எம். பி. சுப்பிரமணியம்
எம். பி. சுப்பிரமணியம் (M. P. Subramaniam)(சூலை 1, 1925-ஏப்ரல் 12, 2005) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சேலம் மாவட்டத்தினைச் சேர்ந்த சுப்பிரமணியம், தனது பள்ளிக் கல்வியினை சேலம் சிறுமலர் பள்ளியிலும் கல்லூரிக் கல்வியினை திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியிலும் கற்றார்.
சுப்பிரமணியம் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியிலிருந்து இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் முதலில் 1952-ல் சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுப்பிரமணியம் 1980 முதல் 1983 வரை தமிழ்நாடு காங்கிரசு பிரிவின் தலைவராகவும், பின்னர் 1984 முதல் 1986ஆம் ஆண்டு அப்போதைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசால் சட்டமன்றம் கலைக்கப்படும் வரை சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.[1]
மறைந்த சிவாஜி கணேசன் 1989-ல் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, சுப்பிரமணியம் சிவாஜியுடன் இணைந்து, காங்கிரசுக்குத் திரும்பும் வரை செயல் தலைவராகப் பணியாற்றினார். 1998-ல் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். சுப்பிரமணியம் 12 ஏப்ரல் 2005 அன்று தனியார் மருத்துவமனையில் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Madras Legislature Who is Who 1957 (in English). Madras: Legislature Department, Madras. p. 54.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "M.P. Subramaniam dead". The Hindu. 12 April 2005. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mp-subramaniam-dead/article27347276.ece. பார்த்த நாள்: 28 October 2019.