எம். சாரதா மேனன்

மனநல மருத்துவர்

மா. சாரதா மேனன் (M. Sarada Menon, 5 ஏப்ரல் 1923 – 5 திசம்பர் 2021) என்பவர் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் மற்றும் ஸ்கார்ப் என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கிய பெண்மணி ஆவார்.[1] இவர் பத்ம பூசண் விருது, அவ்வையார் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.[2][3]

மா. சாரதா மேனன்
பிறப்புஏப்ரல் 5, 1923 (1923-04-05) (அகவை 101)
மங்களூர், கருநாடகம், இந்தியா
இறப்பு5 திசம்பர் 2021(2021-12-05) (அகவை 98)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிமனநல மருத்துவர்
சமூகப் பணியாளர்
செயற்பாட்டுக்
காலம்
1951 இலிருந்து
அறியப்படுவதுஸ்கார்ப் (SCARF)
விருதுகள்பத்ம பூசண்
அவ்வையார் விருது
மாநிலவளவில் சிறந்த மருத்துவர் விருது
வலைத்தளம்
இணையதளம் (SCARF)

பணிகள்

தொகு

மனவியல் படிப்பை சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் எம்டி கல்வியை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் முடித்தார். மனநல சென்னை நிறுவனத்தில் கண்காணிப்பாளாராகப் பணியில் 1961இல் சேர்ந்தார். அரசின் மனநல மருத்துவ மனையின் தலைவராகவும் இருந்தார்[4].

1984 இல் ஸ்கார்ப் என்னும் சேவை நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அந்நிறுவனம் மன நோயாளிகளைப் பேணுதல், அவர்களுக்கு சிகிக்சை, மறுவாழ்வு அளித்தல், தொழில், வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகள் அளித்தல் போன்றவற்றைச் செய்கிறது. தமிழ்நாடு அரசு மருத்துவர் சாரதா மேனனுக்கு 2016 ஆம் ஆண்டுக்குரிய அவ்வையார் விருதை வழங்கி அவரைக் கவுரவித்தது.[5]

மேலும் சென்னையில் உள்ள இந்தியன் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் சாரதா மேனனுக்கு 2016 ஆம் ஆண்டுக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது.[6]

இவர் சென்னையில் 2021, திசம்பர் 5, அன்று தன் 98வது வயதில் இறந்தார்.[7]

மேற்கோள்

தொகு
  1. "Sarada Menon Chosen for Avvaiyar Award". The Indian Express. 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் May 23, 2016.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. http://www.thehindu.com/news/cities/chennai/avvaiyar-award-for-sarada-menon/article8872735.ece
  4. "Focus on Rehab of Mentally-ill". The Indian Express. 7 March 2016. பார்க்கப்பட்ட நாள் May 23, 2016.
  5. http://timesofindia.indiatimes.com/city/chennai/Sarada-Menon-gets-Avvaiyar-award/articleshow/53294492.cms
  6. http://www.thehindu.com/news/cities/chennai/mother-teresa-award-for-dr-sarada-menon/article9268961.ece
  7. "India’s first woman psychiatrist, Sarada Menon, passes away at 98". The Hindu. 6 December 2021. https://www.thehindu.com/news/national/tamil-nadu/indias-first-woman-psychiatrist-sarada-menon-passes-away-at-98/article37859342.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சாரதா_மேனன்&oldid=3816938" இலிருந்து மீள்விக்கப்பட்டது