எர்பியம் சேர்மங்கள்
எர்பியம் சேர்மங்கள் (Erbium compounds) எர்பியம் தனிமம் இடம்பெற்றுள்ள அனைத்து வேதிச் சேர்மங்களையும் குறிக்கும். இந்த சேர்மங்களில் பொதுவாக +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் எர்பியம் ஆதிக்கம் செலுத்துகிறது.[1] இருப்பினும் +2, +1 மற்றும் 0 என்ற ஆக்சிசனேற்ற நிலை சேர்மங்களும் பதிவாகியுள்ளன.
ஆக்சைடுகள்
தொகுஎர்பியா என்று அழைக்கப்படும் எர்பியம்(III) ஆக்சைடு மட்டுமே எர்பியத்தின் ஒரே ஆக்சைடு ஆகும். 1843 ஆம் ஆண்டில் காரல் குசுதாஃப் மொசாண்டர் என்பவரால் முதலில் தனிமைப்படுத்தப்பட்டது. முதன்முதலில் 1905 ஆம் ஆண்டு சியார்ச்சசு அர்பைன் மற்றும் சார்லசு இயேம்சு ஆகியோரால் தூய வடிவில் பெறப்பட்டது.[2] எர்பியாவானது பிக்சுபைட்டு மையக்கருத்தை ஒத்த கனசதுர அமைப்பைக் கொண்டுள்ளது. Er3+ மையங்கள் எண்முகங்களாக உள்ளன.[3] எர்பியம் உலோகத்தை எரிப்பதன் மூலம் எர்பியம் ஆக்சைடு உருவாக்கம் செய்யப்படுகிறது.[4] எர்பியம் ஆக்சைடு நீரில் கரையாது ஆனால் கனிம அமிலங்களில் கரையும்.
ஆலைடுகள்
தொகுஎர்பியம்(III) புளோரைடு என்பது இளஞ்சிவப்பு நிற தூள் ஆகும்.[5] இது எர்பியம்(III) நைட்ரேட்டு மற்றும் அமோனியம் புளோரைடை வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[6] அகச்சிவப்பு ஒளி-கடத்தும் பொருட்கள் தயாரிக்கவும் [7]காணொளி சமிக்ஞையை உயர் தெளிவுத்திறனுக்கு மாற்றியமைக்கும் ஒளிரும் பொருட்களை உருவாக்க இது பயன்படுத்தப்படுகிறது.[8] எர்பியம்(III) குளோரைடு என்பது ஊதா நிறச் சேர்மமாகும். எர்பியம்(III) ஆக்சைடு சேர்மத்துடன் அமோனியம் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தி ([NH4]2ErCl5) சேர்மத்தை உருவாக்கி பின்னர் இவ்விளை பொருளை 350-400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சூடாக்கப்பட்டு இது தயாரிக்கப்படுகிறது.[9][10][11] AlCl3 கட்டமைப்பில் C2/m இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சுப் படிகங்களை இது உருவாக்குகிறது.[12] எர்பியம்(III) குளோரைடு அறுநீரேற்றும் P2/n (P2/c) - C42h. என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் உருவாகிறது. இந்த சேர்மத்தில் எர்பியம் எண்முக ஒருங்கிணைப்பில் உள்ளது. [Er(H2O)6Cl2]+ நேர்மின் அயனி Cl− அயனியுடன் சேர்ந்து கட்டமைப்பை நிறைவு செய்கிறது.[13]
எர்பியம்(III) புரோமைடு ஓர் ஊதா நிறத் திடப்பொருள் ஆகும். மற்ற உலோக புரோமைடு சேர்மங்களைப் போலவே, இதுவும் நீர் சுத்திகரிப்பு, இரசாயன பகுப்பாய்வு மற்றும் சில படிக வளர்ச்சி பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.[14] எர்பியம்(III) அயோடைடு[15] என்பது தண்ணீரில் கரையாத இளஞ்சிவப்பு நிற சேர்மமாகும். எர்பியத்தை அயோடினுடன் நேரடியாக வினைபுரியச் செய்து இதை தயாரிக்கலாம்.[16]
போரைடுகள்
தொகுஎர்பியம் டெட்ராபோரைடு என்பது எர்பியத்தின் போரைடு ஆகும்.[15] கடினமான இச்சேர்மம் உயர் கொதிநிலையைக் கொண்டுள்ளது. குறைக்கடத்திகள், எரிவாயு விசையாழிகளின் கத்திகள் மற்றும் இராக்கெட் இயந்திரங்களின் முனைகளில் பயன்படுத்தப்படுகிறது.[17] எர்பியத்தின் மற்றொரு போரைடு எர்பியம் அறுபோரைடு ஆகும். இது கால்சியம் அறுபோரைடின் கட்டமைப்பில் உள்ளது. இலந்தனம் அறுபோரைடு, சமாரியம் அறு போரைடு மற்றும் சீரியம் அறுபோரைடு உள்ளிட்ட மற்ற அனைத்து அருமண் அறுபோரைடு சேர்மங்களுடனும் சம கட்டமைப்பு கொண்டதாக உள்ளது.[18]
பிற சேர்மங்கள்
