எம்மா மெக்கியோன்
எம்மா மெக்கியோன் (Emma McKeon) ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனையான இவர், 2021 டோக்யோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் ஏழு பதக்கங்களை வென்றுள்ளார். இவர் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, 100 மீட்டர் மிட்லே ரிலே என நான்கு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.[2] மேலும் இவர் 100 மீட்டர் பட்டர்ஃப்ளை மற்றும் 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, கலப்பு 100 மீட்டர் மிட்லே ரிலே ஆகிய போட்டிகளில் வெண்கலம் வென்றுள்ளார். ஒரே ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களை ஒரு பெண் வெல்வது இதுவே முதல் முறை ஆகும். [3]
![]() 2016-இல் எம்மா மெக்கியோன் | |||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 24 மே 1994 ஓலோங்கோன், நியூ சவுத் வேல்ஸ் | ||||||||||||||||||||||||
உயரம் | 180 செ மீ[1] | ||||||||||||||||||||||||
எடை | 60 கிலோ | ||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||
விளையாட்டு | நீச்சல் | ||||||||||||||||||||||||
நீச்சல்பாணிகள் | பிரி ஸ்டைல் நீச்சல், பட்டர்பிளை | ||||||||||||||||||||||||
சங்கம் | கிரிப்பித் பல்கலைக் கழகம் | ||||||||||||||||||||||||
பயிற்றுநர் | மைக்கேல் போகில் | ||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
இவர் உலகிலேயே ஒரே ஒலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற நான்காவது பெண்மணி ஆவார்.
கடந்த 2016 ஒலிம்பிக் நீச்சல் போட்டகளில் ஒரு தங்கம், இரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை எம்மா மெக்கியோன் வென்றுள்ளார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Emma McKeon". fina.org. FINA. 6 ஏப்ரல் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Australia Swimmer Emma McKeon Becomes First Female To Win Seven Medals At Single Olympics
- ↑ எம்மா மெக்கியோன்: ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை