எம். ஜே. ஜமால் முஹைய்யதீன் இராவுத்தர்

(எம். ஜே. ஜமால் முஹைய்யதீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எம். ஜே. ஜமால் முஹைய்யதீன் சாகிப் (M. J. Jamal Mohideen Sahib) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில் (அப்போதைய மதுரை மாவட்டம்) 1957 ஆம் ஆண்டு திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பிறப்பு

தொகு

இவர், 1904 ஆகத்து 15 அன்று திண்டுக்கல்லில் பிறந்தார். இவர் நிலசுவாந்தாரும், மதராஸ் மாகாண அரசியல்வாதியும், பெரும் வணிகராக திகழ்ந்த ஜமால் முகமது ராவுத்தர் சாகிப் அவர்களின் மகனாவார்.[2]

முஸ்லிம் லீக்கில்

தொகு

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் முஸ்லிம் லீக்கில் சென்னை மாகாண கௌரவ செயலாளராக பொறுப்பு வகித்தார்.

பொறுப்புகள்

தொகு
  • தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்கத் துணைத்தலைவர்
  • தோல் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் சங்கத் துணைத்தலைவர்
  • 1951 முதல் 1966 வரை ஜமால் முகமது கல்லூரியின் நிறுவனச் செயலாளர் [3],[4]
  • நிர்வாக சபை உறுப்பினர் - மத்திய தோல் நிறுவனம், சென்னை
  • விற்பனை வரி ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்
  • உறுப்பினர், இந்திய தரநிலை நிறுவனம்
  • உறுப்பினர், இந்திய விவசாய ஆராய்ச்சி அமைப்பு

மேற்கோள்கள்

தொகு