தொகுஎர்பியம்(III) ஐதராக்சைடு என்பது ஓர் இளஞ்சிவப்பு நிற திடப்பொருளாகும். உயர்ந்த வெப்பநிலையில் ErO(OH) ஆக சிதைகிறது. பின்னர் மேலும் வெப்பப்படுத்தினால் எர்பியம்(III) ஆக்சைடு ஆக உருவாகும்.[19] எர்பியம்(III) பாசுபைடும் (ErP [20][21][22][23]) இளஞ்சிவப்பு நிற திண்மமாகும். எர்பியமும் பாசுபரசும் நேரடியாக வினைபுரிவதால் இச்சேர்மம் உண்டாகிறது. Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிகங்களாக எர்பியம்(III) பாசுபைடு உருவாகிறது. எர்பியம்(III) நைட்ரேட்டு (Er(NO3)3[24][25][26] இளஞ்சிவப்பு படிகங்களாக உருவாகிறது. இது தண்ணீரில் எளிதில் கரையும். படிக நீரேற்றுகளை உருவாக்கும்.[27][28] எர்பியம்(III) அசிடேட்டும் ஒரு இலேசான இளஞ்சிவப்பு திடப்பொருளாகும், இது சில ஒளியியல் பொருட்களை தயாரிக்கப் பயன்படுகிறது. .[29] எர்பியம்(III) அசிடேட்டின் டெட்ரா ஐதரேட்டு 90 °செல்சியசு வெப்பநிலையில் சிதைந்து, தேவையான நீரிலியை அளிக்கிறது.
- Er(CH3COO)3·4H2O → Er(CH3COO)3 + 4 H2O
தொடர்ந்து 310 °செல்சியசு வெப்பநிலை வரை சூடாக்கினால் கீட்டீன் உருவாகும்:
- Er(CH3COO)3 → Er(OH)(CH3COO)2 + CH2=C=O
350 ° செல்சியசு வெப்பநிலையில் Er(OH)(CH3COO)2 அசிட்டிக் அமிலத்தை இழந்து ErOCH3COO சேர்மத்தையும் 390 பாகை செல்சியசு வெப்பநிலையில் Er2O2CO3 என்ற சேர்மத்தையும் இறுதியாக 590 பாகை செல்சியசு வெப்பநிலையில் Er2O3]] சேர்மத்தையும் கொடுக்கிறது.[30]
கரிம எர்பியம் சேர்மங்கள்
தொகுகரிமயெர்பியம் சேர்மங்கள் மற்ற இலந்தனைடுகளுடன் மிகவும் ஒத்திருக்கின்றன. ஏனெனில் அவை அனைத்தும் π பின்னிணைப்புக்கு உட்படுத்த இயலாமையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதனால் அவை பெரும்பாலும் அயனி வளையபெண்டாடையீணைடுகளுடன் (இலந்தனத்துடன் கூடிய சமகட்டமைப்பு) மற்றும் σ-பிணைக்கப்பட்ட எளிய ஆல்க்கைல்கள் மற்றும் அரைல்கள் ஆகியவற்றுடன் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில பல்லுருவத்தோற்றத்தோடும் இருக்கலாம்.[31]
மேற்கோள்கள்
தொகு- ↑ Yttrium and all lanthanides except Ce and Pm have been observed in the oxidation state 0 in bis(1,3,5-tri-t-butylbenzene) complexes, see Cloke, F. Geoffrey N. (1993). "Zero Oxidation State Compounds of Scandium, Yttrium, and the Lanthanides". Chem. Soc. Rev. 22: 17–24. doi:10.1039/CS9932200017. and Arnold, Polly L.; Petrukhina, Marina A.; Bochenkov, Vladimir E.; Shabatina, Tatyana I.; Zagorskii, Vyacheslav V.; Cloke (2003-12-15). "Arene complexation of Sm, Eu, Tm and Yb atoms: a variable temperature spectroscopic investigation". Journal of Organometallic Chemistry 688 (1–2): 49–55. doi:10.1016/j.jorganchem.2003.08.028.
- ↑ Aaron John Ihde (1984). The development of modern chemistry. Courier Dover Publications. pp. 378–379. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-64235-2.
- ↑ Adachi, Gin-ya; Imanaka, Nobuhito (1998). "The Binary Rare Earth Oxides". Chemical Reviews 98 (4): 1479–1514. doi:10.1021/cr940055h. பப்மெட்:11848940.
- ↑ Emsley, John (2001). "Erbium" Nature's Building Blocks: An A-Z Guide to Elements. Oxford, England, Uk: Oxford University Press. pp. 136–139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-850340-8.
