரப் போட்டிகளில் கலந்து கொண்டு பன்னாட்டு அங்கீகாரம் பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டில், இவருக்கு 'ஆண்டின் கூர்க் நபர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. [3] [4]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பெங்களூரில் நீண்ட காலம் தங்கி கேலிச்சித்திரப் பட்டறைகளை நடத்தியிருக்கிறார். தற்பொழுது தனது மனைவி சோதி செட்டியுடன் கோவாவில் வசிக்கிறார். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Nadikerianda Nala Ponnappa". Kodagu Heritage. KodavaClan. 29 October 2018. பார்க்கப்பட்ட நாள் 25 July 2022.
  2. Chatterjee, Sreemoyi (December 30, 2016). "Cartoonist Ponnappa is 'Coorg person of the year'". https://timesofindia.indiatimes.com/city/bengaluru/cartoonist-ponnappa-is-coorg-person-of-the-year-2016/articleshow/56255181.cms. 
  3. "Cartoonist Ponnappa is 'Coorg person of the year'". DHNS. December 31, 2016. https://www.deccanherald.com/content/589127/cartoonist-ponnappa-coorg-person-year.html. 
  4. "N. Ponnappa – A Cartoonist Par Excellence". Karnataka.com. 26 April 2015. பார்க்கப்பட்ட நாள் 25 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._பொன்னப்பா&oldid=4137612" இலிருந்து மீள்விக்கப்பட்டது