எம். விஜயகுமார்
எம். விஜயகுமார் (M. Vijayakumar) (பிறப்பு 5 அக்டோபர் 1950), இந்தியப் பொதுவுடமைக் கட்சியைச் (மார்க்சிசம்) சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் கேரள சட்டமன்றத்தில் உறுப்பினராகவும், அமைச்சராகவும், பேரவைத் தலைவராகவும் பணியாற்றினார்.[1][2] இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) மாநில மற்றும் மத்திய குழுவில் இருந்தார். சட்டமன்ற உறுப்பினராக, முன்னாள் திருவனந்தபுரம் வடக்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3]
எம். விஜயகுமார் | |
---|---|
சட்டம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர், கேரள அரசு | |
பதவியில் 2006–2011 | |
முன்னையவர் | க. மா. மாணி |
பின்னவர் | க. மா. மாணி, பி.கே. ஜெயலட்சுமி |
கேரள சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் | |
பதவியில் 1996–2001 | |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2006–2011 | |
தொகுதி | திருவனந்தபுரம் வடக்கு, திருவனந்தபுரம் |
பதவியில் 1987–2001 | |
தொகுதி | திருவனந்தபுரம் வடக்கு, திருவனந்தபுரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 அக்டோபர் 1950 நெடுமங்காடு, திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) |
துணைவர் | சிறீலேகா |
பிள்ளைகள் | அரவிந்த், அர்ச்சனா |
தொழில்
தொகுஎம். விஜயகுமார், கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு அருகே உள்ள பனக்கோட்டில் 5 அக்டோபர் 1950 இல் பிறந்தார். கலையில் இளங்கலை பட்டம் பெற்ற இவர் இளங்கலை சட்டமும் பெற்றுள்ளார். இவர் மாணவர் இயக்கத்தின் மூலம் அரசியலில் நுழைந்தார். 1970இல் இந்திய மாணவர் சங்கத்திலும், 1980இல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் தீவிரமாக பங்கேற்றார். தனது அரசியல் வாழ்க்கையின் போது, இவர் பல்வேறு காலங்களில் இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநில செயலாளரகவும், மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளராகவும், அகில இந்திய தலைவராகவும் இருந்துள்ளார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) மாநில குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
நெருக்கடி நிலை காலத்தில், பல முறை கைது செய்யப்பட்டு காவலர்களால் தாக்கப்பட்டார்.[4] அப்போது திருவனந்தபுரம் பூஜாப்புரம் மத்திய சிறையில் நான்கு மாதங்கள் சிறையில் இருந்தார்.[4] 1981 செப்டம்பரில் நாடாளுமன்ற முற்றுகை உட்பட பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வி , அனைவருக்கும் வேலை என்ற முழக்கத்தை எழுப்பி, அரசுப்பணிக்கு கேரள அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கூறி போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். இதன் காரணமாக காவல்துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.[4]
1987, 1991, 1996 ஆகிய காலங்களில் கேரளா சட்டமன்றத்துக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 முதல் 2001 வரை பத்தாவது கேரள சட்டப் பேரவைத் தலைவராகப் பணியாற்றினார். 2001 சட்டமன்றத் தேர்தலில், இவர் தோல்வியை சந்தித்தார். 2006இல் மீண்டும் வென்றார். அந்த சமயத்தில் மாநில அமைச்சரவையில் சட்ட அமைச்சரானார். 2011இல் தேர்தலில் போட்டியிடவில்லை. 2015 ஆம் ஆண்டில், கேரள சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜி. கார்த்திகேயன் இறந்ததால் காலியாக இருந்த அருவிக்கரை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் கார்த்திகேயனின் மகன் கா. சு. சபரிநாதனால் தோற்கடிக்கப்பட்டார்.
இவர் தற்போது கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக உள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Council of Ministers - Kerala". கேரள சட்டமன்றம். பார்க்கப்பட்ட நாள் 15 January 2010.
- ↑ "Vijayakumar re-elected CPI(M) district secretary" இம் மூலத்தில் இருந்து 2 மார்ச் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050302082010/http://www.hindu.com/2005/01/16/stories/2005011607530400.htm. பார்த்த நாள்: 15 January 2010.
- ↑ "Members of Legislative Assempbly". கேரள அரசு. Archived from the original on 30 January 2010. பார்க்கப்பட்ட நாள் 15 January 2010.
- ↑ 4.0 4.1 4.2 "M. Vijayakumar". Government of Kerala. Archived from the original on 31 December 2009. பார்க்கப்பட்ட நாள் 15 January 2010.