- ↑ "Erbium Fluoride".
- ↑ Linna Guo, Yuhua Wang, Zehua Zou, Bing Wang, Xiaoxia Guo, Lili Han, Wei Zeng (2014). "Facile synthesis and enhancement upconversion luminescence of ErF3 nano/microstructures via Li+ doping" (in en). Journal of Materials Chemistry C 2 (15): 2765. doi:10.1039/c3tc32540g. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7526. http://xlink.rsc.org/?DOI=c3tc32540g. பார்த்த நாள்: 2019-03-26.
- ↑ 苏伟涛, 李斌, 刘定权,等. 氟化铒薄膜晶体结构与红外光学性能的关系[J]. 物理学报, 2007, 56(5):2541-2546.
- ↑ Yingxin Hao, Shichao Lv, Zhijun Ma, Jianrong Qiu (2018). "Understanding differences in Er 3+ –Yb 3+ codoped glass and glass ceramic based on upconversion luminescence for optical thermometry" (in en). RSC Advances 8 (22): 12165–12172. doi:10.1039/C8RA01245H. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-2069. பப்மெட்:35539388.
- ↑ Brauer, G., ed. (1963). Handbook of Preparative Inorganic Chemistry (2nd ed.). New York: Academic Press.
- ↑ Meyer, G. (1989). "The Ammonium Chloride Route to Anhydrous Rare Earth Chlorides—The Example of Ycl 3". The Ammonium Chloride Route to Anhydrous Rare Earth Chlorides-The Example of YCl3. Inorganic Syntheses. Vol. 25. pp. 146–150. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132562.ch35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13256-2.
- ↑ Edelmann, F. T.; Poremba, P. (1997). Herrmann, W. A. (ed.). Synthetic Methods of Organometallic and Inorganic Chemistry. Vol. VI. Stuttgart: Georg Thieme Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-103021-4.
- ↑ "The Crystal Structure of Yttrium Trichloride and Similar Compounds". J Phys Chem 58 (11): 940–943. 1954. doi:10.1021/j150521a002.
- ↑ "Crystallographic data for solvated rare earth chlorides". Acta Crystallographica 21 (6): 1012–1013. 1966. doi:10.1107/S0365110X66004420.
- ↑ Elements, American. "Erbium Bromide". American Elements (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
- ↑ 15.0 15.1 Perry, Dale L (2011). Handbook of Inorganic Compounds (2 ed.). Taylor & Francis. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439814628. பார்க்கப்பட்ட நாள் 14 December 2013.
- ↑ Elements, American. "Erbium Iodide". American Elements (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
- ↑ American Elements
- ↑ Samsonov, Grigorii (1965). High-Temperature Compounds of Rare Earth Metals with Nonmetals. New York: Consultants Bureau.
- ↑ 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P168~171. (2)氢氧化物
- ↑ "Erbium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ "System of Registries | US EPA" (in ஆங்கிலம்). Environmental Protection Agency. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). United States Environmental Protection Agency. 1980. p. 129. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ (in ru) Referativnyĭ zhurnal: Khimii︠a︡. Izd-vo Akademii nauk SSSR. 1979. p. 468. https://books.google.com/books?id=aynG2P7UPf8C&q=%D1%84%D0%BE%D1%81%D1%84%D0%B8%D0%B4+%D1%8D%D1%80%D0%B1%D0%B8%D1%8F+ErP. பார்த்த நாள்: 24 December 2021.
- ↑ Steglich, Patrick (21 October 2020). Electromagnetic Propagation and Waveguides in Photonics and Microwave Engineering (in ஆங்கிலம்). BoD – Books on Demand. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-83968-188-2. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ Милешко, Леонид; Гапоненко, Николай (21 February 2020). Основы процессов получения легированных оксидных пленок методами золь-гель технологии и анодного окисления (in ரஷியன்). Litres. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-04-234580-7.
- ↑ Лидин, Ростислав; Молочко, Вадим; Андреева, Лариса (2 February 2019). Константы неорганических веществ. Справочник (in ரஷியன்). Litres. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-04-077039-7. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ Registry of Toxic Effects of Chemical Substances (in ஆங்கிலம்). National Institute for Occupational Safety and Health. 1987. p. 2186. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ Choi, Mu Hee; Ma, Tae Young (2008). "Erbium concentration effects on the structural and photoluminescence properties of ZnO:Er films". Materials Letters 62 (12-13): 1835–1838. doi:10.1016/j.matlet.2007.10.014.
- ↑ G. A. M. Hussein (2001-08-28). "Erbium oxide from erbium acetate hydrate; formation, characterization and catalytic activity". Powder Technology 118 (3): 285–290. doi:10.1016/S0032-5910(00)00384-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0032-5910. http://www.sciencedirect.com/science/article/pii/S0032591000003843. பார்த்த நாள்: 2019-02-01.
- ↑ Greenwood and Earnshaw, pp. 1248–9