எறும்பு நச்சு
எறும்பு நச்சு (Ant venom) என்பது எறும்புகளால் வெளியேற்றப்படும் எரிச்சலூட்டும் நச்சுகளின் கலவையாகும். பெரும்பாலான எறும்புகள் விசத்தைத் தெளிக்கவோ, உட்செலுத்தவோ செய்கின்றன. பராமிசினே துணைக்குடும்ப எறும்புகளின் நச்சின் முக்கியப்பொருளாக இருப்பது பார்மிக் அமிலம் ஆகும்.
எறும்பு நச்சு | |
---|---|
எறும்புக் கடிக்கு மூன்று நாட்களுக்குப்பின் | |
சிறப்பு | அவசர சிகிச்சை மருத்துவம் |
எறும்பு கடி
தொகுதற்போதுள்ள எறும்பு இனங்களில் சுமார் 71% கொட்டும் இனங்களாகக் கருதப்படுகின்றன. சில துணைக் குடும்பங்கள் பரிணாம வளர்ச்சியின் காரணமாகக் கொட்டும் திறனை இழந்துவிட்டன.[1] சோலெனோப்சிஸ் (தீ எறும்புகள்), பேச்சிகாண்டிலா, மைர்மேசியா (புல்டாக் எறும்புகள்) மற்றும் பரபோனெரா (புல்லட் எறும்புகள்) போன்ற எறும்பினங்கள் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த வகைகளாகும். தீ எறும்புகளின் நச்சில் ஆல்கலாய்டு 95% சதவிகிதத்திற்கு மேலும் புரதம் 1% சதவிகிதத்திற்குக் குறைவாகவும் காணப்படும்.[2] கொட்டும் எறும்புகள் கடிக்கும் எறும்புகளைக் காட்டிலும் வித்தியாசமான நிலையை ஏற்படுத்துகின்றன. புல்லட் எறும்பு கொட்டுவது மிகவும் வேதனையான கருதப்பட்டாலும், நெருப்பு எறும்பு கொட்டுவது வலியுடையதாகக் காணப்படும்
நெருப்பு எறும்பு கடித்தலுக்கான முதலுதவியாகக் கடித்த இடங்களில் தடவப்படும் வெளிப்புற மருந்துகளுடன் உண்ணக்கூடிய மருந்துகளும் அடங்கும்.
- வெளிப்புற சிகிச்சைகள்: ஸ்டீராய்டு மேற்பூச்சு களிம்பு (ஹைட்ரோகார்டிசோன்), அல்லது கற்றாழை கொண்டது[3]
- வாய்வழி மருந்துகள்: ஆண்டிகிசுடமின்கள்
- துத்தநாக ஆக்ஸைடு அல்லது கலமைன் குழைமைத்தை பயன்படுத்துதல்.
கடுமையான மார்பு வலி, குமட்டல், அதிக வியர்வை, மூச்சு இழப்பு, கடுமையான வீக்கம், காய்ச்சல், தலைச்சுற்றல் மற்றும் மந்தமான பேச்சு உள்ளிட்டன எறும்பு கொட்டுதல்களால் ஏற்படும் பொதுவாக ஒவ்வாமை எதிர்விளைவுகள்;[4] சிகிச்சை வழங்கப் படாவிட்டால் இவை ஆபத்தானவை.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Touchard, Axel; Aili, Samira; Fox, Eduardo; Escoubas, Pierre; Orivel, Jérôme; Nicholson, Graham; Dejean, Alain (20 January 2016). "The Biochemical Toxin Arsenal from Ant Venoms". Toxins 8 (1): 30. doi:10.3390/toxins8010030. பப்மெட்:26805882.
- ↑ Fox E.G.P. (2014) Venom Toxins of Fire Ants. In: Gopalakrishnakone P., Calvete J. (eds) Venom Genomics and Proteomics. Springer, Dordrecht
- ↑ Bastiaan M. Drees (December 2002). "Medical Problems And Treatment Considerations For The Red Imported Fire Ant" (PDF). Texas A&M University. p. 4. Archived from the original (PDF) on 2011-06-09. பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
- ↑ "Insects and Scorpions". The National Institute for Occupational Safety and Health. 2008-10-22. பார்க்கப்பட்ட நாள் 2008-11-04.
வெளி இணைப்புகள்
தொகுவகைப்பாடு |
---|