எய்ட்கின் பென்ஸ்
எய்ட்கின் பென்ஸ் (Aitken Spence, ஸ்கொட்லாந்து உச்சரிப்பு: /eɪɪtkinˈspɛns/, சிங்களம்: එයිට්කින් ස්පෙන්ස්) ஓர் இலங்கைப் பொதுப் பங்கு நிறுவனம் ஆகும். இதன் வணிக நடவடிக்கைகளை தென்னாசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, பசுபிக் பகுதிகளில் மேற்கொள்கிறது.[1][2] இது கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை யில் 1983ஆம் ஆண்டு முதல் நிரற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதன்மையான வணிக ஈடுபாடுகள் விடுதிகள், பயண ஏற்பாடுகள், கப்பல் போக்குவரத்துச் சேவைகள், பெயர்ச்சியியல், மின்னுற்பத்தி ஆகிய துறைகளைச் சார்ந்து உள்ளன. .[1] மேலும் இக்குழுமம் பெருந்தோட்டம், நிதிச் சேவைகள், தகவல் தொழினுட்பம், வணிகச் செயலாக்க அயலாக்கம், அறிவுச் செயலாக்க அயலாக்கச் சேவைகள், அச்சிடல், உயர்த்தி முகவர் சேவைகள், ஆடை உற்பத்தி, கட்டட அபிவிருத்தி போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்களவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.[1]
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1868 |
நிறுவனர்(கள்) | பற்றிக்கு கோடேன்ஜெண்ட் பென்சு தோமசு கிளாக்கு எடுவேடு எயிற்கின் எசு. ஆர். எயிற்கின் |
தலைமையகம் | கொழும்பு, இலங்கை |
சேவை வழங்கும் பகுதி | இலங்கை, மாலைத்தீவுகள், வங்காளதேசம், இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஓமான், பிசி |
முதன்மை நபர்கள் | அரி செயவர்தன (தலைவர்), இராஜன் பிரிட்டோ (துணைத் தலைவரும், முகாமைத்துவ இயக்குநரும்), உரோகன் பெருனாண்டோ (இயக்குநர்), பராக்கிரம திசநாயக்க (இயக்குநர்), தசானி செயவர்தன (இயக்குநர்) |
தொழில்துறை | ஓய்வு போக்குவரத்தும் பெயர்ச்சியியலும் மின் உற்பத்தி தகவல் தொழினுட்பம் நிதிச் சேவைகள் வணிகச் செயலாக்க அயலாக்கம் அறிவுச் செயலாக்க அயலாக்கம் அச்சிடல் ஆடை உற்பத்தி பெருந்தோட்டப் பணிகள் கட்டட அபிவிருத்தி |
வருமானம் | ▼ 279.9 மில்லியன் அமெரிக்கத் தொலர் (2013/14) |
இயக்க வருமானம் | ▲ 43.6 மில்லியன் அமெரிக்கத் தொலர் (2013/14) |
நிகர வருமானம் | ▲ 34.4 மில்லியன் அமெரிக்கத் தொலர் (2013/14) |
மொத்தச் சொத்துகள் | ▲ 467.7 மில்லியன் அமெரிக்கத் தொலர் (2013/14) |
மொத்த பங்குத்தொகை | ▲ 296.6 மில்லியன் அமெரிக்கத் தொலர் (2013/14) |
பணியாளர் | 13,000 (2012) |
இணையத்தளம் | அலுவன்முறை இணையத்தளம் |
எய்ட்கின் பென்ஸ், ஃபோர்ப்ஸ் இதழினால் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக, ஐக்கிய அமெரிக்காவுக்கு அப்பால் ஒரு பில்லியன் அமெரிக்கத் தொலருக்கு உட்பட்ட ஆண்டு விற்பனையை மேற்கொள்ளும் பொதுப்பங்கு நிறுவனங்களுள் மிக வெற்றிகரமான பொதுப் பங்கு நிறுவனமாக இனங்காணப்பட்டுள்ளது .[3] எய்ட்கின் பென்ஸ், முதன்மை வெற்றியாளராகச் 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த பெருநிறுவனக் குடிமகன் விருதுகளில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் தெரிவுசெய்யப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Aitken Spence posts Rs 1.7b profit in 1H". Daily News (Colombo, Sri Lanka). 5 November 2011 இம் மூலத்தில் இருந்து 18 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130218224018/http://www.dailynews.lk/2011/11/05/bus05.asp. பார்த்த நாள்: 10 January 2012.
- ↑ "Aitken Spence takes control of Fijian ports". Port Technology International. 31 July 2013. http://www.porttechnology.org/news/aitken_spence_takes_control_of_fijian_ports/. பார்த்த நாள்: 1 August 2013.
- ↑ Aitken Spence. "About Us". Aitken Spence. Archived from the original on 20 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 17 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Aitken Spence bags Best Corporate Citizen Award 2012". Daily Mirror (Colombo, Sri Lanka). 13 November 2012. http://www.dailymirror.lk/business/other/23439-aitken-spence-bags-best-corporate-citizen-award-2012-.html. பார்த்த நாள்: 13 November 2012.