எலா லோத்
மருத்துவர் எலா லோத் (Ela Lodh)(இறப்பு 19 சூலை, 2021) என்பவர் இந்திய மகப்பேறு மருத்துவர் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். இவர் 2020ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருதை 8 மார்ச் 2022 அன்று மரணத்திற்குப் பின் பெற்றார்.
தொழில்
தொகுஎலா லோத் இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள கோவாயில் பிறந்தார். மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணராக தகுதி பெற்ற இவர், திரிபுரா சுகாதார சேவையில் பணிபுரிந்து, இறுதியில் நிர்வாக இயக்குநரானார். இவர் 1990 முதல் 2000 வரை இத்துறையில் பதவி வகித்தார். திரிபுராவின் மஞ்சட்காமாலை அறக்கட்டளையின் நிறுவனராகவும் இருந்தார்.[1] இவர் 19 சூலை 2021 அன்றுகொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
தொகு2020ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதினை லோத், மார்ச் 8, 2022ஆம் அன்று அன்று மரணத்திற்குப் பின் விருதாகப் பெற்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடமிருந்து இவ்விருதினை, லோத்தின் மகன் பெற்றுக் கொண்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Awardees Nari Shakti Puraskar 2020" (PDF). Government of India. Archived from the original (PDF) on 8 March 2022. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
- ↑ "Dr. Ela Lodh to get Nari Shakti Puraskar-2020 posthumously" இம் மூலத்தில் இருந்து 2022-03-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220309234812/https://www.firstdespatch.com/read.aspx?news=5390.