எரிமலையியல்

எரிமலையியல் (Volcanology) என்பது எரிமலைகள், எரி கற்குழம்பு, கற்குழம்பு ஆகியவை பற்றிய படிப்பு ஆகும். அத்துடன் அவற்றோடு தொடர்புடைய நிலவியல், புவி இயற்பியல் மற்றும் புவி வேதியியல் நிகழ்வுகளையும் பற்றிய ஒரு அறிவியலாகும். volcanology என்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் சொல்லான வல்கன் வல்கன் என்ற பண்டைய உரோமர்களின் கடவுளின் பெயரில் இருந்து பெறப்பட்டது..

எரிமலை நிபுணர் ஒருவர் ஒரு பாறைச் சுத்தி மற்றும் ஒரு வாளி தண்ணீரைப் பயன்படுத்தி எரிமலை மாதிரியை ஆராய்கிறார்.

எரிமலையியலாளர் என்பவர் எரிமலையின் வெடித்துச் சிதறல், எரிமலைகள் உருவாகும் விதம், தற்போதைய சீற்றம் பழைய எரிமலைகளின் வரலாறு ஆகியவற்றை ஆய்வு செய்யும் ஒரு புவியியல் வல்லுநர். இவர்கள் அடிக்கடி எரிமலைகளை குறிப்பாக எரிமலை வெடிப்புகளைச் சென்று பார்வையிடுவார்கள். அவைகளின் சீற்றத்தினால் உருவான சாம்பல் மற்றும் நுரைப் பாறைகள், பாறைகள் மற்றும் பாறைக் குழம்புகளின் மாதிரி அல்லது பதக்கூறுகளை சேகரிப்பதற்காக இவற்றை பார்வையிடுவார்கள். இவர்களின் முக்கிய கவனம் அல்லது முன்னிறுத்தி ஆராய்வது எரிமலை வெடிக்கும் நேரத்தைக் கணிப்பதுதான், ஏனென்றால் தற்போது அதை கணிப்பதற்கு எந்த ஒரு கருவியும் கிடையாது. ஆனால் எரிமலை வெடிப்பு அல்லது சீற்றம் மற்றும் புவி அதிர்வை வரும் முன்னாலே கணிக்கக் கூடிய கருவி ஏதேனும் இருக்குமானால் அநேகரின் வாழ்க்கை காப்பாற்றப் படக்கூடும்.

நவீன எரிமலையியல்

தொகு
 
தென்-மத்திய ஐசுலாந்தில் எரிமலையை சோதனையிடும் எரிமலையியலாளர்.

1841 ல் முதல் எரிமலை ஆராய்ச்சி நிலையம் இரு சிசிலி நாட்டில நிறுவப்பட்டது[1].(சிசிலி நாடும் இத்தாலியும் இணைந்திருந்தது). இதன் பெயர் வெசுவியஸ் ஆராய்ச்சி நிலையம் ஆகும்.

நிலநடுக்கம் சார்ந்த ஆராய்ச்சிகள் எரிமலை வெடித்திருந்த இடத்திற்கு அருகில் நிலநடுக்கமானி கொண்டு ஆராயப்பட்டது. அந்த ஆய்வில் எரிமலைச் சீற்றத்தின் போது நிலநடுக்கத்தின் அளவு அதிகரிக்கிறதா? ஒரே சீராக நிலநடுக்கம் ஏற்படுகிறதா? இவைகள் மாக்மா அல்லது பாறைக்குழம்புகள் வழிந்தோடுவதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறதா என்பவைகள் ஆராயப்பட்டன. புவியின் மேற்பரப்பின் உருமாற்றங்கள் புவிப்பாத்த கருவிகளைக் கொண்டு செய்யப்பட்டது. சமன்படுத்துதல், உழுதல், நிலத் திரிபு, கோணங்கள் மற்றும் தொலைவை கணக்கிடுதல் அனைத்தும் அவற்றிற்கான கருவிகளைக் கொண்டு நடை முறைப் படுத்தப் பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Vulcani attivi பரணிடப்பட்டது 2018-03-22 at the வந்தவழி இயந்திரம், INGV, accessed 29 August 2016.
  2. Robert Decker and Barbara Decker, Volcanoes, 4th ed., W. H. Freeman, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-8929-9

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிமலையியல்&oldid=3510240" இலிருந்து மீள்விக்கப்பட்டது