எய்ட்கின் பென்ஸ்

எய்ட்கின் பென்ஸ் (Aitken Spence, ஸ்கொட்லாந்து உச்சரிப்பு: /ɪtkinˈspɛns/, சிங்களம்: එයිට්කින් ස්පෙන්ස්) ஓர் இலங்கைப் பொதுப் பங்கு நிறுவனம் ஆகும். இதன் வணிக நடவடிக்கைகளை தென்னாசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, பசுபிக் பகுதிகளில் மேற்கொள்கிறது.[1][2] இது கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை யில் 1983ஆம் ஆண்டு முதல் நிரற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதன்மையான வணிக ஈடுபாடுகள் விடுதிகள், பயண ஏற்பாடுகள், கப்பல் போக்குவரத்துச் சேவைகள், பெயர்ச்சியியல், மின்னுற்பத்தி ஆகிய துறைகளைச் சார்ந்து உள்ளன. .[1] மேலும் இக்குழுமம் பெருந்தோட்டம், நிதிச் சேவைகள், தகவல் தொழினுட்பம், வணிகச் செயலாக்க அயலாக்கம், அறிவுச் செயலாக்க அயலாக்கச் சேவைகள், அச்சிடல், உயர்த்தி முகவர் சேவைகள், ஆடை உற்பத்தி, கட்டட அபிவிருத்தி போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்களவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.[1]

எய்ட்கின் பென்ஸ்
வகைபொது
நிறுவுகை1868
நிறுவனர்(கள்)பற்றிக்கு கோடேன்ஜெண்ட் பென்சு
தோமசு கிளாக்கு
எடுவேடு எயிற்கின்
எசு. ஆர். எயிற்கின்
தலைமையகம்கொழும்பு, இலங்கை
சேவை வழங்கும் பகுதிஇலங்கை, மாலைத்தீவுகள், வங்காளதேசம்,
இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஓமான், பிசி
முதன்மை நபர்கள்அரி செயவர்தன
(தலைவர்),
இராஜன் பிரிட்டோ
(துணைத் தலைவரும், முகாமைத்துவ இயக்குநரும்),
உரோகன் பெருனாண்டோ (இயக்குநர்),
பராக்கிரம திசநாயக்க (இயக்குநர்),
தசானி செயவர்தன (இயக்குநர்)
தொழில்துறைஓய்வு
போக்குவரத்தும் பெயர்ச்சியியலும்
மின் உற்பத்தி
தகவல் தொழினுட்பம்
நிதிச் சேவைகள்
வணிகச் செயலாக்க அயலாக்கம்
அறிவுச் செயலாக்க அயலாக்கம்
அச்சிடல்
ஆடை உற்பத்தி
பெருந்தோட்டப் பணிகள்
கட்டட அபிவிருத்தி
வருமானம் 279.9 மில்லியன் அமெரிக்கத் தொலர் (2013/14)
இயக்க வருமானம் 43.6 மில்லியன் அமெரிக்கத் தொலர் (2013/14)
நிகர வருமானம் 34.4 மில்லியன் அமெரிக்கத் தொலர் (2013/14)
மொத்தச் சொத்துகள் 467.7 மில்லியன் அமெரிக்கத் தொலர் (2013/14)
மொத்த பங்குத்தொகை 296.6 மில்லியன் அமெரிக்கத் தொலர் (2013/14)
பணியாளர்13,000 (2012)
இணையத்தளம்அலுவன்முறை இணையத்தளம்

எய்ட்கின் பென்ஸ், ஃபோர்ப்ஸ் இதழினால் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக, ஐக்கிய அமெரிக்காவுக்கு அப்பால் ஒரு பில்லியன் அமெரிக்கத் தொலருக்கு உட்பட்ட ஆண்டு விற்பனையை மேற்கொள்ளும் பொதுப்பங்கு நிறுவனங்களுள் மிக வெற்றிகரமான பொதுப் பங்கு நிறுவனமாக இனங்காணப்பட்டுள்ளது .[3] எய்ட்கின் பென்ஸ், முதன்மை வெற்றியாளராகச் 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த பெருநிறுவனக் குடிமகன் விருதுகளில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் தெரிவுசெய்யப்பட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Aitken Spence posts Rs 1.7b profit in 1H". Daily News (Colombo, Sri Lanka). 5 November 2011 இம் மூலத்தில் இருந்து 18 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130218224018/http://www.dailynews.lk/2011/11/05/bus05.asp. பார்த்த நாள்: 10 January 2012. 
  2. "Aitken Spence takes control of Fijian ports". Port Technology International. 31 July 2013. http://www.porttechnology.org/news/aitken_spence_takes_control_of_fijian_ports/. பார்த்த நாள்: 1 August 2013. 
  3. Aitken Spence. "About Us". Aitken Spence. Archived from the original on 20 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 17 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Aitken Spence bags Best Corporate Citizen Award 2012". Daily Mirror (Colombo, Sri Lanka). 13 November 2012. http://www.dailymirror.lk/business/other/23439-aitken-spence-bags-best-corporate-citizen-award-2012-.html. பார்த்த நாள்: 13 November 2012. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்ட்கின்_பென்ஸ்&oldid=3928199" இலிருந்து மீள்விக்கப்பட்டது