எருமை நாக்கு

எருமை நாக்கு, நாக்குமீன் (விலங்கியல் பெயர்: Psettodes erumei)[1][2] கடலில் வாழும் தட்டையான மீன் இனமாகும். இவை பெரும்பாலும், வெப்ப வலய, சமதட்ப வெப்ப வலயக் கடல்களில் வாழ்பவை ஆகும். சில இனங்கள் முகத்துவாரங்களிலும், ஆறுகளினுள்ளே சென்றும் வாழும் இயல்புடையவை ஆகும். இந்த மீன்கள் எப்போதும் ஒரே பக்கம் சேற்றில் பொருந்தியும், அதனுள் புதைந்தும் கிடக்கும் இயல்பைப் பெற்றுள்ளன.

எருமை நாக்கு:இந்திய இனம்
எருமை நாக்கு:பாக்கித்தானிய இனம்

தனித்துவமான கண்ணமைப்பு

தொகு

பொதுவாகத் தட்டையான மீன்களின் கண்கள் ஒரு பக்கத்துக்கு ஒன்றாக இருப்பதற்கு மாறாக எருமை நாக்கு மீனின் ஒரு கண் ஒரு பக்கத்திலும் மற்றொன்று மறுபக்கம் அமையாமல் முதுகின் நடுக்கோட்டிலும் அமைந்திருப்பது தனித்தன்மையானதாகும். இதற்குக் காரணம், இது சேற்றில் ஒருபக்கமாகப் படுத்து இருப்பதே காரணம் என்று கருதலாம் (ஆகவே கண் சேற்றில் பதிந்திருக்கும் பக்கம் இல்லாமல் இருக்கும்). பலவகைகளில் வலப்பக்க உடல் மேல் நோக்கியும், இடப்பக்கம் சேற்றில் பதிந்தும் இருக்கும். சிலவகை மீன்கள் மட்டும் இதற்கு மாறாக இருக்கும். ஒரே இனத்தில் சிலவற்றில் வலப்புறம் மேல் நோக்கியும், சிலவற்றில் இடப்புறம் மேல் நோக்கியும் இருக்கும் இயல்புடையதாக உள்ளன. எப்போதும் தரையில் படியும் பக்கம் நிறத்தால் வெளுத்தும், மேற்பக்கம் கருமையான வரிகளும், புள்ளிகளும் உள்ளதாகவும் இருக்கும். இம்மீன்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு இவற்றின் நிறம் மாறும். இந்நிறமாற்றத்தால், இவை பிற விலங்கினங்களுக்குத் தென்படாமல் மறைந்திருக்கும்.

மாற்றமடையும் குஞ்சுகள்

தொகு

மற்ற மீன்களைப் போலவே, முட்டைப் பொரித்துக் குஞ்சாக இருக்கும் நிலையில், கண்கள் பக்கத்திற்கு ஒன்றாகவும், உடல் சமச்சீருடனும், தோற்றமளிக்கும். இம்மீனின் உடல், வலம் இடமாக அழுந்திக் குறுகியும், மேல்கீழாக அகன்றும் இருக்கும். இளம்பருவத்தில் விரிகடலில் நீந்தித்திரியும் இயல்புடையது. ஆனால், வளர வளரச் சேற்றில் ஒரு புறமாகப் படியும் குணத்தைப் பெறுகிறது. அதற்கேற்பத் தலையிலுள்ள எலும்புக்கூட்டின் முற்பகுதி முறுக்கிக் கொண்டு வளருகிறது. இதனால் இடப்பக்கத்தில் படியும் இனமானால், அப்பக்கத்துக் கண் மெல்லமெல்ல, வலப்பக்கமாக வந்துவிடுகிறது. சமச்சீரில் அமைந்த மரபிலிருந்து தோன்றியத் தன் வாழ்க்கைக்கு ஏற்றவாறு, இரண்டு கண்களும் ஒரே பக்கம் வரவும், இன்னும் சில மாறுதல்களை அடைந்தும், சமச்சீரை இழந்து, அசமச்சீருடையதாக, இம்மீன்குஞ்சு பரிணமித்து, முதிர்வடைந்து வாழ்கிறது.

மாற்ற விளைவுகள்

தொகு
  • "செட்டோடிசு"(Psettodes) எருமை மீனின் வலப்புறப்பார்வை, இடக்கண் முதுகின் நடுக்கோட்டில் இருப்பதைக் காணலாம். அந்த மீனின் முன்பார்வை, கண்கள், வாய், செவுள் மூடிகள், முன்பின் இணைத்துடுப்புகள், முதுகுத்துடுப்பு, கீழ்துடுப்பு ஆகிய உறுப்புகளைக் காணும் படி உள்ளன.
  • 'பிளகூசியா மார்மொரேட்டா' என்னும் நெடுநாக்கு மீனின் இடப்புறப் பார்வை, வலக்கண் இடப்புறத்தில் நெடுந்தூரம் முறுக்கிக்கொண்டு இறங்கி வந்திருப்பதைக் காணலாம்.
  • 'பிளைசு' மீனின் முட்டை, அதனுள் வளர்ந்திருக்கும் கருவில் கண்கள் சமச்சீரில் அமைந்திருப்பதைக் காணலாம்.
  • 'டர்பாட்டு' மீனின் லார்வாவுக்கு அடுத்த நிலை. உடல் சமச்சீராக இருப்பதும், செங்குத்துத் தளத்தில் அகன்றிருப்பதையும் காணலாம்.

பொருளாதாரப் பயன்கள்

தொகு

எருமைநாக்கு மீன்வகைகளில், பல இனங்கள் மிகச்சிறந்த உணவு மீன்கள் ஆகும். சோல், பிளைசு, டர்பெட்டு, ஆலிபட்டு, பிளவுண்டர் என்பவை தட்டையான மீன் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். தமிழ்நாட்டுக் கடல்களில் எருமைநாக்கு (செட்டோடிசு எருமை), நாக்கு (சியூடொராம்பசு ஆர்சியசு) என்பவை மிகுதியாக கிடைக்கும் சுவை மிகுந்த மின்களாகும். நெடுநாக்கு (பிளகூசியா மார்மரேட்டா), 'சைனாகிளாசிசு லிங்குவா' என்ற மீன் இனமும், 'சைனாப்ட்டுரா கார்னூட்டா' என்ற மீன் இனமும் அகப்படுவதுண்டு.

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு

இவற்றையும் காணவும்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Psettodes erumei
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமை_நாக்கு&oldid=2651314" இலிருந்து மீள்விக்கப்பட்டது