எம். ரங்கா ராவ்

இந்திய இசையமைப்பாளர்
(எம். இரங்கா ராவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எம். ரங்கா ராவ் (M. Ranga Rao) (1932 அக்டோபர் 15 - 1990 ஆகத்து 3) கன்னடத் திரைப்படத்துறையில் பணியாற்றிய ஒரு முன்னணி இந்திய இசையமைப்பாளர் ஆவார். வலுவான பாரம்பரிய நுணுக்கங்களுடன் வெளிப்படும் மெல்லிசைகளுக்காக இவர் அறியப்பட்டார்.[1][2][3]

எம். ரங்கா ராவ்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1932-10-15)15 அக்டோபர் 1932
ஆந்திரப் பிரதேசம்
பிறப்பிடம்ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு3 ஆகத்து 1990(1990-08-03) (அகவை 57)
பெங்களூர், கருநாடகம்
இசை வடிவங்கள்திரை இசை, மேடை நாடகம்
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசை இயக்குனர், இசைக்கலைஞர்

சொந்த வாழ்க்கை

தொகு

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

எம். ரங்கா ராவ் 15 அக்டோபர் 1932 அன்று ஆந்திராவின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். தனது சிறிய வயதிலேயே வீணையை கற்றுக்கொண்டார். இவர் தனது தாயார் இரங்கம்மாவிடமிருந்து உத்வேகம் பெற்றார். இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றவர்.

குடும்பம்

தொகு

இவர், சியாமளா தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர்.

தொழில்

தொகு

சுவர்கா சீமா (1945) மற்றும் யோகி வேமனா (1947) போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடிகராக திரைத்துறையில் நுழைந்தார். 1946 ஆம் ஆண்டில் வெளியான தியாகையா திரைப்படத்தில் வீணைக் கலைஞராக நடித்திருந்தார் .

பின்னர், இவர் கன்னடத் திரையுலகில் 1967இல் நக்கரே அடே சுவர்கா திரைப்படத்தின் முழு இசையமைப்பாளராக நுழைந்தார். புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் அறிமுகமாகவும் இது இருந்தது. மூத்த பாடகி பி. சுசீலாவுடன் இணைந்து பாடலை வழங்குவதன் மூலம் கன்னடப் படங்களுக்கு இவர், பாலசுப்பிரமணியத்தை அறிமுகப்படுத்தினார்.[4]

கன்னடத்தில் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்ததோடு, தெலுங்கு, தமிழ் , மலையாள மொழிகளிலும் ஒரு சில படங்களுக்கு இசையமைத்திருந்தார். அவற்றில் பெரும்பாலானவை இவரது கன்னட பாடல்களின் மறு ஆக்கமாகும்.

இறப்பு

தொகு

எம். ரங்கா ராவ் புற்றுநோய் காரணமாக 1990 ஆகத்து 2 ஆம் தேதி தனது 58 வயதில் இறந்தார்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ganesh, Deepa (2021-09-30). "M. Ranga Rao's wide musical canvas" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/music/m-ranga-raos-wide-musical-canvas/article36752403.ece. 
  2. "SP Balasubrahmanyam's journey in Kannada cinema". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 26 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
  3. Service, Express News (26 September 2020). "SP Balasubrahmanyam swara of perfect brilliance". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
  4. http://www.hindilyrix.com/singers/singer-balasubramanyam.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ரங்கா_ராவ்&oldid=4098370" இலிருந்து மீள்விக்கப்பட்டது