எலிசபெத் (விவிலிய நபர்)

எலிசபெத் என்பவர் செக்கரியாவின் மனைவியும் திருமுழுக்கு யோவானின் தாயும் மரியாவின் உறவினருமாவார்.[1] இவர் புதிய ஏற்பாட்டின் லூக்கா நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார்.[2] இவர் கருத்தரித்து திருமுழுக்கு யோவானைப் பெற்றெடுக்கும் போது மகப்பேறு வயதைக் கடந்திருந்தார்.[3]


எலிசபெத்
Elizabeth (left) visited by Mary in the Visitation, by Philippe de Champaigne
நேர்மையாளர்
பிறப்புகி.மு. 1ஆம் நூற்றாண்டு
இறப்புகி.மு. 1ஆம் நூற்றாண்டு (அல்லது கி.பி. தொடக்கத்தில்)
ஏற்கும் சபை/சமயங்கள்
புனிதர் பட்டம்Pre-Congregation
திருவிழா
  • November 5 (Roman Catholic, Lutheran)
  • September 5 (Eastern Orthodox, Anglican)
பாதுகாவல்கருத்தரித்த பெண்கள்

விவிலியத்தில் எலிசபெத் தொகு

லூக்கா நற்செய்தி 1ஆம் அதிகாரத்தின் படி, எலிசபெத் "ஆரோனின் மகள்களில்" ஒருவராக இருந்தார். அவரும் அவரது கணவர் செக்கரியாவும் "கடவுளுக்கு முன்பாக நீதிமான்கள், ஆண்டவரின் எல்லாக் கட்டளைகள் மற்றும் நியமங்களின்படி குற்றமற்றவர்கள்" ( 1:5–7 ), ஆனால் மகப்பேறு இல்லாமல் இருந்தனர். இறைவனின் திருக்கோவிலில் இருந்தபோது (1:8–12 ), கபிரியேல் தேவதூதர் செக்கரியாவை சந்தித்தார்:

அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். வானதூதர் அவரை நோக்கி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத் உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் இறைவன் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்; தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார். — லூக்கா 1:13–15

தனக்கும் தன் மனைவிக்கும் வயதாகிவிட்டதால் தங்களுக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும் என்று செக்கரியா சந்தேகப்பட்டார். தேவதூதர் தன்னை கபிரியேல் என்று அடையாளப்படுத்திக் கொண்டார். செக்கரியா நம்பாததால், தன் வார்த்தைகள் நிறைவேறும் வரை அவர் "ஊமையாகவும், பேச முடியாதவராகவும் இருப்பார்" என்று கூறினார். பிறகு தனது கோவில் ஊழியத்தின் நாட்கள் முடிந்ததும், செக்கரியா தனது வீட்டிற்குத் திரும்பினார்.[4]

அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். “மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க இறைவன் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். — லூக்கா 1:24–25

கபிரியேல் தூதர் கலிலேயாவில் உள்ள நாசரேத்திற்கு அனுப்பப்பட்டார் [ லூக்கா 1:36 ]. அங்கு , யோசேப்பு என்பவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கன்னிப்பெண்ணான மரியா, தூய ஆவியினால் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பார் என்றும் அவர் இயேசு என்று அழைக்கப்படுவார் என்றும் அறிவித்தார். மேலும் மரியாவின் உறவினர் "எலிசபெத்" தனது ஆறாவது மாத கருக்காலத்தைத் தொடங்கியிருப்பதாகவும் மரியாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. பிறகு எலிசபெத்தை சந்திக்க மரியா "யூதேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்குச்" சென்றார்.[5]

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத், தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் இறைவனின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. இறைவன் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். — லூக்கா 1:41–45

மேற்கோள்கள் தொகு